பூரிப்புமுற்றும் வியர்த்து ஒழுக
கைகள் அதனை துடைக்க
நகங்கள் பல் இடுக்கில் மடிய
பாதங்கள் தரையை தேய்க்க
மனது வேகத்தை தாண்ட
எண்ணங்கள் அதிர்வலைகளை கிளப்ப
உணர்வுகள் தேடி கிடக்க
கண்கள் ஒற்றை திசையை நோக்க
வீல் என்ற சத்தத்துடன் ஓர் அழுகை...!!!
உச்சி இழுத்த மூச்சு
புயலாக வெளி பரவிற்று...
நொடிகள் கடக்கும் நேரத்தில்
வெள்ளை போத்திய மங்கை
கைதாங்கி வந்தாள்
அவன் இரத்தத்தால் உருவான ஓர் உயிரை..!!
அவன் கொடுக்கு மீசை
பாசமுத்தத்தால் சீண்ட
பிஞ்சு கால்கள் மார்பில் உதைத்திட்டதே.!!!
அவன் பூரிப்பை எங்ஙனம் சொல்வான்.!?

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.Comments

 1. வாழ்க்கையில் மிக அற்புதமான தருணம் அது.

  ReplyDelete
 2. உறைந்து விடத்தொன்றும் நிமிடம் அது!

  ReplyDelete
 3. அருமை... மிக அற்புதமான தருணம் அது...

  ReplyDelete
 4. என்னிடம் வந்த நர்ஸ் குழந்தையை எனக்கு காண்பித்து என்ன குழந்தை என்றால்? என்ன குழந்தை என்றால் என்ன என்று தான் மனம் தோன்றியது.. ஆனால் பலருக்கு ஆண் மகன் வேண்டும் என்று தான் மனம் நினைக்கிறது என்று அவளும் நினைக்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன்...

  ReplyDelete
 5. இனிய மதிய வணக்கம் பாஸ்,

  புதிதாய்ப் பூமியில் தவழப் பிறந்திருக்கும் மகவைக் கண்டு மனம் மகிழும் தந்தையின் உணர்வலைகளைக் கவிதை தாங்கி வந்திருக்கிறது.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!