Posts

Showing posts from December, 2011

நான்

Image
இதுவரை எதையும் இழக்கவில்லை. இனி இழப்பதற்கென்று எதுவுமில்லை…! வாழ்க்கை ஓட்டத்திலே எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் எந்தன் பாதையை தேர்ந்தெடுத்து பயணித்துக்கொண்டிருக்கும் என்னை நானே ஒரு காட்டாறு என்று சொல்லிக்கொள்வேன். நிலை தடுமாறி எந்தன் பாதை மாறும் சூழல் வந்தால் என்னைவிட கேவலமாக எனை வஞ்சிக்க இன்னொருவன் பிறந்துதான் வரவேண்டும்.

சாதிக்க நான் பிறக்கவில்லை. சாதனை எனை அடையவே பிறந்திருக்கிறது. என்னை விட அதிகமாக தற்பெருமை பேசிக்கொள்ள ஒரு மூலையில் கூட எவனும் ஜீவித்திருக்க மாட்டான். ஆனால், என்னால் முடியும் என்பதை நானே சொல்லாவிடில் வேறு யார் தான் அதை சொல்லிட முடியும்..? இவ்வாறு நான் பேசுவது கூட தற்பெருமை என்னும் பொருள் கொள்ள முடியும். இதை பார்க்கும் பார்வை என்று ஒதுக்கிவைத்திட முடியுமா? உங்களால் முடியாமல் இருக்கலாம்.. ஆனால் என் பாதைக்கு முட்டுக்கட்டையாக்கும் உங்கள் எண்ணங்களை பார்க்கும் பார்வை தான் காரணம் என்று என்னால் ஒதுக்கி வைத்திட முடியும்..! சிலர் என்னால் முடியும் என்ற தலைக்கணம் எனக்கு உண்டு என்று வாதிடுவர். என்னிடம் நீங்கள் அவ்வாறு வாதிட வேண்டிய அவசியமில்லை. என்னால் முடிந்ததை கொஞ்சம் மெருகே…

இழந்தேன் அல்லேன்.......!

Image
இழப்பு... எல்லாவற்றறையும் இழந்த ஒரு தவிப்பு. இன்னும் இழக்க ஒன்றுமில்லை. என் தேகத்தோடு ஒட்டி இருக்கும் அழுக்கும், அதனூடு கலந்திருக்கும் என் தையல் சட்டைக்கும் பின்னால் என்னோடு பிறந்ததிலிருந்து ஒட்டிக்கொண்டிருக்கும் என் உறுப்புகள் மட்டுமே இப்போது என்னுடன் மிஞ்சியிருக்கிறது.


வாழ்க்கை பாதையில் என்ன கொண்டு பயணிக்க தொடங்கினோம் இங்கு இழந்துவிட்டோம் என்று கூக்குரலிட என்று ஒரு நிமிடம் யோசிக்க தோன்றும். ஆனால் இழந்துதான் போனேன். நான் தொடங்கும் போது எதையும் கொண்டுவரவில்லை தான். ஆனால் எனது பயணத்தின் போது எனது அயராத உழைப்பையும், எனது வேகத்தையும் அதீதமாக செலவு செய்து உருவாக்கிய ஒவ்வொரு செதில்களையும் இழந்திருக்கிறேன். 
போகும் போது நான் எதையும் கொண்டு செல்ல போவதில்லை தான். ஆனால், நான் போகும் போது விட்டுசெல்ல வேண்டியன ஒன்று கூட என்னிடத்தில் இல்லையே.!!  உறவுகளும் என்னை சுற்றி இல்லை-சுயநல உலகமாகி போனதில் யாருக்காக எதற்காக எதை விட்டு செல்ல போகிறாய் என்று என்னை தூரத்தில் ஒரு குரல் கேள்வி கேட்கிறது.
சுற்றி சிரிக்கிறேன். என்னை கேட்கும் கேள்வி கூட தொலைவில் இருந்து தான் வருகிறது. இங்கு கூட கேள்விக்கான உடைமையை …

அடிமை

Image
கூடுகள் கலைந்த தேனீக்கள்
சுர்ரிட்டு சரீரம் சேர் பண்பு-இனம்;
வீரிடும் விந்தை நொடி சேராதோ..!?

யாம் கொட்ட குனியார் ; அவர்
எம்மை எட்ட நினையார்-மார்த்தட்டும்
கூவல் என்னில் எழுவாதோ..!?

சிந்தை செங்கூடே;நொவ்வலாம்;
தினம் செம்மை கூர் தேடல்
பயணம் புரட்சி தேடுதோ..!?

வாழ்க்கை.........

செக்கூடு மாடாய்
ஒற்றை வட்டமாக்கி ஓடிகொண்டு;
வீரம் மங்கி மாண்டுவிட்டு மார்பு,
பசியை அள்ளி புசித்திவிட்ட வயிறு,
உள்ளெலும்பு வெளிச்சிரிக்கும் தோற்றம்,
மறைதல் இல்லா வெளிக்கொணர்ந்தார்
ஒட்டிக்கொள்ள துணியில்லா ஆண்மகனார்.....!
கோவணம் சொத்தாய் பேணல் வாழ்க்கை...

வறுமையென்னும் வஞ்சகமற்ற சொத்து
அள்ளி முடியும் சிக்குண்ட கூந்தல்
செருகமுடியா அரைவட்டி சீலை
புசிக்கும் நாய்களின் இரையாகா
மாண்டுவிட்ட மாண்பிகள் இடையே
மிச்சொன்று சொச்சமாய்; மரண துடித்துடிப்பில் ;
கொரீர கொடுஞ்சேனை எச்சைசேரா
இச்சை துறந்த எம் இன மகளீரோடு
விடுதலை புரட்சி தேடும்
யாம் புரட்சியாளனே............!

நினைவுகள் ஓடமாக உள்ளுக்குள்ளே
ஊசலாடி உலாவட்டும்............!
புடைத்த நரம்பின் புலனறியாதார்
வெடிக்கும் கோப கனலின்
எச்சங்களை புசிக்க தயாராகுங்கள்;
கோவண இடுப்பும்-உம் வீரத்த…

கனவு

Image
தொட்ட தொட தொடக்கும்-எனை
சுற்றி நரம் ருசிக்கும்..! கைகள்
தொடுமனைத்தும்   எங்கும்
எச்சில் அலங்கரிக்கும்...!

விட்டம் இருட்டாக- தினம்
வீதி மதியாக...
இச்சை இச்சை நரிகள் சூழ்
விட்டம் வீடு பிரபஞ்சம்-அதை
விலகும் வீதி அடையோன்..!

விலையறியா புன்னகை கொரிக்கும்
என் நாட்டு மாதர் யாவும்- புன்னகை
விலை தேடும் கொச்சை நரிகளிடம்
ஏனோ விந்தை கண்ணீரை கசிந்தாரோ...!

சட்டென சடையருந்த இருட்டு 
வெற்று கூடாரம் எங்கும் அழுகை..!
ததும்பல் ததும்பல் யாவும் சிதும்பல் 
அந்த கூக்குரல் கலந்தெழு 
நிசப்தம் அறியாதொரு 
நித்திரை கலைந்தெழுகையில்
எல்லாம் மாயை சாயல் 
எனை மாண்டிட துடித்த கனவின் சத்தம்...!


இன்னும் ஓயாமல் உள்ளுக்குள்ளே.......! 
கனவுக்கு உயிர் வேண்டாது 
கனவாகிட வேண்டிக்கொண்டு 
மெய்க்காணா உணர்வோடு 
இன்னும் உள்ளுக்குள்ளே 
உண்மை அற்ற அறப்போராட்டம்.........!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.