முரசு


எங்கோ முரசு ஒலிக்கிறது....!

டம்.. டம்.. டம்...டம்...
கொட்டடும் கொட்டடும் சத்தம்
கொடி சிக்கிட்டு பீறட்டும் சத்தம்...!
திக்கெட்டும் திரளும் யுத்தம்
ஒலி கொட்டுது கொட்டுது
டமுக்கு டமுக்கு டமு
டம்..! டம்..! டம்..! டம்..!
டமுக்கு டமுக்கு டமு
டம்..! டம்..! டம்..! டம்..!

இங்கொரு ஒளி சுடர-தொடர்பாய்
அங்கொன்றும் இங்கொன்றும்
எங்கெங்கும் ஒவ்வொன்றாய்
இன்று உலகெங்கும் உன்னதமாய்
தவறை சரியாக 
போற்றி புன்னகைத்து-சிரித்து;
ஏளனிக்கும் வாய்களை அடைத்திட...!

மரபறியா மாண்பறியா உலகறியா
உன்னத உருவறியா-கொக்கரிக்கும்
வாய்க்கு ஒரு கூடார உணவாய்
பிடறிட்டு சீறி எழுவது அறியோ...!?

புஞ்சை வயலாடி;
எங்கும் நஞ்சை வயலாடும்..!
கண்கள் பரிபோகும்-கார் மேகம் தலை சூழும்;
சென்ற வடு அறியா..?
கரித்தாரை உருவறுக்க..
கொட்டுது கொட்டுது சத்தம்
டம் டம் என கொட்டுது கொட்டுது..!

மங்கை மதியன்றோ;
என் மானம் அவளன்றோ;
அச்சம் அவளறியா- என்றும் மாண்பு அவளுணர்தாள்;
மாற்றம் வருகுதனில்,
அம்மாயை அழித்திடுவோம்..!
அழிக்க கொட்டுது சத்தம்
உணருது உணருது டம் டம் டம்..!

நட்டெடுக்கும் நரம்புகள் புடைக்க
முட்டிக்கும் மார்பு முரண்பிடிக்க
கரம்-காலும் முறுக்கேற
முட்டி முனகும் கனலேறும் கண்கள்
வஞ்சிக்க துடிக்க வசையறியா வாயாக
எங்கும் துகளுது துகளுது
துயில் மீளுது மீளுது..
சத்தத்தின் சத்தத்தின் உச்சம்
எங்கும் புரட்சி போரே மிச்சம்..!

கொட்டட்டும் கொட்டட்டும் சத்தம்..
கொடி பீறிட்டு எழட்டும் யுத்தம்..!
வீண்ணெங்கும் கேட்கட்டும் சத்தம்
என்றும்
டமுக்கு டமுக்கு என
டமுக்கு டமுக்கு என
விண் முட்டட்டும் முட்டட்டும் சத்தம்...!
--
தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!