Posts

Showing posts from January, 2012

நீ எந்தன்...

Image
மயக்கும்
மதி மறக்கும்..
நினைக்க
சுடர் விரிக்கும்...!
நீயாய் நானல்லா
உனை நீங்கிட துணியேனே...!

சொப்பனங்கள்
நீயாய் எனை தீண்டாது..
முன்னே,
சொக்கி கண் முழுதும் நீதானே..!

எத்தனை ஏச்சு...
எத்தனை காயம்...
எத்தனை கோபம்....!
எல்லாம் உள்ளே புதையலாய்
எட்டி நகைத்து சிரிக்கிறாய்....

வாஞ்சை மொழி வள்ளல் நீயோ.?
உனை சீண்டி சிரித்தாலும்
அன்பை வாரி தருகிறாயே..!

அகன்றேன் அல்லேன்...
உனை என்றும் அகலேன்..!
வாழ்வோடு இயற்றியம்ப தவிக்கையிலும்
உனை பற்றி துடிக்கும் கண்ணீராய்
உன்னில் என்றும் நானாக
உன்னை என்னுள்ளே புதைத்துக்கொண்டு
உன்னில் யாம் புதையுண்டு போவோம்....!

தாய்மண்ணே...!
உன்னை எவர் பற்றிட துடித்தாலும்
எட்டி வரும் சினம்கொண்டு
அவர் சிரம் தாழ செய்யும்
உனக்காய் என்னுள்ளே பற்றிருக்கும் கரம்...!

நீ அலன்றிடும் சூழல் கண்டோ.?
அச்சூழலதும் அகற்றிடுவோம்.!
நீ வெறுத்திடும் பகை அறியோ
அப்பகைமைக்கும் பாடம் கற்பிப்போம்..!

எனை நீ தாங்கும் நொடியாதும்
எம்மையும் சேர்த்து உம்மையாகி
உம்மை எம்மில் சுமந்திட
இப்பிறவி பிறப்பித்திருக்கேன்...!

எனை முழுதும் சுமந்து
உன்னை எனக்காக அற்பணித்தாய்..!
உனை நினைக்கும் நொடியாதும்
சொக்கி நீங்காது…

கோபமென்னும் மாயை

Image
‘ஏ..! எதுக்கு என்னையே இழுத்து உசுற வாங்குற.. இப்படி போன் போட்டு விடாம கேட்டு கேட்டு டார்ச்சர் பண்றதுக்கு..... என்னாத்த சொல்ல.... ஆபிஸ்ல அவனுங்க பண்ணுற டார்ச்சர் தாங்கல.. இதுல நீ வேற வீட்டுக்குள்ள நுழையும் போதே போனை போட்டு உசுற வாங்குற... நான் அப்பரம் பேசுறேன்னு சொன்னாலும் கேக்க மாட்டுற.. நைட்டு தூங்க விடாம பண்ணுறதுக்குனே போனை போட்டு உசுற வாங்குவியா....!? போனை வச்சுட்டு போய் படு... நான் தூங்க போறேன்.. குட் நைட்...!’ மூச்சு விடாமல் கோபம் முட்டி தீர்த்த ஆத்திரத்தில் மீனாட்சியை ஏகத்துக்கும் ஏசிவிட்டு செல் போனை சைலன்ட்டில் போட்டுவிட்டு போய் அக்கடா என்று படுத்தான்.

கனலாக எழுந்த கோபம் அடையாமல் தலையணையும், மேலே மின்விசிறியையும் முரைத்து பார்த்த படியே தூங்கி போனான்... காலையில் எழுந்து போனை கையில் எடுக்கையில் மீனாட்சியிடமிருந்து மீண்டும் அழைப்பு........
‘தம்பி சரவணனா?’
‘சார் நீங்க யாரு..? நான் சரவணன் தான்... மீனாட்சி நம்பர்ல இருந்து பேசுறீங்களே..! யாருங்க..’
‘இந்த புள்ள பேரு மீனாட்சியா... நான் இன்ஸ்பெக்டர் மூர்த்தி.. தம்பீ.. கொஞ்சம் மெரினா-கண்ணகி செலையாண்ட வாரீயளா..’
‘என்ன சார் ஆச்சு..? யார் நீங்க..…

நாற்காலி

Image
நாலு கால்களை கொண்டு தாங்கி நிற்கின்றாய் என்று நான் உனை விட்டிட முடியும். ஆனால் உன்னில் தான் எத்தனை நுணுக்கங்களை நீ அடக்கி இருக்கிறாய்..?

வீட்டிலும், விசேசங்களிலும்… ஆண்டி முதல் அரசன் வரை… அண்டம் அவதானித்த ஒவ்வொரு இடங்களிலும் நீ ஒவ்வொரு இடமாய் அடைந்து கொண்டிருந்தாய். அடைந்துவிட்டாய்..!
உன் மீது மனிதர்கள் அமரும் போதே அதில் தான் எத்துனை மாற்றங்கள்.? காலை உயர்த்தி கால் மேல் காலிட்டு உட்கார்ந்து பார்க்கையில் ராஜ தோரணை தருகிறாய். கைகள் இருக கட்டி கால்களை உன் மீது வைத்து அதன் மேல் உட்கார்ந்தால் குளிர் காற்றுக்கு இதமான இடமளிக்கிறாய். இன்னும் எத்தனையோ வகையில் எத்தனையோ பிரமிப்புகள் உன்னில். என் சிறு வயது நண்பன் திருமணத்திற்கு சென்றிருந்தேன். கோவில் நடத்தப்படும் திருமணம். வாசலில் பந்தலும், நான்கு இளவட்ட குழந்தைகள் கையில் வரவேற்பு தட்டில் சந்தனமும், சக்கரையும் என்னை வரவேற்றது. ஆடம்பர வாழ்க்கை பழகிவிட்ட எனக்கு உள்ளே சென்றதும் ஒரு அதிர்ச்சி. பரப்பபட்ட மணலில் விரிக்கப்பட்ட துணியில் நூற்றுக்கணக்கான சொந்தங்கள். அங்கே என் கண்கள் எங்காவது ஒரு மூலையில் நீ இருக்கமாட்டாயா என்று ஏங்கி தவித்தது..! பதமாக்கப்பட்ட…