Posts

Showing posts from February, 2012

தொலைக்காட்சி

Image
உன்னை கண்டு பிரமிக்கிறேன்…! என்ன ஒரு விந்தையான அழகு. உன்னில் தான் எத்தனை பரிணாம வளர்ச்சிகள். மெய்சிலிர்க்கிறேன் உன்னை பார்க்கும் போது. கொஞ்சம் பின்நோக்கி என் எண்ணங்கள் பயணிக்கின்றன.
வர்ணமற்று-ஒளி மங்கிய நிலையில் நீ முதல் முதலில் பிறந்த போது எம்மவர் உன்னை தூரத்தில் இருந்து பார்த்தனர். நீ பிறப்பதை தடுக்க பலர் முற்பட்டனர் என்று சொன்னால் அது மிகையாகாது. நீ கருவாய் இருக்கிறாய் என்று சொல்லும்போதே உன்னை ஏளனிக்க தொடங்கிவிட்டனர். இத்தனையும் தாங்கிய உன் தந்தை உன்னை பெற்றெடுக்க எத்துனை சங்கடத்திருப்பார் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது.
நீ பிறந்து இந்த மாந்தர்களுக்கு அறிமுகமாகும் போது உன்னை எல்லாரும் வியந்து தான் பார்த்தனர். அத்தனை பூரிப்புகளுக்கு இடையில் எல்லாரும் உனை கண்டு சென்றனர். ஆனால், ஆரம்பகாலத்தில் உன்னை எவரும் தன் வீட்டினுள் சேர்க்க தயாராக இல்லை.
என்ன காரணமாக இருக்கும்..? ஒரு வேளை வர்ணமற்ற நிலையில் நீ இருப்பதால் ‘கருப்பர்’ என்று சொல்லி ஒதுக்கி வைத்திட நினைத்தார்களா..? ஒதுக்கி வைப்பதற்கு காரணிகளை நான் என்ன எங்கள் ஆட்களுக்கு சொல்லியா தரவேண்டும்?
போட்டி பொறாமைகள் என்று வந்துவிட்டால்-நீ எங்கே ம…

Never ever 'Give up'..!

Image
The joy i had,
In the dump situation...
The thought that made
Which made me react...!

Gotta go...
Towards the goal...!
Set a path
That leads the same....!

Think the truth
That never gets in..
Break the bass
That make ur temper high....!

Strike! Strike! Strike!
Until you get.....
Bang! Bang! Bang!
Which opens the door.....!

The way that leads
That do i search....!
I dry me hard
to get my dream...!

Fixed my goal
'll reach the same..
I can give up..
Not my dream
but my life..!

Success to be reached
Not to be attained..!
As I have my success in my hand..!

It cries to get me than i do...
I have decided to get my life to it
never give up..
I 'll never ever give it up..!

--
Ram

'ங்..'கூ

Image
மழலை மச்சொன்று கண்டேன்
அங்கே மதியெட்டு புறம் தொட்டு
கிச்சுட்டு கொஞ்சுண்டதே..!

மொட்டு பாதம் ஒன்றுணர்ந்தேன்
மார் உதைத்து மன்றிக்கொண்டு
கைக்குள்ளே சிட்டாய்
உதிரும் சலங்கை சிணுங்கிற்றுதாய்..!

பிஞ்சென்ற கைவிரல் சீண்டல்
என் முகபடர் மீசை தேடி
முன்னென்றும் பின்னென்றும் கைவிரல் ஊடலாய்
என்வலி சிணுங்களில்
பரிதவிக்கும் பொக்கை வாயில் பொன்சிரிப்பு..!

நெஞ்சம் தரை தொடர
கை உற்றி ஊன்றி உணருதலாய்
முட்டை கண்விழி தலையுயர்த்தி
வலமும் புறமும் அசைத்தாடி
என் தேடி செல்லுதெந்தன்
செல்லத்தின் மான்விழிகள்...!?

கேட்டிராத பொன்மொழியாம்
எட்டிராத நிம்மதியாம்
எல்லாம் இழந்தேம் என்றும்
எல்லாம் மறந்தேயாம்
உந்தன் 'ங்...'கூ என்ற ஓர்வார்த்தையில்..!

எல்லாம் மறந்தேயாம்
உந்தன் மழலை சீண்டலில்
எல்லாம் மறந்தேன்..!

--
தம்பி கூர்மதியன் 

எழுத்து

Image
எனது எண்ண ஓட்டங்களில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. நான் ஒரு ஒற்றை இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறேன். என்னை தடுத்திட எவர் முனைந்தாலும் நான் எட்டி உதைத்திட மறவேன்.

ஆனால் என்னை தடுக்க எவரும் இல்லை. ஏனெனிலில் சுற்றத்தை கவனித்திடாது எந்தன் பாதையை தேர்ந்தெடுத்து இடையூறு இன்றி நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன். எனது இன்பத்தையும் துன்பத்தையும் மொத்தமாக மூளையோ மனமோ தாங்கியதோ நான் அறியேன். ஆனால், என் 'கை' நன்றாக தாங்கியது. ஒவ்வொரு எண்ண ஓட்டத்தையும், ஆத்திரத்தையும், கோபத்தையும் தன்னுள் பெற்று எழுத்தாக மாற்றி எனக்கு ஓர் நீங்கா சேவை செய்து வருகிறது.
நான் எதை பற்றி எழுத வருகிறேன். எதை எழுதுகிறேன் என்று தெரியாமல் மூளையும் மனதும் மௌனித்திருக்கும் போதும்-நீ இதை தான் எழுத போகிறாய் என்று என் கை என்னை வழிநடத்தி இருக்கிறது. கை போன போக்கில் எழுதுகிறவனா நீ..? என்று கேவலமாக பார்க்கலாம் நீங்கள். ஆனால், எனது ஏதேனும் ஒரு கட்டூரையிலோ கவிதையிலோ உட்கருத்து இல்லாமல் இருக்கும் என்று நீங்கள் சொல்லிவிட முடியாது.
சில நேரம் சிந்தையில் ஆழ்ந்திருக்கிறேன். என் கைக்கு என்று தனியாக மூளை ஏதேனும் இருக்கிறதா என்று…

முரசு

Image
எங்கோ முரசு ஒலிக்கிறது....!

டம்.. டம்.. டம்...டம்... கொட்டடும் கொட்டடும் சத்தம் கொடி சிக்கிட்டு பீறட்டும் சத்தம்...! திக்கெட்டும் திரளும் யுத்தம் ஒலி கொட்டுது கொட்டுது டமுக்கு டமுக்கு டமு டம்..! டம்..! டம்..! டம்..! டமுக்கு டமுக்கு டமு டம்..! டம்..! டம்..! டம்..!
இங்கொரு ஒளி சுடர-தொடர்பாய் அங்கொன்றும் இங்கொன்றும் எங்கெங்கும் ஒவ்வொன்றாய் இன்று உலகெங்கும் உன்னதமாய் தவறை சரியாக  போற்றி புன்னகைத்து-சிரித்து; ஏளனிக்கும் வாய்களை அடைத்திட...!
மரபறியா மாண்பறியா உலகறியா உன்னத உருவறியா-கொக்கரிக்கும்
வாய்க்கு ஒரு கூடார உணவாய்
பிடறிட்டு சீறி எழுவது அறியோ...!?

புஞ்சை வயலாடி;
எங்கும் நஞ்சை வயலாடும்..!
கண்கள் பரிபோகும்-கார் மேகம் தலை சூழும்;
சென்ற வடு அறியா..?
கரித்தாரை உருவறுக்க..
கொட்டுது கொட்டுது சத்தம்
டம் டம் என கொட்டுது கொட்டுது..!

மங்கை மதியன்றோ;
என் மானம் அவளன்றோ;
அச்சம் அவளறியா- என்றும் மாண்பு அவளுணர்தாள்;
மாற்றம் வருகுதனில்,
அம்மாயை அழித்திடுவோம்..!
அழிக்க கொட்டுது சத்தம்
உணருது உணருது டம் டம் டம்..!

நட்டெடுக்கும் நரம்புகள் புடைக்க
முட்டிக்கும் மார்பு முரண்பிடிக்க
கரம்-காலும் முறுக்கேற
மு…