கோபமென்னும் மாயை


‘ஏ..! எதுக்கு என்னையே இழுத்து உசுற வாங்குற.. இப்படி போன் போட்டு விடாம கேட்டு கேட்டு டார்ச்சர் பண்றதுக்கு..... என்னாத்த சொல்ல.... ஆபிஸ்ல அவனுங்க பண்ணுற டார்ச்சர் தாங்கல.. இதுல நீ வேற வீட்டுக்குள்ள நுழையும் போதே போனை போட்டு உசுற வாங்குற... நான் அப்பரம் பேசுறேன்னு சொன்னாலும் கேக்க மாட்டுற.. நைட்டு தூங்க விடாம பண்ணுறதுக்குனே போனை போட்டு உசுற வாங்குவியா....!? போனை வச்சுட்டு போய் படு... நான் தூங்க போறேன்.. குட் நைட்...!மூச்சு விடாமல் கோபம் முட்டி தீர்த்த ஆத்திரத்தில் மீனாட்சியை ஏகத்துக்கும் ஏசிவிட்டு செல் போனை சைலன்ட்டில் போட்டுவிட்டு போய் அக்கடா என்று படுத்தான்.


கனலாக எழுந்த கோபம் அடையாமல் தலையணையும், மேலே மின்விசிறியையும் முரைத்து பார்த்த படியே தூங்கி போனான்... காலையில் எழுந்து போனை கையில் எடுக்கையில் மீனாட்சியிடமிருந்து மீண்டும் அழைப்பு........

‘தம்பி சரவணனா?

‘சார் நீங்க யாரு..? நான் சரவணன் தான்... மீனாட்சி நம்பர்ல இருந்து பேசுறீங்களே..! யாருங்க..

‘இந்த புள்ள பேரு மீனாட்சியா... நான் இன்ஸ்பெக்டர் மூர்த்தி.. தம்பீ.. கொஞ்சம் மெரினா-கண்ணகி செலையாண்ட வாரீயளா..

‘என்ன சார் ஆச்சு..? யார் நீங்க..? மீனாட்சிக்கு என்ன ஆச்சு..? சார் பேசுங்க சார்.. என்ன ஆச்சு..?

‘நேருல வாங்க தம்பி எல்லாத்தையும் பேசிப்போம்... சீக்கிரம் வந்திடுங்க...

‘சார்... சார்.. சார்.. என்னும் போதே அழைப்பு துண்டிக்கப்படுகிறது.

அவனின் மனம் சஞ்சலத்தில் சிதைந்து எண்ணங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்  சிதைந்து தூசித்தட்டிக்கொண்டிருந்தது..

‘நேத்து கோபத்துல ஏதேதோ பேசிட்டோமே.. எதுனா பண்ணிகிட்டிருப்பாளோ...! இல்ல.. இல்ல.. அவளுக்கு ஒண்ணும் ஆயிருக்காது.. ஒருவேள ஆயிருந்தா...?நான் பேசுனது சரியா.. என் உயிருக்கு உயிரான அவள பாத்து அப்படி ஒரு வார்த்தை நான் பேசியிருக்கலாமா..? எதுவா இருந்தாலும் என்னையே தானே சுத்தி சுத்தி வருவா.. அவள பாத்து நான் அப்படி ஒரு வார்த்தை பேசியிருக்கலாமா? எந்த விசயமாயிருந்தாலும் என்கிட்ட கேக்காம பண்ணமாட்டாளே.. என்னை அவளுக்கு அவ்வளவு புடிக்கும்னு தெரிஞ்சும் பிடிச்சவங்க கிட்ட எப்படி என்னால கோப பட முடிஞ்சுது.. என் மீனாட்சிக்கு ஒண்ணும் ஆகாது.. எனக்கு தெரியும்... ஆனா.. எதுனா ஆயிருந்தா.. அவ குரல கேக்காம, அவ இல்லாம என்னாலயும் இருக்க முடியாது.. எனக்குள்ளவும் அம்புட்டு பாசம் தான்யா இருக்கு.. ஆனா.. நான் ஏன் அப்படி பேசினேன்... 

சிந்தனையில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது... கையில் இருந்த செல்போனில் இரவு இவன் தூங்கிய பிறகு மீனாட்சி அனுப்பிய எஸ்.எம்.எஸ்.,ஐ படித்தான்..

‘உங்க உயிர இனி நான் வாங்கமாட்டேன்... வாங்கவும் இருக்கமாட்டேன்...

முட்டிக்கால் தெரியும் ட்ரவுசரும், லூசா தொங்கும் சட்டையும் மாறாம அடுத்த பத்தாவது நிமிசம் மெரீனாவின் கண்ணகி சிலை அருகில் சரவணன்... சுற்றமும் முற்றும் பார்த்து, தன் செல்போனிலிருந்து மீனாட்சிக்கு அழைப்பு....

‘ஹலோ சார்... ஹலோ.. வந்துட்டேன் சார்.. சொல்லுங்க....

‘தம்பீ அப்படியே சிலைக்கு நேரா.. கடல பாத்து வாங்க..

‘என்ன தான் சார்... ஆச்சு...?

‘அட வாங்க தம்பி...

‘யோவ்.. சொல்லுயா.... 

என்று பேசிமுடிக்கும் முன்னே அழைப்பு துண்டிக்கப்படுகிறது. பீச் மணலில் கால்கள் புதைந்திட அதனோடு ஒரு போர் மேற்கொண்டு முட்டி மோதி முகம் கீழ் பொதைந்து, எழுந்து தட்டக்கூட முடியாமல் தலை தெறித்து கடல் கரையை அடையும் போது-அங்கு ஒரே போலீஸ் கூட்டம்... தெரித்து ஓடினான்... ஒவ்வொருவரிடம்...

‘நான் தான் சரவணன்.. நீங்க கூப்பிட்டீங்களா.. நீங்க கூப்பிட்டீங்களா.. என் மீனாட்சிக்கு என்ன ஆச்சு..........? 

என்று கதறிக்கொண்டே.. ஒவ்வொருவராய் பார்த்து அலைய... மனித கூட்டம் சுற்றி இருந்த ஒரு இடத்தை பார்த்து அங்கே ஓடினான்.

கூட்டத்தை எல்லாம் முட்டி தள்ளிக்கொண்டு... உள்ளே எட்டி பார்த்தால்.......... மீனாட்சி... உடல்மட்டும் தான்..........
---
‘ஐயோ.................... என்று கத்திக்கொண்டே திடுக்கிட்டான்....

தூங்கும் முன் போத்திய போர்வை இன்னும் எடுக்கப்படாமல், படுக்கையை விட்டு இன்னும் அகலாமல்... கனவா..? என்று பெருமூச்சு வாங்கினான்...... மணி இரவு 2...

வற்றிப்போன தொண்டையின் தண்ணீரை ஊற்றி சுதானித்துவிட்டு.. செல்போனை கையில் எடுத்தான்..! அதில்,

’20 Messages received’ என்று இருந்ததை பார்த்து கை சற்று உதறலுடன் பொத்தானை அமுக்கினான். அனைத்து மெசேஜ்களும் மீனாட்சியிடமிருந்து... கைகள் நடுக்கத்தில் தள்ளாடின.. சிந்தையில் என்னென்னமோ வந்து எழுதி போயின.. கண்கள் கண்ணீரை வடிக்க காத்துக்கொண்டிருக்கின்றன... படிக்கிறான்..

‘சாரி... ப்ளீஸ்.. என் மேல கோபம் மட்டும் படாதீங்க.. என்னால் தாங்க முடியாது... ப்ளீஸ் சாரி... என்ற முதல் மெசேஜ்க்கு பின் அனைத்து மெசேஜ்ம் ‘சாரி... என்பதை மட்டும் தாங்கி நின்றது.

‘நான் இவ்வளவு கோபம் பட்டும் இப்படி மெசேஜ் பண்ணுறாளே..! நான் எவ்வளவு கேவலமானவன்.. உயிருக்கு உயிரான என் மீனாட்சிக்கிட்ட நான் எப்படி கோப பட்டேன்... இப்பவே பேசிடணும்... என்று மனதில் தோன்ற உடனே மீனாட்சியை அழைத்தான்.. அங்கே தழுதழுத்த குரலில் அழைத்த அடுத்த நொடியே பேச தொடங்கிவிட்டாள் மீனாட்சி..

‘இன்னும் தூங்கலயா மீனாட்சி..?

‘ஹூம்ம்... இல்ல..

‘கோபமா இருக்கியா..? சாரி டா...

குரல் மேலும் தழுதழுக்க அவள் கண்ணீர் கசிவதை இங்கே உணர்ந்தான்...

‘அழாத டா... என் செல்லம்ல அழாதடா... நான் பண்ணினது தப்பு தான்.. நான் அப்படி பேசியிருக்க கூடாது தான்... அழாத மா... சித்தப்பா தான்டா பேசினேன்.. மன்னிச்சுடு டா..

‘போங்க.. பேசாதீங்க... நாளைக்கு ஸ்கூல்ல பேரண்ட்-டீச்சர் மீட்டிங்.. நாளைக்கு தந்தையர் தினம் வேற.. எல்லா பசங்களும் அப்பாவோட வருவாங்க.. நான் என் அப்பாவுக்கு எங்க போவேன்.? சின்ன வயசுல இருந்து உங்கள தானே அப்பானு கூப்பிட்டுகிட்டு இருக்கேன்.. எனக்கு மட்டும் ஆசை இருக்காதா...? எனக்கு ஹீரோ, அப்பா எல்லாம் நீங்க தான் பா.. சித்தப்பா சொல்லாதீங்க.. நீங்க எனக்கு அப்பா..

என்று அவள் முடிக்க.செல்லமாக கொஞ்சி மிரட்டிய அவளின் வார்த்தைகளை கேட்டு கண்ணீர் கசிய இருவருக்குமான சமாதான பேச்சு... தொடர்ந்தது......... பேரண்ட்-டீச்சர் மீட்டிங்கிலும்...!


--------------
தம்பி கூர்மதியன்

Comments

  1. சமாதான பேச்சு... தொடர்ந்தது......... பேரண்ட்-டீச்சர் மீட்டிங்கிலும்...!

    இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..