அரசியல்


நினைவில் ஒரு அரசியல் உண்டு
அதை தினந்தோறும் நித்திரையில் தரிசிக்கிறேன்...!
நினைவோ அது கனவு..
கனவாக மட்டுமே முடியாது
புதியதோர் புரட்சியென மாரிட்டுக்கொள்ள வேண்டும்...

அரசியலோர் கழிவு...
அரசியலிலேது பொழைப்பு என்றுரைக்கும்
மாற்றோரே...
எங்கும் எதிலும் அரசியலே...
கழிவில் இறங்காதே என்று
கழிவில் குளித்துக்கொண்டே சொல்கின்றீர்கள்..!

சிறியதோர் சிசு
உலகை அறிய தொடங்கும்போது
''என்னவாக விரும்புகிறார்....?'' என்ற கேள்விக்கு
அரசியல்வாதி என்ற பதில் வரும்நொடிக்காக
போராடுகிறேன்... எத்திசையிலும் எந்நேரத்திலும்..!

எமக்குள்ளே தீயாக..
என்னை எரியூட்டிக்கொண்டிருக்கும்
அக்கனலை புகையேற்றிக்கொண்டிருக்கிறேன்
சீரிட்டு வருகிறேன்..
அரசியலிலோர் மாற்றம் தரிக்க...!

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!