Skip to main content

தொண்டர்களாம்..! ரசிகர்களாம்..!

உலகில் உள்ள அனைவரும் ஏதோ ஒன்றின் மீது பற்று கொண்டு இருப்பது ஒரு சாதாரண விடயம். பற்று வந்த பிறகு அதை பற்றி யாரேனும் தவறாக ஒரு வார்த்தை பேசிவிட்டால் கூட சட்டென்னு ஓங்கி வரும் கோபம் அந்த ஒரு நிமிடம் அவரை என்ன செய்கிறோம் என்பதை மறக்க செய்துவிடும். ஒரு மனிதன் தன்னிலை மறப்பது என்பது ஒரு மிக பெரிய செயல். அதனை பாசம் என்று சொல்வதா இல்லை அதற்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியவில்லை.
நான் இங்கே பேசிக்கொண்டிருப்பது ஒரு விசித்திரமான ஆரம்பமாக இருக்கலாம். நான் கூறியனவற்றிர்க்கு பாசம் என்று பெயர் இருந்தாலோ அல்லது பக்தி என்றாலோ அல்லது இன்னும் வேறு என்ன பெயர் சூட்டினாலும் நான் இங்கே அந்த பெயர்களை வைத்து குறிப்பிடபோவது ஒவ்வொரு கட்சி பின்னாலும் ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் தொண்டனை தான். இதற்கு முட்டாள் தனம் என்று பெயரும் சூட்டி நாம் அழைக்கலாம்.

ஒருவனுக்கான வழி தெரியவில்லையா..? அவனுக்கான வழியை அவன் தலைவனிடம் கற்றுக்கொண்டு அந்த வழியில் அவனது பாணியில் நடந்து போவது ஒன்று தான் சிறந்ததாகும். அதை விடுத்து என் தலைவன் சொல்கிறான் அவன் வழியில் நடப்பேன், அவனாகவே நடப்பேன் என்று சொல்வது கொஞ்சம் கேலி கூத்து சர்கஸ் கோமாளி செயலாகவே தோன்றுகிறது.

இங்கு நாம் இப்போது ஒரு சின்ன கம்பேரிசன் கொண்டு வரலாம் என்று எனக்கு தோன்றுகிறது. இந்தியாவில் விரைவில் பெரிய ஆளாக ஆக வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டியது ஒன்று அரசியல்வாதி ஆகி அறிக்கை விட வேண்டும், இல்லை ஒரு மாஸ் ஹிட் படத்தின் ஹீரோவாக வேண்டும், அல்லது முதல் ஆட்டத்திலே அதிரடி ஆட்டத்தில் சென்சுரி போடும் கிரிக்கெட் வீரராக வேண்டும்.

எங்கே எவர் இந்த மூன்றில் ஒன்றை செய்துவிடமாட்டார்கள் என்று ஒரு கூட்டம் கண்ணில் விளக்கு எண்ணெய்யை ஊற்றிக்கொண்டே திரியும். இப்படி ஏதேனும் நடந்துவிட்டால் அங்கே இந்த கூட்டத்தில் இருந்து நால்வர் எழுந்து ஒரு சத்தம் எழுப்புவர் அடுத்த நாள் ரசிகர் அல்லது தொண்டர் கூட்டம் ரெடி. இதுதானா ஒருவர் மீது ஈர்ப்பு வரவோ அல்லது ஒருவரை தலைவர் என்று ஏற்கவோ அற்று ஒருவர் வழி பின்பற்றுதலுக்கோ வேண்டிய தகுதி..?

அடித்து சொல்கிறேன்.. ஒவ்வொரு தொண்டனும் ரசிகனும் ஒரு ஐந்து நிமிடம் உக்கார்ந்து யோசித்தால் போதும். அங்கே எவனும் தொண்டனாகவும் இருக்கமாட்டான், இருமாப்பு பிடித்து ஒருவனும் தலைவனாகவும் இருக்க மாட்டான்.

சரி.. இந்த சாதாரண விடயத்தை விட்டுவிடுவோம். கொஞ்சம் இதற்குள்ளவே யோசித்து பார்ப்போம்...! இந்த விளையாட்டு வீரனின் ரசிகன் என்பவன் மற்ற இருவரைவிட சற்று வித்யாசமானவன் தான். போட்டியில் அந்த விளையாட்டு வீரர் சரியாக பந்தை அடிக்கவில்லை என்றால் இவன் அந்த வீரரின் வீட்டுக்கண்ணாடியை உடைக்க மறக்கமாட்டான். மற்றபடி பிறந்தநாள் வந்தால் பூஜை தவிர்த்து பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் நடக்காது.

ஒருவன் காலையில் எழுந்து காலை வைத்து நடப்பது முதல் இரவில் காலை நீட்டி தூங்கும் வரை அங்கு அரசியல் இருக்கிறது. அதனால் அந்த அரசியலுக்கு துணை போகும் ஒவ்வொரு தொண்டனையும் நான் குறை சொல்வது சரியானதாகுமா என்று தெரியவில்லை. ஆனால் இங்கு சொல்லி தான் ஆகவேண்டும். இங்கு இருக்கும் ஒவ்வொரு தொண்டனும் ஒரு அலுவலகத்தில் வேலை செய்யாமல் காசு வாங்கும் ஒரு ஊழியன் போல தான் என்னால் பாவிக்க முடிகிறது.

அரசியல் என்பது பொது மக்களுக்கு நல்லது செய்ய வந்த ஒன்று. சினிமா என்பது பொதுமக்களை மகிழ்விக்க வந்து ஒரு பொழுதுபோக்கு. ஆனால் இக்காலத்து சினிமா ரசிகன் செய்யும் நல்லதை கூட என்னால் ஒரு அரசியல் கட்சியின் தொண்டன் செய்து பார்க்க முடியவில்லை.

ஒரு தொண்டன் என்னும் பெயரில் இருந்தால் அவனோடு மேல் பதவியில் அந்த கட்சியில் இருப்பவரை முன்னால் புகழ வேண்டும் பின்னால் இகழ வேண்டும். மேடையில் அயராமல் கட்சிக்காக உழைக்க வேண்டும். சுயபுத்தி இல்லாமல் கட்சி மேலிடம் சொல்வதை கேட்கும் நபராக இருக்க வேண்டும். அவ்வபோது தேர்தலின் போதும் ஏதேனும் தற்பெருமையை அடித்துக்கொள்ள வேண்டிய சூழல் தோன்றும் போது தெரிந்தோ தெரியாமலோ அங்கு சும்மா தெருவில் போய்கொண்டிருப்பவரை கூப்பிட்டு நல்லது செய்ய வேண்டும். இதெல்லாம் தான் ஒரு கட்சி தொண்டனின் தகுதியாக தெரிகிறது. இதை நிர்ணயித்த அதிபுத்திசாலி மேதையை தான் தேடிக்கொண்டிருக்கிறேன்..!

பொழுதுபோக்குக்கான ஒன்றின் மீது ஒற்றை மனிதர் கீழ் வரும் கூட்டம் செய்யும் நல்லதை கூட ஒரு கட்சியின் கீழ் வரும் கூட்டம் செய்ய தவறுகிறது என்று நினைக்கும் போது அங்கே நல்லது செய்துகொண்டிருக்கும் ஒருசில கட்சி தொண்டர்கள் கூட தலைகுனிந்து செல்லவேண்டிதான் வருகிறது.

தேர்தலின் போது குழந்தை குட்டிகளை விட்டுவிட்டு ஊர் ஊராக திரியும் ஒவ்வொரு தொண்டன் கனவான்களே..! உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் ஒரு தலைவன் என்பதை மறந்துவிட்டீர்களா..? உங்களுக்கு கீழ் உங்கள் குடும்பம் என்னும் தொண்டர் கூட்டம் கன்னத்தில் கை வந்து ஏங்கி கொண்டிருப்பதை மறக்குறீரா..?

வீட்டை மறந்து உணவை மறந்து சுகத்தை மறந்து எதை நீங்கள் செய்யும் தேர்தல் பணியில் பார்த்துவிட போகிறீர்கள். ஒன்று உண்மையான தொண்டனாக இருந்தால் முதலில் உன்னை நம்பினோர்க்கு நல்ல தலைவனாய் இருத்தல் வேண்டும். உன் சகத்தார்க்கு நல்ல நண்பனாக இருத்தல் வேண்டும். பின்பு தான் நீ ஒருவன் வழியை நாடும் தொண்டனாக வேண்டும். முதல் தகுதியே அற்ற பலர் தொண்டன் என்று பிதற்றிக்கொண்டு செல்வாக்கு மற்றும் ஓசி பிரியாணிக்காக திரிவதை பார்க்கும் போது.. ஒரு பொட்டலம் பிரியாணி மற்றும் குவாட்டர் கட்டிங்கில் கேரளத்தின் அடிமாடிகூட செல்லாத இடத்துக்கு தான் கட்சி தொண்டன் என்னும் பெயரில் இவர்கள் எல்லாம் போய்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் சிரிப்பு சிரிப்பாக தான் வருகிறது.


தமிழகத்தில் இருக்கும் ஒரு காமெடி கட்சியின் தொண்டன் அந்த கட்சியின் கொடியை வண்டி முன் செருகி கொண்டு வேகமாக வீதியில் சென்றுகொண்டிருக்கையில் பார்க்கும் சாதாரண கூட்டம் அவனை நக்கலடித்து, கேலி செய்துகொண்டிருந்தன. அடப்பாவி தொண்டா..! உன் தலைவன் செய்யும் கேலி செய்கைகளுக்காக நீ காட்சி பொருளாக நிற்க போகிறாயா..? விளங்கவில்லையப்பா உங்கள் எண்ணங்களும் தெளிவுகளும்.


தொண்டன் என்று சொல்லிக்கொள்ளுங்கள். ரசிகன் என்று சொல்லிக்கொள்ளுங்கள். கடைசி வரை அதற்கு அர்த்தம் என்ன என்பதை உணராமலே மட்டுறுத்தப்பட்ட மதியோடு வாழ்ந்து மடிந்துவிடுங்கள். சிறக்கட்டும் உங்கள் தேர்தல் பணி..!

வாழ்க ஜனநாயகம்..! வாழ்க தொண்டர் பணி..!


------------------
தம்பி கூர்மதியன்.

Comments

 1. தொண்டனோ ரசிகனோ விழித்துக் கொண்டால், அவனை சிறு பதவி கொடுத்து தலைவனாக்கி விடுவார்கள்... அப்புறம் அவன் பின் நாலு தொண்டன்... உதாரணம்:காங்கிரஸ் கட்சி

  ReplyDelete
 2. என்னங்க நீங்க இப்படியெல்லாம் சொல்லி நம்ம தொண்டர்கள் முழிச்சிகிட்டா எப்படிங்க கட்சி நடத்துதுறது?

  ReplyDelete
 3. கனிமொழிய விடுதலை யாகனும் அதனால காங்கிரஸ் கூட கூட்டணி நீடிக்கும். இப்போ கனிமொழிய விடுதலை செய்யலை அதனால “கூடா நட்பு கேடாய் முடிந்தது” ! அப்போ காங்கிரஸ்கூட கொஞ்சி குலாவிய தொண்டன் இன்று பரம எதிரி! தமிழ் நாடு ரஸ்சியா கண்டத்தை சேர்ந்தது என்று தலைவர் சொல்லிவிட்டால் சற்றும் யோசிக்காமல் ஆமாம் சாமி போடும் இந்த தொண்டர் கூட்டம் இருக்கும் வரை நம் நாடு உருப்படாது தான். (எனக்கு அரசியல் பேசதெரியாது என முன்கூட்டியே கூறிக்கொள்கிறேன், என் நண்பன் அரசியல் பேசுகிறேன் என்று காமெடி பண்றானு நீங்கள் எழுத வேண்டி இருக்காது என நினைக்கிறேன்)

  ஆமா நீங்க எந்த கட்சி ? ...........

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…