கனவுதொட்ட தொட தொடக்கும்-எனை
சுற்றி நரம் ருசிக்கும்..! கைகள்
தொடுமனைத்தும்   எங்கும்
எச்சில் அலங்கரிக்கும்...!

விட்டம் இருட்டாக- தினம்
வீதி மதியாக...
இச்சை இச்சை நரிகள் சூழ்
விட்டம் வீடு பிரபஞ்சம்-அதை
விலகும் வீதி அடையோன்..!

விலையறியா புன்னகை கொரிக்கும்
என் நாட்டு மாதர் யாவும்- புன்னகை
விலை தேடும் கொச்சை நரிகளிடம்
ஏனோ விந்தை கண்ணீரை கசிந்தாரோ...!


சட்டென சடையருந்த இருட்டு 
வெற்று கூடாரம் எங்கும் அழுகை..!
ததும்பல் ததும்பல் யாவும் சிதும்பல் 
அந்த கூக்குரல் கலந்தெழு 
நிசப்தம் அறியாதொரு 
நித்திரை கலைந்தெழுகையில்
எல்லாம் மாயை சாயல் 
எனை மாண்டிட துடித்த கனவின் சத்தம்...!


இன்னும் ஓயாமல் உள்ளுக்குள்ளே.......! 
கனவுக்கு உயிர் வேண்டாது 
கனவாகிட வேண்டிக்கொண்டு 
மெய்க்காணா உணர்வோடு 
இன்னும் உள்ளுக்குள்ளே 
உண்மை அற்ற அறப்போராட்டம்.........!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

Comments

 1. ம்ம் தெருவில் புணரும் நாய்க்கும், நமக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.

  உயிர்தானே கனவானது ?

  (ஆமா நீ இன்னும் பிளாக்கரை விட்டு போகலையா? :-()

  ReplyDelete
 2. ஏலே தம்பி கவிதை நல்லா இருக்கு.... அப்பப்ப இந்தப்பக்கமா எட்டிப்பாக்குற?

  ReplyDelete
 3. மன உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகள் பூத்தவனின் மனதில் என்னவாயிருந்திருக்கும் என்ற கேள்விகளை எல்லாம் உடைத்து விட்டு ஏதேதோ உணர்வுகளைப் பரவவிடுவதை தவிர்க்க இயலவில்லை...!

  தொடர்ந்து எழுது தம்பி....!!!!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முதல் நாள் பள்ளி - தகப்பனாகிய நான் எழுதும் *2

இவருக்கு நான் இதை சொல்லியே ஆகணும்!!

கானல் தேடல்