சுதந்திரப் பறைவிட்டில் பூச்சென்றும்
அதை தாங்கும் செருகென்றும்
கத்தும் கனலென்றும்
கொதித்திடு
ரத்தம் அது ரத்தம்
என் ரத்தம் என் ரத்தம்..!

கொட்ட துணியார்
எனை எட்ட துணியார்-என்றும்
கெட்டி மனம் கொண்டேன்
இங்கு யுத்தம் அது யுத்தம்
மண் யுத்தம் அது யுத்தம்...!

முட்டி முனகற்றேன்
எனை தட்டி சுலுக்குற்றேன்
கட்டி புரண்டிட்டேன்
எங்கும் சத்தம் அது சத்தம்
உயிர் சத்தம் உயிர் சத்தம்...!

எண்ணம் எனதாயோ-அங்கு
செயலும் எனதாயோ
கற்பேன் உனதாக
அது தத்தம் படை தத்தம்
இது தத்தம் படை தத்தம்..!

ஓங்கி விஷமானோம்
உனை எதிர்த்தார் ரணமானார்
எம்மை உரசிற்றால்
அங்கு பத்தும் தீ பத்தும்
உனை சிக்கும் தீ பத்தும்...!

விட்டு விலகற்றேன்
எந்தன் வீதி போராட்டம்
சுதந்திர கொடியேற்றும்
எட்டு திக்கும் எட்டு திக்கும்
கோட்டை கட்டும் அது கட்டும்..!

துன்பம் தலைக்கொண்டு
எனை இறப்பு மடிக்கொண்டு
தட்டி பறித்தாலும்
என்றும் கொட்டும் பறை கொட்டும்
என் சுதந்திர பறை கொட்டும்...!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

Comments

  1. //கொட்டும் பறை கொட்டும்...
    என் சுதந்திர பறை கொட்டும்...//

    ரொம்பா நாளாச்சு தோழரே இது போன்ற கவிதைய படிச்சு

    ReplyDelete
  2. நல்லதோர் கவிதை ...தம்பி/அண்ணன்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி