முற்றுப்பெறாத ஒரு முற்றுப்புள்ளி
மறிக்கும் உலகில் மதிக்கெட்டு திரிய யாம் மடையன் அல்லோம். அத்தகைய பெயருண்டு யாம் ஜீவித்திருக்க விரும்பற்றோம். யாம் என்ன செய்ய பிறந்தோம்.. எத்தகைய தடையவிழ்த்து ததும்பும் இவ்வாழ்வில் மிதந்துக்கொண்டிருக்கிறோம் என்று யாம் அறிவோம். பாதை மாறி சிந்தை சிதைவுற்று சித்தம் கலங்கிடமாட்டோம். யாம் என்றும் சித்தம் கலங்கிட மாட்டோம்.

பருகுநீர் கேட்கா மீன்-உயிரிற்றிருக்க நீர்மட்டம் மட்டும் கேள்வித்து உயிர்கோலை ஊன்றி பிடித்திருக்கையில்-மனிதனாய் உயிர்கொண்டு யாம் சகல வசதி வாய்சோறு பெற்றும் பொறுக்காது பருகு நீர் மட்டுமன்றி கனிம சுத்திகரித்த நீர் வேண்டி மீன் நிற்பது போல போதா குறை போதையென போதி போதி என உள்மூளை போதிக்க தூண்ட தூண்ட துகளற்று போராடி போராடி என்ன வாகை சூட சூளுரைத்தோம்...? ஒட்ட துணியற்று ஒய்யார கூடாரம் வேண்டுவதோ..? எவ்வாகை எனை அடையும்.. யாம் யமக்குள்ளே அடைப்பட்டு எம் ஆசைக்குள்ளே சீரழிந்து சுக்குநூறாயாகிறோம்...!

எமக்கு அடைய என்று இன்னும் ஆயிரம் இருக்கலாம்..! ஆனால், யாம் அடைந்தோம் என்று இருமாப்பு என்றும் கொள்ளமாட்டோம். யாம் அடைந்தோம் அவை அடைந்ததாய் சொல்லிக்கொள்கிறோம்.. அடையாததை அடைவோம் என்கிறோம்..! அடைய முடியாது என்னும் வார்த்தை எந்தன் அகராதியின் அனைத்து பக்கத்திலும் தேடியும் கிடைக்கவில்லை.

எந்தன் தேவையை அடைய முற்படுவோம். கேட்பார் தேவையற்றது என்பார். சொல்வார்-தேவையை அடைய தெரியாதார். வாய் சொல் வீரனாகினார் அவர்பால்... உணர்வு பொங்கிய வீரனாகினோம் எம்பால்.

இன்னும் சொல்லிக்கொள்ள திறமைகள் ஆயிரம் எம்மில் புதைவுற்றும் கொஞ்சம் கொஞ்சுண்டதாய் சிதைவுற்றும் மறைந்து போய் ஏளனிக்கலாம். ஆனால் யம்மில் அடங்கியன எம்மில் தான் இருக்கின்றன. இன்று அற்றியனால் நாளையோ.. அற்று மறுநாளில் ஒருநாள் அது வெகுண்டு விண்ணை முட்டுகையில் ஏளனிப்பார் பொதுகூட்டம் எட்டி பிரமிக்கும்..

நாளை எம் இருப்பை அறியோம்.. எண்ணங்களை முடிக்க நேரங்கள் எமக்காக காத்து நின்றுக்கொண்டிருக்கவில்லை. இன்னும் யாம் சாதிக்க வேண்டிய சரித்திரங்களும்.. உருவாக வேண்டிய சரித்திரங்களும் ஆயிரம் கொட்டிக்கிடக்கின்றன. யம் சிந்தையும் அதனூடு உருவாகும் தெளிவும் அந்த சரித்திரங்களை நோக்கியே படையெடுத்துக்கொண்டிருக்கின்றன.

உலகத்தோடு தனியொரு போராளியாக யாம் படையெடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உமது பார்வையில் நான் கூட்டத்தின் கூட்டமாக உம்மை எதிர்ப்பவனாகவும் நீ தனியான போராளியாக விடபட்டதாகவும் தெரியலாம். இவை தான் உலகம் என்று உணரும் வரையில் நிசப்தம் என்றே அறியாமல் கனா உலகில் விழித்துக்கொண்டே நித்திரையில் இருக்கிறாய் என்று சொல்லலாம்.

யாம் விழித்துக்கொண்டோம்.. போருக்கு தயாராகிவிட்டோம்..! இன்னும் எத்தனை அழிவுகளையும் ஆக்கங்களையும் தருவோம் என்று எமக்கு தெரியாது. ஆனால், யாம் போராளியாக களமிறங்கி வாகை சூடுவோம்.. அற்று போராளியாக செவ்வுயிர் நீப்போம்..! அற்றுதலாய் புறமுதுகிட்டு எச்சம் புசித்திடமாட்டோம்.

எமது பாதையை தேர்ந்தெடுத்து அதில் யாம் சரியாக ஒரு பயணம் மேற்கொண்டு வருகிறோம். அதில் சிறு சிதைவுகளோ, மாற்றமோ ஏற்படுமேயானால் அதன் காரணிகள் சுக்கு நூறாகி சிதைவுற்றிடும் மறவாதே...!!!

எந்தன் பாதை.. எந்தன் வாழ்க்கை.. எந்தன் வெற்றி.. எந்தன் முடிவு.............! இதுவே எமது கோட்பாடு. இதன் வழியே எம் பயணம்.............

முற்றுப்பெறாத ஒரு முற்றுப்புள்ளியாக... இன்னும் யாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம்...! இலக்கற்று...

--
தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!