நீ எந்தன்...மயக்கும்
மதி மறக்கும்..
நினைக்க
சுடர் விரிக்கும்...!
நீயாய் நானல்லா
உனை நீங்கிட துணியேனே...!

சொப்பனங்கள்
நீயாய் எனை தீண்டாது..
முன்னே,
சொக்கி கண் முழுதும் நீதானே..!

எத்தனை ஏச்சு...
எத்தனை காயம்...
எத்தனை கோபம்....!
எல்லாம் உள்ளே புதையலாய்
எட்டி நகைத்து சிரிக்கிறாய்....

வாஞ்சை மொழி வள்ளல் நீயோ.?
உனை சீண்டி சிரித்தாலும்
அன்பை வாரி தருகிறாயே..!

அகன்றேன் அல்லேன்...
உனை என்றும் அகலேன்..!
வாழ்வோடு இயற்றியம்ப தவிக்கையிலும்
உனை பற்றி துடிக்கும் கண்ணீராய்
உன்னில் என்றும் நானாக
உன்னை என்னுள்ளே புதைத்துக்கொண்டு
உன்னில் யாம் புதையுண்டு போவோம்....!

தாய்மண்ணே...!
உன்னை எவர் பற்றிட துடித்தாலும்
எட்டி வரும் சினம்கொண்டு
அவர் சிரம் தாழ செய்யும்
உனக்காய் என்னுள்ளே பற்றிருக்கும் கரம்...!

நீ அலன்றிடும் சூழல் கண்டோ.?
அச்சூழலதும் அகற்றிடுவோம்.!
நீ வெறுத்திடும் பகை அறியோ
அப்பகைமைக்கும் பாடம் கற்பிப்போம்..!

எனை நீ தாங்கும் நொடியாதும்
எம்மையும் சேர்த்து உம்மையாகி
உம்மை எம்மில் சுமந்திட
இப்பிறவி பிறப்பித்திருக்கேன்...!

எனை முழுதும் சுமந்து
உன்னை எனக்காக அற்பணித்தாய்..!
உனை நினைக்கும் நொடியாதும்
சொக்கி நீங்காது செயலற்றேன்
உன்னில் எனை காண்பார்
என்றும்,
என்னில் உனை காண்பார்...!
என்றும் உனை நீங்கேன்...
என் பாரத தேசமென உச்சி நோக்கி
உரக்க எழும் கர்ஜனை.......
புடைந்த மார்பு
வெகுண்ட பார்வை
எங்கும் எதிலும் கர்வம்......

'நீ எந்தன் தாயகமென...'

-
தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..