கத்தியின்றி ரத்தம்கொண்டு


எச்சமிட்ட துச்சம்
அதை சுற்ற நரங்ளின் மிச்சம்...
தொட துண்டாய் தெரிக்குது ரத்தம்
எனை அடைகயில்
நாற்றம்... ரத்த நாற்றம்..!

முகர்ந்தால் ஒரு வாசம்
முச்சந்தி முட்டத்து வீட்டான் பேச்சு..
நாற்றமோ.. அல்ல வாசமோ..!
கெட்டோரை ஏற்கும் நல்லோர் பார்வை அவர்தோ
அற்று நல்லோரை மறுக்கும் கெட்டி பார்வையோ எனதோ..!!?

வினாக்கள் மறித்த ஒரு விடை..
விடையறிந்த ஒரு வினாவை தேடுகிறேன்..!

குழப்பம்..
சுற்றிலும் குழப்பம்..!
அடக்கமுடியாதோர் கோபம்..
சுத்தி இக்கும் பொருட்களை வீதியில் வீசி
உச்சி வெயில் மண்டை காய்ந்திட
மேல் நோக்கி உரக்க கத்திக்கொண்டே
ஓட தோன்றுகிறது மனது...!

பிரம்மை கொண்டேனோ..!?
என்ன அறிகின்றேன்.. என்ன மறக்கின்றேன்..!
எம்மை அறியாமலோர்.. எமக்குள்ளே பிதற்றல்..!

கண்கள் கலங்கிட..
சிந்தை அதை நினையாதிருக்க தடிக்கிறது..!
நித்தம் மறவாமல் நினைவூடே
நர்த்தகை கொள்கிறது..!

துரத்தாமல் துடிதுடுக்க செய்யும்
ரத்த வாடை..
நாறுகிறது என்றேன்...!
நாற்றம் தான்... ஆனால் சுகக்கிறது என்கிறான்..!

நாற்றம் சுகத்திடுமா,,,!
போதையாதலாய் கொண்டிருப்பானோ..!?
நாற்றம் சுகமில்லையடா மடையா..!

விடு..
நாற்றமில்லை என்றான்..!
இன்று நாற்றமே-சுகக்கிறது என்கிறான்..!
நாளை அவனுக்கு கசத்திடும்...!

நிராகரித்த ரத்த நாற்றத்தை
விட்டு நால்திசையும் ஓடுகிறேன்..!
சீக்கிரம் சுகக்கிறது
என்று சொன்னவனும் எனை சேர்வான்..
என்னும் நம்பிக்கையில்..!

----
தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!