Posts

Showing posts from June, 2012

எனதருகில்...

Image
அன்று காலை எழுந்தது முதல் காதில் ஒரு இடையூறு. ஏதோ ஒன்று முட்டி முனகி காதில் சண்டைபோட்டு கொள்வதாய் ஒரு உணர்வு. என்னவாக இருக்கும் என்று எனக்கு யோசிக்க தோன்றவில்லை. என்னவாக இருந்தாலும் என்னை விட்டு போனால் சரிதான் என்றே நினைக்க தோன்றியது. குளித்து முடித்துவிட்டு இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு காதில் கையை விட்டு குடைந்தபடியே வந்தேன். இப்போது அந்த இடையூறில் ஒரு தெளிவு.

சப்தம் இல்லாது அது ஏதோ மெல்லிய ஒலி என்பதை புரிந்துகொண்டேன். காதுகள் உற்று கேட்க தொடங்கியது. ஏதோ அழைப்பு ஒலி போல இருக்கிறது. காதில் புகுந்துகொண்டு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த தண்ணீரை தட்டி வெளியே எடுத்தேன். மீண்டும் சப்தம்... மெல்லிய ஒலியல்ல சப்தம். குளித்ததும் காதில் தெளிவு பிறக்கவில்லை-அது காது அடைத்துக்கொண்டது என்பதை புரிந்துகொண்டேன்.
வீட்டை விட்டு வெளிய வந்தேன். ஒரு கும்பல் என்னை துரத்த தொடங்கியது. ஏன் ஓடுகிறோம் என்பது புரியாமல் ஓட தொடங்கினேன். பின்னால் திரும்பி பார்க்கவேண்டாம் என என்னை ஏதோ உரக்க சொல்லிக்கொண்டே இருந்தது. கண்டிப்பாக பார்க்க கூடாது என்று முடிவு எடுத்து பின்னால் பார்க்காமல் மேல் மூச்சு கீழ்மூச்சுமாய் இறப்…

கைம்பெண்

Image
அவனடி மரணகம் சரீரகம் சொர்ப்பணம் இவஞ்செயல் யருங்கையில் யாதொரு நர்த்தனம் கொடுங்குயில் வாக்கியர் வாரியல் வாரியோ எஞ்செய யாமொரு குழப்பியல் யானதே..!

யானதே யாதொரு நிஜமுமே நிழலகம்  காதொரு பரவுடை ஊரிடை முழுதலும் உத்தமன் என்றிடை உயிர்விடை கொடுக்கினான் மாற்றொரு சிந்தையாய் பரவலும் முடிந்தாய்...!
துணைவியாய் தூயலாய் அற்றாய் என்சொல் மருவிய உயிரும் எதற்கென்ற கேளாய் மாய்ச்சினான் தன்உயிர் காணாதுயராய் தூயவள் தாக்கிய தன்சொல் அழிய...!
ஊரிடை பேச்சு மாறுடையாச்சு துணையாள் தூயதை மறஞ்சியாள்-அங்கு மாண்புடையான் மாய்ச்சினான் தன்உயிர் வலியாய் என்று மாறாய்பேச்சு ஊரெங்குமாச்சு..!
சொர்க்கம் பேண்ட உரமற்ற மானுடன் உற்றும் துயர் கொடுத்தேன் கண்ணே-இன்று செற்றும் துயர் கொடுத்தேன் கண்ணே என்று சோக கீதம் சேர்க்கிலான்.
துன்பளித்த மன்னன் பிரிதாள்-சினமற்று இன்று அழகற்று வெள்ளை சீலையுண்டு வளையற்று, காதணியற்று, பொட்டற்று, பூவற்று துன்பளித்தானுக்கும் மரிதரியாள் ''நீயற்றா உலகில் யாம் அழகற்றோம்யென''
-தம்பி கூர்மதியன்

Information Technology- I am very Proud

Image
மீசை துளிர்விட்டு அரும்பாக உருப்பெற்று முழுதாய் ஒரு ஆண் வடிவம் பெருவதற்கு முன்பாக நுனி நாக்கில் ஆங்கிலமும் ஒழுங்காய் கோதிவிடாத முடியுடன் ஒரு குறிக்கோள் இல்லாமல் திரியும் ஆயிரம் இளைஞர்களை  நீங்கள் சென்னை மாகாணத்தில் பார்க்கலாம். யார் இவர்கள்?என்று உங்களுக்கு ஒரு யோசிக்கும் எண்ணம் இருந்தால் எதற்கு வீணாக சிரமம் கொள்கிறீர்கள்? நானே சொல்லிவிடுகிறேன். அவர்கள் IT கம்பேனி என்று சொல்லப்படும் அந்நியர்களுக்கு பொதி சுமக்கும் கழுதை கூட்டமாகவே இருப்பார்கள்.

அன்று மிளகில் ஆரம்பித்து வியாபித்த இந்திய அடிமைகள், பின்பு இந்தியாவின் அனைத்தும் சொத்துக்களையும் கொள்ளை கொள்ள ஆரம்பித்தனர். அன்றிலிருந்து தொடங்கிய அனைத்திலும் சுதந்திரம் பெற்றதாய் பிதற்றிய இந்தியர்கள்.. இன்றும் சுதந்திர உலகில் இருப்பதாக எண்ணி ஆங்கிலேயர்களுக்கு அடிமைபட்டே கிடக்கிறார்கள். அன்று பொருள்களை அடகு வைத்தார்கள், இன்று மூளையை அடகு வைக்கிறார்கள்.
ஆஹா.. ஆஹா.. என்ன ஒரு அருமை. முட்டாள்களே..! உங்களுக்கு புரியவில்லையா? அல்லது புரியாதது போல நடித்துக்கொண்டிருக்கின்றீரா? எதற்கு இந்தியாவை தேடி தேடி ஓடுகிறீர்கள் என்று எந்த வெளிநாட்டினரிடம் கேட்டாலும் …

பெண்மை

Image
இனியுமென ஈச்சனெ இங்கொரு புலமை
அகலிரு மார்பும் அரிதென சிரிப்பும்
குறையறை பார்வை அஞ்சுமை அற்றல்
இழி உவையறியா ஈ கொணர்ந்து
இலங்கு சரியா தூர் மெச்சுதலோ
இயன்ற சுயத்தான் அவன்...!

இன்று,
மார்புடைத்து மதியிடைத்து
ஒற்றை வாய் கூச்சலில் திரியோன்
காரணம் எவ்விடை..?
காய்ச்சலோ.. அற்று காவிடை கூச்சலோ?
மாத்துணை மவ்விடல் எவ்விடம்
கூச்சலினை கூவிசை எவ்விடமோ?

மாற்றம் தரித்துணை காரியம் எதுவோ
மாச்சிடை கொண்ட மாண்புற்றோன் பண்பு
எச்சிறை கொண்டதோ அச்சிறை ரசிக்கிலான்
தவிப்பும் தண்மையுதாய்- பழைமறந்து
புதியதோர் உலகம் பேண்டல்;
கண்டறியா காரணத்தின் விளைவாய்
வாய்மலர்ந்தான் காரணத்தை-'பெண்மை' யென்று;


மாறாவொன்று மாற்றமொன்றே
மாற்றத்தையும் மாற்றுவது பெண்மையொன்றே...!

-தம்பி கூர்மதியன்