Posts

Showing posts from October, 2012

தினத்துளி அலுவல்...! (1)

Image
அலுவலக பணி. பரபரவென ஒரு பக்கம் அலைபேசி ஒலித்துக்கொண்டிருக்க, என் கைகள் தட்டச்சின் மேலே பரதம் ஆடிக்கொண்டிருந்தது. அருகில் மது எந்தன் ப்ராஜெக்ட் சீனியர் பரபரவென வேலைபார்த்துக்கொண்டிருந்தார்.

ஒவ்வொரு முறை நான் மெயில்களுக்கு பதில் அனுப்பும்போதும் ஒரு முறை அவரிடம் சரிபார்த்துவிட்டு அனுப்புவதை ஒரு பழக்கமாக வைத்திருந்தேன். மெயில்களுக்கு பதிலெல்லாம் போட்டுவிட்டு இறுதியில் கண்டறிந்து BUGS-ஐ லோட் பண்ண ஆரம்பித்தேன். அருகில் மது,

''முடிச்சாச்சா....??''

''தோ.. மது.. கோயிங் டு பீ ஓவர்..''

''சரி... எடுத்துட்டு ரிப்போர்ட் அனுப்பிடுங்க.. நான் ஸ்டேடஸ் ரிப்போர்ட் ரெடி பண்றேன்...''

''ஓகே மது.. 2 மினிட்ஸ்...''

பரபரவென அடித்த என் கைகள் ஒருவழியாக லோட் பண்ணி முடித்துவிட்டு ரிப்போர்ட் எடுத்து அனுப்பிவிட்டேன். இனி மது ஸ்டேடஸ் ரிப்போர்ட்டை முடித்துவிட்டால் வீட்டுக்கு கிளம்பிவிடலாம். என் வீடு தாம்பரம் அருகில் இருக்கிறது. ஆபிஸ் மணப்பாக்கத்தில் இருக்கிறது. அரை மணி நேரத்தில் சென்றுவிட கூடிய தூரம் தான். ஆனால் சென்னைக்கு உரித்தான அந்த ட்ராஃபிக்கில் கண்ட…

வானம்

Image
பொதுவாய் ஒரு வானம்..
அகண்டாலும் வெறுப்பு
அழுதாலும் வெறுப்பு....
ஒற்றை நடுநிலையில் ஒய்யாரம் கொள்ள
வானம் வயோதிகன் அல்ல...
வன் போர் வலிமை
குன் சேர் கோவம்
திரண் சேர் தேயறியான்....!

ரௌத்திரம் பழகுண்ட
ரம்மியவான்.............

-தம்பி கூர்மதியன்