மழை


கொட்டும் தரங்களிலே
தினம்,
கீதச் சுரங்கண்டேன்..!

வீதி நடந்திடுவேன்
அவள்.
என்னை தழுவிடுவாள்...
எட்டி நகர்ந்திடுவேன்
கால் தொட்டு பணிந்திடுவாள்..
கைகள் நீட்டிடுவேன்
அதை,
சுத்தி சுகம் தருவாள்...!

உச்சி கை வருடி
நெற்றிவழிப் பற்றி
கண் கருவிழியோரம்
மூக்கோரம் முகம்பொதித்து
உதட்டு முத்தமிட்டு
தொண்டை வழியூடி
உள்ளுக்குள் நித்தம்
நொடி நொடியாய் சுகம்
அவள் தழுவிய சமயமுழுதும்...!

அந்நெகிழ நொடியாவும்-இன்று
நித்தம் தினம் நித்திரையிலே..!

அவள் அன்புண்ட சுகமிழந்தேன்
என் ஆற்றாய பணிக்கிடையில்
எட்டி நகர்கின்றேன்
அவள் என்னை அடைகையிலே
சுகந்தவிக்கும் மனமிடையே
என் பணிச்சுமையின் தடை நடுவே
அவள் என்னை தழுவுமுன்னே
தழுவிக்கொள்கிறான்....
தந்தை எனக்கு அளித்த
மழைச்சட்டை வில்லனவன்..!

இழந்து தவிக்கிறேன்...
என் மழலை மழைக்காதலியை..
என் 'கார்ப்ரேட்' உத்தியோகத்தால்..!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

Comments

  1. வெள்ளை ஹலோஜென் விளக்கு வெளிச்சத்தில் கொட்டும் மழை நின்று, சிறு தூறலாய் காற்றில் அலைந்த படி வரும் துளிகளை பார்க்க இன்றும் ஓடுவேன், மழை நின்று விட்ட அந்த வினாடி துளிகளில்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!