Skip to main content

Posts

Showing posts from March, 2012

முற்றுப்பெறாத ஒரு முற்றுப்புள்ளி

மறிக்கும் உலகில் மதிக்கெட்டு திரிய யாம் மடையன் அல்லோம். அத்தகைய பெயருண்டு யாம் ஜீவித்திருக்க விரும்பற்றோம். யாம் என்ன செய்ய பிறந்தோம்.. எத்தகைய தடையவிழ்த்து ததும்பும் இவ்வாழ்வில் மிதந்துக்கொண்டிருக்கிறோம் என்று யாம் அறிவோம். பாதை மாறி சிந்தை சிதைவுற்று சித்தம் கலங்கிடமாட்டோம். யாம் என்றும் சித்தம் கலங்கிட மாட்டோம்.

பருகுநீர் கேட்கா மீன்-உயிரிற்றிருக்க நீர்மட்டம் மட்டும் கேள்வித்து உயிர்கோலை ஊன்றி பிடித்திருக்கையில்-மனிதனாய் உயிர்கொண்டு யாம் சகல வசதி வாய்சோறு பெற்றும் பொறுக்காது பருகு நீர் மட்டுமன்றி கனிம சுத்திகரித்த நீர் வேண்டி மீன் நிற்பது போல போதா குறை போதையென போதி போதி என உள்மூளை போதிக்க தூண்ட தூண்ட துகளற்று போராடி போராடி என்ன வாகை சூட சூளுரைத்தோம்...? ஒட்ட துணியற்று ஒய்யார கூடாரம் வேண்டுவதோ..? எவ்வாகை எனை அடையும்.. யாம் யமக்குள்ளே அடைப்பட்டு எம் ஆசைக்குள்ளே சீரழிந்து சுக்குநூறாயாகிறோம்...!

எமக்கு அடைய என்று இன்னும் ஆயிரம் இருக்கலாம்..! ஆனால், யாம் அடைந்தோம் என்று இருமாப்பு என்றும் கொள்ளமாட்டோம். யாம் அடைந்தோம் அவை அடைந்ததாய் சொல்லிக்கொள்கிறோம்.. அடையாததை அடைவோம் என்கிறோம்..! அடை…

ஏச்சு

தினமொரு இரவு பயணம்..
மின்விளக்கு ஒளி மிஞ்சும்
வண்டியின் முன் விளக்கு..
கண் இமை நேரத்தில்
கன தூரப்பயணம்..!
கத்தும் வாகனங்கள் இடையே
சிர்ரிட்டு இடையிலும்
மடையிலும்
ஊர்ந்து உருண்டு வில்லென்ற பயணம்..
ஊரார் கரிந்திடுவார்
எனது அதிவேக ஓட்டத்தை....!!!!!
தடைப்படும்..
அங்கே சிகப்பு விளக்கு சிக்னலில்
நடுரோட்டில் பச்சை விளக்கிற்காக நான்
காத்து நின்றுகொண்டிருக்கையில்
கரிந்த வாய்கள் மீண்டும் கரித்திடும் என்னை...
சிகப்பிற்காக நான் நின்றது குத்தமென...!!
--
தம்பி கூர்மதியன்