வெவசாயம்


முட்டு கட ராவுத்தரு..
முட்டு கட ராவுத்தரு..
மூச்சிரைக்க ஓடியாந்து
சொல்லி முடிக்காம திணருதுங்க...
முட்டு கட ராவுத்தரு.......

ரா சொல்லு சொல்ல
கா சொல்லு அள்ள
மீ சொல்லு கொல்ல
மச்சுல சுருக்குதள்ளி
மாச்சுட்டு போனாம்பள...!

வெள்ளாம கூடலங்க
வெஞ்சுரமும் சேரலங்க
பருத்தி பனங்கையெல்லாம்
பல்லை இளிக்குதுங்க...

சோறு அண்டலயே
வானம் தொறக்கலயே
வெறிச்சோடி போனது
பூமி மட்டுமில்ல
இந்த மனுசப்பய மனசுமுங்க...

பூமி தெரியுமுங்க..
வானம் தெரியுமுங்க..
வங்கம் அறியாம
வசையிக்கு வாச்சபுட்டாங்க...!

பங்கம் வயித்துக்கா.?
வந்து வாச்சதுக்கா.?
பெத்து போட்டதுக்கா.?
பேதலிச்சு போச்சுங்க
இந்த இயற்கை சாபத்தால...

கடங்காரன் காச்சுபேச்சு..
கட்டி காத்த மானமும்
காதடிங்கி போச்சுதுங்க..
சொல்லடங்கி போகுமுன்ன
உடம்பு கூசுதுங்க...!!

வாச்ச பொட்டப்புள்ள
முந்தானை கேக்குறாங்க..
பெத்த ரெண்டும்
புரியாம முழி பிதுங்கி நிக்குதுங்க..!

ஊரு சனம் காதுக்குவந்து
ஊருகத நிக்குதுங்க..
மனச தேத்திக்க சொல்ல
வண்டிகட்டி வாராக வக்கனையாக.!

பொத்தி அழுதுகிடுவார்
மத்தியில குறுகிடுவார்...
ஊர் சொல்லி களையாத ஆம்பள
உடஞ்சு போனாருங்க..

பொஞ்சாதி பாசமுங்க
புள்ளையுவோ நேசமுங்க..
போன மானத்த புடிச்சுவர
சொந்த கூட்டஞ்சேத்து மச்சுல தொங்கிட்டாருங்க...!

---
தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..