அடிமை


கூடுகள் கலைந்த தேனீக்கள்
சுர்ரிட்டு சரீரம் சேர் பண்பு-இனம்;
வீரிடும் விந்தை நொடி சேராதோ..!?

யாம் கொட்ட குனியார் ; அவர்
எம்மை எட்ட நினையார்-மார்த்தட்டும்
கூவல் என்னில் எழுவாதோ..!?

சிந்தை செங்கூடே;நொவ்வலாம்;
தினம் செம்மை கூர் தேடல்
பயணம் புரட்சி தேடுதோ..!?

வாழ்க்கை.........

செக்கூடு மாடாய்
ஒற்றை வட்டமாக்கி ஓடிகொண்டு;
வீரம் மங்கி மாண்டுவிட்டு மார்பு,
பசியை அள்ளி புசித்திவிட்ட வயிறு,
உள்ளெலும்பு வெளிச்சிரிக்கும் தோற்றம்,
மறைதல் இல்லா வெளிக்கொணர்ந்தார்
ஒட்டிக்கொள்ள துணியில்லா ஆண்மகனார்.....!
கோவணம் சொத்தாய் பேணல் வாழ்க்கை...

வறுமையென்னும் வஞ்சகமற்ற சொத்து
அள்ளி முடியும் சிக்குண்ட கூந்தல்
செருகமுடியா அரைவட்டி சீலை
புசிக்கும் நாய்களின் இரையாகா
மாண்டுவிட்ட மாண்பிகள் இடையே
மிச்சொன்று சொச்சமாய்; மரண துடித்துடிப்பில் ;
கொரீர கொடுஞ்சேனை எச்சைசேரா
இச்சை துறந்த எம் இன மகளீரோடு
விடுதலை புரட்சி தேடும்
யாம் புரட்சியாளனே............!

நினைவுகள் ஓடமாக உள்ளுக்குள்ளே
ஊசலாடி உலாவட்டும்............!
புடைத்த நரம்பின் புலனறியாதார்
வெடிக்கும் கோப கனலின்
எச்சங்களை புசிக்க தயாராகுங்கள்;
கோவண இடுப்பும்-உம் வீரத்தை
கோவணாண்டி ஆக்கிடும்; தெரித்திடுங்கள்;
பற்றிக்கொண்ட தீக்குச்சி
பகைமையை பறைசாற்றி
எம் அடிமை அழித்தெழ சீறிடும்;அடங்கிடுங்கள்;

சொல்வன உன்னில் செரிக்குமுன்னே
எம் இனமிடம் ஊன்றி முளைத்தெழுந்திடும்
எம்மில் ஒரு சுதந்திரமும்
உன்னில் ஒரு கோரணானும்
முளைத்தெழுவான்.......! காத்திரு....!
வெகுண்டு வருகிறோம்........!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

Comments

 1. கும்முன்னு இருக்கு வாத்தியாரே !! செம்ம

  ReplyDelete
 2. ///பற்றிக்கொண்ட தீக்குச்சி
  பகைமையை பறைசாற்றி
  எம் அடிமை அழித்தெழ சீறிடும்;அடங்கிடுங்கள்;////


  அடிமைத்தளை அறுத்தெறிந்திட
  அழைக்கும் அருமையான கவிதை நண்பரே.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முதல் நாள் பள்ளி - தகப்பனாகிய நான் எழுதும் *2

இவருக்கு நான் இதை சொல்லியே ஆகணும்!!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..