'ங்..'கூ
மழலை மச்சொன்று கண்டேன்
அங்கே மதியெட்டு புறம் தொட்டு
கிச்சுட்டு கொஞ்சுண்டதே..!
மொட்டு பாதம் ஒன்றுணர்ந்தேன்
மார் உதைத்து மன்றிக்கொண்டு
கைக்குள்ளே சிட்டாய்
உதிரும் சலங்கை சிணுங்கிற்றுதாய்..!
பிஞ்சென்ற கைவிரல் சீண்டல்
என் முகபடர் மீசை தேடி
முன்னென்றும் பின்னென்றும் கைவிரல் ஊடலாய்
என்வலி சிணுங்களில்
பரிதவிக்கும் பொக்கை வாயில் பொன்சிரிப்பு..!
நெஞ்சம் தரை தொடர
கை உற்றி ஊன்றி உணருதலாய்
முட்டை கண்விழி தலையுயர்த்தி
வலமும் புறமும் அசைத்தாடி
என் தேடி செல்லுதெந்தன்
செல்லத்தின் மான்விழிகள்...!?
கேட்டிராத பொன்மொழியாம்
எட்டிராத நிம்மதியாம்
எல்லாம் இழந்தேம் என்றும்
எல்லாம் மறந்தேயாம்
உந்தன் 'ங்...'கூ என்ற ஓர்வார்த்தையில்..!
எல்லாம் மறந்தேயாம்
உந்தன் மழலை சீண்டலில்
எல்லாம் மறந்தேன்..!
--
தம்பி கூர்மதியன்
Comments
Post a Comment