எழுத்துப் புரட்சி


ஜகட ஜகட ஜக
தித்தோம் தித்தோம்..!
உனக்குள் இருக்கும் தீ
பொசுங்கி சிரிக்குதடா..

அகிலம் அகிலமென
குதித்தோம் குதித்தோம்..!
உந்தன் எண்ணம் எனை
எட்டி நகைக்குதடா..

வெட்டி திரித்துடும்
செடிதான் நீயோ..!?
முளைக்க பிறந்த
விதையன்றோ நினைத்தேன்...!

தகட தகட தக
தத்தோம் தத்தோம்..!
உனது வீரம் வெறும்
கானல் தானோ...!?

ஓங்கி ஓங்கி எழும்
கைகள் எங்கே..?
உணர்வை சீண்டி எழ
உரைக்க மறுக்குதடா..!

தண்மை தண்மை கொண்டு
தடைகள் சுமந்தாய்
உன் கண்கள் நரம்பு
இங்கே சிவக்க மறுக்குதடா...!

துகல துகல தினம்
துதித்தோம் துதித்தோம்..!
கண்ட கனவு எல்லாம்
கரைந்து கசியுதடா..!

சுயத்தை மறந்து நீ
சுரமதை நாட
ஆணை துறந்துவிட்ட
பேடியாய் அறிவாய்..

இன்பம் என்று நீ
சொல்லும் அனைத்தும்..
உன் இருண்ட கண்களின்
பார்வை அறியடா...

கொதித்து எழுந்திட
மறந்தாய் நீயோ..!?
அழிவு நோக்கிடும்
குழந்தையிடம் கற்பாய்..

டுகுடு டுகுடு டுகு
தகுடாய் தகுடாய்...!
உந்தன் வீரமதில்
பொதிந்து அழிந்ததடா...

செத்து மடிந்திட
இதுயென்ன மரமா.!?
எந்தன் மனித கூட்டம்
அலன்று திரியுதடா..

எந்தன் ஆயுதமதை
எடுத்தே விட்டேன்..
உலக அநீதியை
எழுத்தால் வெல்வேன்...!

ஜகட ஜகட ஜக
தித்தோம் தித்தோம்..!
எந்தன் எழுத்து புரட்சி
தொடங்கி பரவுதடா..

தகட தகட தக
தத்தோம் தத்தோம்..!
என்னை தடுத்திட
இங்கு எவனடா இருக்கான்..?

சுருக் சுருக் சுக
சுட்டார் சுட்டார்..!
என்னை தொடர்ந்து
எம் பின்னால் வாரீர்..!

அகண்ட அகண்ட
உலகம் பாரீர்..!
அமிலம் கலந்த
என் எழுத்தை காணீர்..!

வெகுண்டு வெகுண்டு
இங்கு எம்மதாய் வாரீர்..!
எட்டி மிதிப்போம்
அங்கு எம்மது எழுத்தால்...!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

Comments

 1. அடப்பாவி ஆஃபிஸ்ல ஒரு டெஸ்ட் வச்சதுக்கு இப்படி பொங்குற? என்ன பையன் நீ?
  //செத்து மடிந்திட
  இதுயென்ன மரமா.!?
  எந்தன் மனித கூட்டம்
  அலன்று திரியுதடா//

  ?????

  ReplyDelete
 2. பாடல் வரிகள் வீரியம் மிக்கதாய் உள்ளன நண்பரே...

  ReplyDelete
 3. படிப்பவன் நரம்புகள் புடைப்பது உறுதி, நரம்புகள் இருந்தால்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!