தேசிய கீதம்


ஜன கன மன அதிநாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப சிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல பங்கா
விந்திய ஹிமாச்சல
யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா
தவ சுப நாமே ஜாஹே
தவ சுப ஆஸிஷ மாஹே
காஹே தவ ஜெய காதா
ஜன கன மங்கல தாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே!
ஜய ஜய ஜய ஜய ஹே!


---


ஜன கன மன அதிநாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா

அதிக படியான மக்கள் கூட்டத்தின் மனதில் குடிகொண்டிருப்பவள் நீயே.. இந்த இந்திய பாரத நாட்டுக்கும் பாக்கியமான செல்வங்களும், மங்கலமும் அருளுபவள் நீயே...!
பஞ்சாப சிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல பங்கா

உன் பெயரை சொல்லும் போதே பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியர், திராவிடர், ஒரிசா, வங்காளத்தினருக்கும் ஒரு வித கிளர்ச்சி தோன்ற செய்யும்.விந்திய ஹிமாச்சல
யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா

உன் பெருமையின் ஒலி விந்திய, இமய மலைகளிலும் எதிரொலித்து யமுனை, கங்கை போன்ற புனித நதிகளோடு இசையூடு இசையாக கரைந்தோடி இந்திய பெருங்கடலின் ஒவ்வொரு அலை எழுச்சியிலும் கலந்து பாய்ந்து வணங்கப்படுகிறது.

தவ சுப நாமே ஜாஹே
தவ சுப ஆஸிஷ மாஹே
காஹே தவ ஜெய காதா

உனது மங்கலகரமான பெயரை என்றும் நாங்கள் போற்றி  பாடுகின்றோம். உனது அருளை வேண்டி எப்போதும் காத்து நிற்கின்றோம். உன்னுடைய மாபெரும் வெற்றியை நோக்கியே நாங்கள் பாடுகின்றோம்.


ஜன கன மங்கல தாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே!
ஜய ஜய ஜய ஜய ஹே!

இந்திய மக்களுக்கு மக்களுக்கு மகிழ்ச்சியை அள்ளி தருகின்ற தாயே .. வெற்றி உனக்கே...!  இந்திய நாட்டிற்கு பாக்யங்கள் தருபவளே... வெற்றி உனக்கே... வெற்றி உனக்கே .. வெற்றி உனக்கே... என்றும் என்றென்றும் வெற்றி வெற்றி உனக்கே.............!


---
தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!