என் ஊரு..


இன்னும் ஓர் இரவு...
நிசப்தம் அறியாதொரு இருட்டின்
இடையில் அங்கொன்றாய்
இங்கொன்றாய் கீச்சுதல் சப்தம்...!

சில்லென்ற காற்று
அசைந்தாடும் மேகம்...
வானம் அவதரித்தா?
அற்று,
பூமி பூத்தரித்தா?

முற்றில்லா பனிதுளி முட்டு
எனை முழுதுமாய் காட்டி மறையும்...
தப்பில்லா காலடி சதியோடு
ஒன்றில்லா பலரது நடை...!

முக்குவீடு கிட்டு மாமா குறட்டை
எங்கவூரு அய்யனாரு...
ஊரெல்லாம் அடஞ்சதும் அசராம கூச்சலிடும்...!

மச்செல்லாம் கூட்டஞ்சேர
அப்பம்மா விளையாட்டு விளையாண்ட
அக்காளும் அண்ணாரும்
ஊரவுட்டு ஓடி நாளாச்சு....!

காத்தெல்லாம் புறந்தள்ள
முன்னால நான் ஓட...
வெற்றிமுற்றான கோவில் சொவரு
பட்டுப்போயி பல் இளிக்குது...
\
கோவணம் அவிழ்ந்தோட
புடிக்க நீந்தோடி-வென்று
அம்மணமாய் ஆட்டம்போட்ட ஆறு..
வயதாகி உடம்பெல்லாம் சுருக்கம் தள்ளுது...!

தெருவெல்லாம் இருபது வீடு..
இருபதிலும் என் கால்தடம்..!
மத்திசோறு பாண்டி வூட்டுல
ராச்சோறு செந்தூராண்டையில,
நச்சுக்கொட்டு எதிர்வூடு வாத்தியார்ட்ட..
மாட்டுபொங்கல் கணக்கு மாமாவூட்ல..
மாறாம நெஞ்சுல மணத்துக்கெடுக்கு!!

கம்பி சைக்கிள் முன்னால
கந்து மாமா உக்கார வைக்க...
கு%^ மாமா... கு%^ மாமா என்று கத்தியே
கந்து மாமா கு%^ மாமா ஆனதை எப்படி சொல்ல...!?

வூட்ட பூட்ட துணியெடுத்து
பாம்ப கண்டு நடுங்கிபுட்டு...
பாம்ப புடிச்சுபுட்டன்னு இன்னைக்கும் பீலா வுடும்
என் வீரத்த எப்படி மெச்ச?

இந்த தெரு தொடங்கி
அடுத்தாது தெருவரைக்கே
நீண்டு போன எங்கவூட்டு தோட்டம்..
பாம்பு, பூரான் வூடான கதைய எங்கிட்டு சொல்ல...

ஊரைவுட்டு போயி வருசம் பலவாச்சு..
ராவோடு ராவா வந்திருக்கோம்
சொன்னதெல்லாம் மாறிப்போச்சு
இன்னும்,
மாற்றம் என்னவென மனசுக்குள்ளே கேள்விதட்ட
திண்ணையில ரா கழிக்க
படுத்து வானம் பாத்துகெடக்கேன்....!
என் சிறுவயசு வூட்டு மடியில...

-தம்பி கூர்மதியன்

Comments

 1. ரொம்ப நாள் கழித்து மண் மணத்தோடு வந்திருக்கேங்க போல, வாழ்த்துக்கள் சார், கிராமிய நடையிலான இக் கவிதைக்கு பின் தொலைந்து போன கிராமத்து அடையாளங்களை கண்முன் காட்டி இல்லை இல்லை கூட்டிச்சென்றது வரிகள், எதிர்வீட்டில் இருக்கும் மனிதரின் அடையாளங்கள் கூட அறியாது வாழும் அப்பாட்மெண்ட் கலராச்சரம் மத்தியில் எத்தனை இயல்புகளை தொலைந்து மனிதன் வாழவேண்டியிருக்கிறது, படிக்கையில் இப்படித்தான் தோன்றியது அதையே தான் பதிவுசெய்தேன் மறுமொழியாய்... அதிகம் எழுதுங்க சார் :) ஹி ஹி

  ReplyDelete
 2. அடங்கொக்கா மாட்ரேசன் வச்சுக்கிற அளவுக்கு ஆயிட்டேங்களா ரைட்டு... :)

  ReplyDelete
 3. அழகான கவிதை.....
  கிராமத்து மண் வாசனை

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..