பக்தி


செக்காய் சிவனாடி
என் சிந்தை செயலாடி
நித்தம் தினம் நித்திரையிலும்
சொக்கி நீங்காத பரம்பொருளே..!

ஜடாமுடி அந்திமுகமான்
அவனடி என் பணியான்..!
தத்தி தத்தி சிசுவாவேன்
சிவனடியாய் நானாக...!

கங்கை தலைமேலே
அவன் என்னை சுரந்திடுவான்
பிடறிட்ட முடியோடு
யான் அவனாக கசிந்திடுதால்...!

சீறும் புலியாக யான் பிறப்பின்..
அவன் மேனி பற்றிடுவேன்
அற்ப மனிதனாய் யாம் ஜனித்தோம்
இங்கு அவனதாய் அடிபணிந்தேன்..!

உடுக்கை ஒலி சத்தம்
அவன் வலக்கை பிடியாகும்
எந்தன் வலியாதும்-நினைப்பேன்
அவன் இடுக்கை அடியானேனென..!

ஒற்றை காற்சிலம்பு யானேவேன்
அவன் பாதம் என்றடைய
மாற்று சிந்தை கொண்டிலன்
என்றும் யான் அவனது அடியானே..!

உயிர் உயிராக உன்னத சிவனானோன்...
என் பற்று அவனடியாம்
எந்தன் உறவு என்னடியாம்..!
என் சிந்தை அவனுமதில்
என் குடும்பம் வீதி மதில்......

சித்தம் தெளிவுற்றேன்.....

எண்ணம் அவன் கொண்டு
திண்ணம் என் உழைப்பு
அவனற்று வாழ்க்கையாதல்
சிறப்பென்று உணர்கறிந்தேன்...!

செயல் பக்தியற்ற
சிந்தை பக்தியே
என் உணர் பற்றி ஊண்டுவிட்ட
உண்மை நிலையறிந்தேன்.......!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..