தனிமை


வெற்றிருட்டு எங்கும் தவிப்பு..
மனதுள்ளே ஆயிரம் வினாக்கள்
என்ன விடையென அறியாது
இன்னும் தவியான தவிப்பு..!

முட்டிக்கொள்ள தோன்றும்
முகம் சுளிக்க தோன்றும்
தனிமை..
தவிப்பு..
எல்லாம் எம்மை சூழ துடித்துடிப்பதாய்
எம்மை நானே உணர்ந்து உணர்வுக்குள் துடித்தேன்..!

இன்னும் என்ன வாழ்க்கை..
இனியும் எதற்கு வாழ்க்கை...!
பயமும்.. எங்கும் பயாதிக்கமே..!

துரத்துகிறது..
எம்மை விடாமல் துரத்துகிறது..
சுற்றீருட்டு யான் ஓடி கடந்திடுவேன்..
அண்டம் மறந்து 
அயன்றார் அடையாது அகன்றிடுவேன்..!

சுற்றி விலகி முற்றம் அடைந்து
தவியின் முடிவில் எல்லாம் தவிர்த்து..
தப்பிவிடுவேன்..
தப்பிய பொன்சிரிப்பு மனது நோகி நோகி
புறமும் பின்னும் நோக்கியால்
ஒன்றுமில்லை..
இங்கே உண்மை தனிமை..!

மனதின் தோன்றிய ரீங்கார
தனிமையும், தவிப்பும், பயமும்...
அந்த சாயல் இருட்டு உருவாக்கிய 
அக்கொடூர காட்சியின் ஓட்டம்
எனை சாயலற்ற உண்மையில் இப்போது..
பரிதவித்து இருக்கிறேன்........!

மனமென்னும் வித்தகன்
தனிமை பயம் தந்தே எனை தனித்துவிட்டான்...!
--
தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!