செய்கை

அனந்த வேஷங்கள்
அகம் புறம் கோணங்கள்
திரிந்த தேசங்கள்
தவ தவயென தவளைகளாம்..!

மிதியது சிரத்தினில்
கொடியத்தை அவிழ்த்தலும்
அலன்றேன் அகன்றேன்
அவ்வாறே சிறத்தேன்..!


இகழறியா யான்
என்றும் புகழ்சரியா
வரம் கொரிய வேண்டி
இப்பிரபஞ்சம் அடைந்தேனோ..?

என்சொல்லி பிறவிபேண.?
என்செய்து வாழ்க்கை வாழ.?
என்னை என்னவாக எண்ண..?

கேள்விகள் பலவாம்
இகழ்ச்சியாதலும் புகழ்ச்சியாதலும்
என்னை ஆள மறக்கையிலே..!
எனை சூழ துடிதுடித்து துவளுகையில்
கைஉயர்த்தி நகர்ந்திடுவேன்
யானும் என் செய்கையும் வேறென..!

ஆனால்,
என்னை அறிய நினைத்தாரோர்
அறியவேண்டி அகலுகையிலே
என் செய்கையுண்டே மதிப்பிடுவார்...!

குழம்பிவிட்டேன்...
யாதும் என்செய்கையும் ஒன்றோ என?
இதை எண்ணுவதும்
என் செய்கையின் செயலன்பேன்
பிறார் எந்தன் செயலென்பார்...!

உண்மையாதலை உணர்ந்தேன்..

இன்று,
செய்கையில் மனமிடுவதே
என் முழு செய்கையாகிவிட்டது..!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

Comments

 1. என்னை அறிய நினைத்தாரோர்
  அறியவேண்டி அகலுகையிலே
  என் செய்கையுண்டே மதிப்பிடுவார்...!

  அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. என்னவோ சொல்ல வரீங்க, அருமையான சொல்லாடலுடன்...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!