ஏச்சு


தினமொரு இரவு பயணம்..
மின்விளக்கு ஒளி மிஞ்சும்
வண்டியின் முன் விளக்கு..
கண் இமை நேரத்தில்
கன தூரப்பயணம்..!
கத்தும் வாகனங்கள் இடையே
சிர்ரிட்டு இடையிலும்
மடையிலும்
ஊர்ந்து உருண்டு வில்லென்ற பயணம்..
ஊரார் கரிந்திடுவார்
எனது அதிவேக ஓட்டத்தை....!!!!!
தடைப்படும்..
அங்கே சிகப்பு விளக்கு சிக்னலில்
நடுரோட்டில் பச்சை விளக்கிற்காக நான்
காத்து நின்றுகொண்டிருக்கையில்
கரிந்த வாய்கள் மீண்டும் கரித்திடும் என்னை...
சிகப்பிற்காக நான் நின்றது குத்தமென...!!
--
தம்பி கூர்மதியன்

Comments

  1. வாழ்த்துக்கள் தம்பி முதலில் புதிய தோற்றத்திற்க்கு...

    நாம் வேகமாய் செல்கையில் நமக்கு தடை போடும் வேகத்தடை வாய்களுக்கு ஒரு போதும் தன் குறைகள் தெரிவது இல்லை.. நிறைய எழுதுங்கள் தம்பி.... :) இன்னும் ஒன்னு சொல்லனும், எழுத்தின் அளவை கூட்டலாமே, என்ன மாதிரி வயசானவங்களுக்கே தெரிய மாட்டீங்குது அவ்வ்வ்வ்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...