Skip to main content

Information Technology- I am very Proud


மீசை துளிர்விட்டு அரும்பாக உருப்பெற்று முழுதாய் ஒரு ஆண் வடிவம் பெருவதற்கு முன்பாக நுனி நாக்கில் ஆங்கிலமும் ஒழுங்காய் கோதிவிடாத முடியுடன் ஒரு குறிக்கோள் இல்லாமல் திரியும் ஆயிரம் இளைஞர்களை  நீங்கள் சென்னை மாகாணத்தில் பார்க்கலாம். யார் இவர்கள்?என்று உங்களுக்கு ஒரு யோசிக்கும் எண்ணம் இருந்தால் எதற்கு வீணாக சிரமம் கொள்கிறீர்கள்? நானே சொல்லிவிடுகிறேன். அவர்கள் IT கம்பேனி என்று சொல்லப்படும் அந்நியர்களுக்கு பொதி சுமக்கும் கழுதை கூட்டமாகவே இருப்பார்கள்.


அன்று மிளகில் ஆரம்பித்து வியாபித்த இந்திய அடிமைகள், பின்பு இந்தியாவின் அனைத்தும் சொத்துக்களையும் கொள்ளை கொள்ள ஆரம்பித்தனர். அன்றிலிருந்து தொடங்கிய அனைத்திலும் சுதந்திரம் பெற்றதாய் பிதற்றிய இந்தியர்கள்.. இன்றும் சுதந்திர உலகில் இருப்பதாக எண்ணி ஆங்கிலேயர்களுக்கு அடிமைபட்டே கிடக்கிறார்கள். அன்று பொருள்களை அடகு வைத்தார்கள், இன்று மூளையை அடகு வைக்கிறார்கள்.

ஆஹா.. ஆஹா.. என்ன ஒரு அருமை. முட்டாள்களே..! உங்களுக்கு புரியவில்லையா? அல்லது புரியாதது போல நடித்துக்கொண்டிருக்கின்றீரா? எதற்கு இந்தியாவை தேடி தேடி ஓடுகிறீர்கள் என்று எந்த வெளிநாட்டினரிடம் கேட்டாலும் அவன் சொல்லுவது ‘’இந்தியர்கள் திறமைசாலிகள்.. உழைப்பாளிகள்’’ என்று. சொல்லும் போது பெருமையாக இருக்கிறதா? இருக்க வேண்டும். அப்போது தானே பலியாக முடியும். ஒன்று புரிந்துகொள்ளுங்கள். கசாப்பு கடையில் ஆட்டுக்கு நல்ல சாப்பாடு போடுவது பூஜை செய்வதற்கு அல்ல.. கறியாக்க மட்டுமே…!

அந்த காலத்தில் ராஜாக்களை கைக்குள்ளே போட்டுக்கொண்ட ஆங்கிலேயரின் தந்திரம் தெரியும் தானே உங்களுக்கு? உங்களை போன்ற பலசாலி இல்லை. உங்களை போன்ற திறமை மிக்கவர் இல்லை இல்லை என்று புகழாரம் சூட்டியே தலையில் காகத்தின் எச்சத்தை பூசி சென்றவர்கள். அதுதானே நாகரீகம், வளர்ச்சி, மேம்பாடு என்னும் போக்கில் நடந்துகொண்டிருக்கிறது?

நமக்கும் அவனுக்கும் என்ன ஒரு வித்தியாசம் பாருங்களேன். வேலை செய்வதற்கு அவன் நம்மை தேடி வருகிறான், உழைத்த பணத்தை போட நாம் அவனை தேடி போகிறோம். அட அட அட… என்னமா அடங்கி போகிறோம்.
அமெரிக்காவில் எந்த ஒரு வெள்ளையனும் வெள்ளி சாயங்காலம் மேல் வேலை செய்தது கிடையாது. அதை விட்டால் திங்கள் கிழமை தான். ஆனால் ஏழு நாளும் அவர்களுக்காக உழைத்து கொட்டிக்கொண்டிருக்கும் எத்தனை இளைஞர்களை நான் காட்ட வேண்டும் உங்களுக்கு?

இது ரொம்ப பெருமை என்று வேற இக்கால குடும்பத்தினர் நினைத்துக்கொள்வது தான் இருப்பதிலே கொடுமையிலும் கொடுமை. எப்பா.. யோசிங்க. தடுக்கி வழுந்தவன் எல்லாம் இப்போ ITன்னு தான் சொல்லுறான். குப்பையில குப்பையா சேர்ந்து கெடக்க பெருமை படுற ஒரே ஆளுக நீங்களா தான் இருப்பீங்க. எங்க இருந்து என் பெருமைக்குரிய இந்திய தேசத்தில் இந்த ஆங்கிலேய ஆளுமை தொடங்கியது தெரியவில்லை. ஆனால் இது கிள்ளி எரியப்பட வேண்டிய ஒன்று.

IT என்பது சர்வதேச தரத்தில் இந்திய தேச மதிப்பை உயர்த்துகிறது என்பது சரி. ஆனால் அதற்காக அவனுக்கு அடிமையாகி போக நாம் ஒன்றும் அவனில் எச்சில் பருக்கையை திங்க ஓடி வந்த காகம் கூட்டமில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். சுயம் இழந்து ஆங்கிலேயரிடம் பேச்சு வாங்கி ஏச்சு வாங்கி நாம் சாதித்து என்ன கிழித்திட போகிறோம். எச்சில் காசு நமக்கு வேண்டுமா என்ன?


வீட்டில் விசேசம் என்றாலும் பங்கு கொள்ள முடியாது. வீடா வேலையா என்றால் வேலைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். வீட்டில் அம்மா ஒரு வார்த்தை பேசினாலே பொருத்துக்கொள்ளமுடியாத நாம் நம்மை அடிமைபடுத்தி மகிழ்ந்த ஒரு கூட்டத்திற்கு சலாம் போட்டு சிரித்து வாழ்கிறோம். சீ.. சொல்லும் போதே நமது நாக்கில் அவனது மலம் தடவுவது போல கொமட்டி கொண்டு வரவில்லையா?


கல்லூரி படிப்பு முடிக்கும்போதே கேம்பஸ் என்று ஒன்று வைத்துவிடுகிறார்கள். அந்த நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைத்துவிட்டால் மிக பெருமையாம். அங்கு வரும் நிறுவனங்களில் பெரும்பாலானவை இந்த IT என்னும் நாசக்காரனாகிறான்.
இன்னும் மாணவர்களின் விருப்பம், ஆசை அத்தனையும் குழிதோண்டி புதைத்துவிட்டு ITயை பெருமையாக கருதும் குடும்பத்திற்காக பிடிக்காத வேலையிலும் செக்கிழுக்கும் மாடாக இன்றும் அந்த எருமை மாட்டின் வாழ்க்கை வாழும் இளையோர் எத்தனையோ பேர்.

தாய்மார்களே…! தந்தைமார்களே..! உங்கள் மகன் அல்லது மகள் ஒரு IT கம்பேனியில் இன்ஜீனியராக என்று தலை உயர்த்தி சொல்வதை விட்டுவிடுங்கள். அவன் எச்சில் பருக்கையை ருசித்துக்கொண்டிருக்கிறான். அவன் மட்டுமல்ல நீங்களும் தான். மூளையையும் மானத்தையும் அடகு வைத்து எச்சில் வாங்கி திண்பதற்கு தான் பெருமை வேண்டுமா? சீ… இனியொருமுறை ITயில் வேலைபார்க்கிறான் என்பதை பெருமையாக சொல்லாதீர்கள். தலையை குனிந்துகொண்டு தரையை மட்டுமே பார்த்துகொண்டு சொல்லுங்கள். அப்படி சொல்வதற்கு கூட நீங்கள் வெட்டிக்கொள்ள வேண்டும்.

கண்ணாடி கட்டிடத்தில் க்ககூஸ் கழுவினாலும் பெருமைதான் என்று நினைத்தால். இதுபோல ஆயிரம் இழிவு கட்டூரை எழுதினாலும் உங்கள் பல் இளிப்பு நிற்காது என்பதை நான் அறிவேன். எனக்கு ஆயிரம் வேலை இருக்கிறது… விட்டுவிடுங்கள். நீங்கள் பல் இளிப்பை தொடருங்கள்.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…