தொடர் இரவு...


பாதை...
கரும் இருட்டாக ஒரு பாதை..!

நடைபயணம் மேற்கொள்கிறேன்...

சில்லென ஒரு காற்று
செந்தமிழ் மொழி ஊற்று
தந்தன சதியோடு
என் திசை வரும் பாட்டு..!

தீஞ்சுவையென ஒரு மெட்டு
தேன்குரலென எனை தொட்டு
யாதுமே யவனெற்று
யென்னுடன் பயணாகும்...!

திடீர் சப்தம்....

கண்களின் இமை தட்டி
மனதினில் மதி முட்டி
தசைகளும் நடுக்குன்று
விசையறியா வினையாதோ?

தீந்தனம் தீந்தனனா
சந்திர ரௌத்திரமோ..?
தந்தன தந்தனனா
இரவின் சாத்திரமோ...!?

நரங்களும் கூத்திடுமா
எனும் நஞ்சகம் புகுத்திடுதே...
வீழ்வோன் என்றே
வீரர் வசனம் அவிழ்த்திடுத்தேன்........!

கூச்சல் கூரிடை....

வீச்சுதல் வால் கையிடை
தூற்றுதோர் யாரென தூரிடை
அகமுடைத்த கத்தல்
போருக்கான முற்றல்...!

எத்திசை செல்லினும்
வந்திவன் வெல்வான்..
கண்இமை நொடியிலும்\
கண்ணிரை அறுப்பான்...

கோபம்.. வஞ்சகம்..
வாழ்வுடைத்ததோர் சப்தம்
உரக்க உச்சமிட்டு
அகங்கிழித்து ஆர்பரித்தது...

தொடுதல் உணர்வு....

மெல்லிய வருடல்
மனதினில் சிதறல்...
வந்திசை சென்றது
பிதற்றலும் கோபமும்..

புறா கூட்டமொன்று
புறத்தில் பூச்சிடும்...
உலகே மறந்திங்கு
இருட்டில்..
கரும் இருட்டில்..
திடீர் சப்தத்தில்..
கூச்சல் கூரிடையில்..
தொடுதலோடு தொடர்கிறது
இனியதொரு பயணம்
அந்த தொடர் இரவில்....

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

முதல் நாள் பள்ளி - தகப்பனாகிய நான் எழுதும் *2

அதிகாரி சாமி