என் எழுத்து விலகிவிட்டது....!


என் எழுத்துக்கள் என்னை விலக்கி விட்டு சென்று கொண்டிருக்கிறதா? நினைவு இருக்கும் வரை எனது காலங்களை பின்னோக்கி யோசித்துவிட்டேன். எனது எழுத்துக்கள் மட்டுமே என்னை தனிமை படுத்தி காட்டிருக்கிறது இத்தனை வருடங்களில். எனது எல்லா உறவுகளை விட்டும் தனிமையில் இருந்திருக்கிறேன். ஆனால் அச்சமயங்களில் கூட எனது எழுத்து என்னை விட்டு விலகவே இல்லை. என்னை விட யாரும் சிறப்பாக எழுத முடியாது என்று பல சமயம் என்னை நானே வியந்துகொள்வது உண்டு. ஆனால் எனது எழுத்தின் வீரியம் நாளடைவில் குறைந்து கொண்டே வருகிறது.

இனி எனது பேனா முனையோ, கம்ப்யூட்டர் கீபோர்டோ எனது கோபம் நிறைந்த எழுத்துக்களை செலுத்தாது போல. மனதில் கொழுந்துவிட்டுக்கொண்டிருந்த தீ அணைந்து தண் நிலை பெற்றுவிட்டது போலும். என்ன காரணம்? 

பொது சேவை.. நூலகம்.. எழுத்து.. என்று திரிந்த எனக்கு எல்லாம் மங்கியபோல ஒரு உணர்வு வருகிறதே. முட்டி மோதி எழுத்துக்களில் திரித்து கோபத்தின் கனலாய் கொப்பளித்த எனது எழுத்துக்கள் விட்டு சென்றுவிட்டனவா? இமை மூடாமல் இரவும் பகலும் என்னை உசுப்பிவிட்டுக்கொண்டிருந்த எமது எழுத்து எந்த மூலையில் முடங்கி கிடக்கிறது.

யோசித்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன். எனது அலைப்பேசி மணி ஒலித்தது. அந்த பக்கம் எனது தோழி ஷோபனா,

''காலையில புது Application Build வந்துச்சா...?''

''ம்ம்.....''

''டெஸ்ட் கேஸ் எழுதிட்டியா...?''

''ம்ம்..''

''எக்ஸிக்யூட் பண்ணிட்டியா....??''

''ம்ம்...''

''மதியம் சாப்பிட்டியா...?''

''ம்ம்...''

''QC-Formatல டெஸ்ட் கேஸ் எழுதணும்னு சொன்னியே... அது என்னாச்சு..?''

''எழுதிட்டே இருக்கேன்...''

''புது requirement வந்திருக்கா...?''

''ம்ம்...''

''அதுக்கு டெஸ்ட் கேஸ் எழுதணுமா?''

''ம்ம்...''

''எழுதிட்டியா...?''

''ம்ம்.. எழுதிட்டேன்...''

''Re-testing எல்லாம் முடிச்சுட்டியா??''

''ம்ம்...''

''Smoke Test முடிச்சுட்டியா...?''

''ம்ம்...''

''Regression Testing ஆரம்பிச்சாச்சா..?''

''ம்ம்....''

''Integration Testing முடிச்சுட்டல...?''

''ம்ம் மா...''

''Re-test status அனுப்பிட்டியா??''

''ம்ம்....''

''நேத்து மீட்டிங்க்கு MOM போட்டியா..?''

''ம்ம்... மது பண்ணிட்டாங்க''

''EDS report எடுத்து அனுப்பிட்டியா..''

''ம்ம்.. மது பண்ணிட்டாங்க...''

''RCA எடுத்துட்டியா...?''

''ம்ம்...''

'' உனக்கு assign ஆன RFC எல்லாம் முடிச்சுட்டியா...?''

''ம்ம்...''

''RFC ஸ்டேடஸ் அப்டேட் பண்ணிட்டியா??''

''ம்ம்..''

''Bugs eh ரீஓபன்.. க்ளோஸ்.. பண்ணிட்டியா??''

''ம்ம்...''

''புது Bug போஸ்ட் பண்ணிட்டியா??''

''ம்ம்...''

''Check point status அனுப்பியாச்சா...?''

''ம்ம்...''

''Check point callல என்னாச்சு... TL கூட இன்னைக்கும் சண்டை இல்லையே...''

''சண்ட தான்...''

''என்னடா... ச்சூ.. சரி QA call Agenda அனுப்பியாச்சா...?''

''ம்ம்...''

''QA கால் முடிச்சுட்டியா...?''

''ம்ம்...''

''New Bug லிஸ்ட் TL க்கு அனுப்பிட்டியா?''

''ம்ம்...''

''Clarifications-அ  BAக்கு அனுப்பிட்டியா??''

''ம்ம்...''

''Bug ரிப்போர்ட் எடுத்துட்டியா..?''

''ம்ம்..''

''டெய்லி ஸ்டேடஸ் ரிப்போர்ட் அனுப்பிட்டியா...?''

''ம்ம்...''

''வீக்லி ஸ்டேடஸ் ரிவீய்வ்க்கு அனுப்பியாச்சா...? எதனா மாத்த சொன்னாங்களா?''

''ம்ம்.. சொன்னாங்க..''

''மாத்தி அனுப்பிட்டியா...??''

''ம்ம்...''

''எப்பா.. மூச்சு வாங்குதுடா.. எப்படியோ இன்னைய டாஸ்க் எல்லாம் முடிச்சுட்ட போல...?''

''என் PM கூட இப்படி கேட்டிருக்கமாட்டாரு... என்னா கேள்வி கேக்குற யப்பா.. இது 25% தான்... இன்னும் டாஸ்க் இருக்கு...''

''டே... காலையில 9.30க்கு வந்த டா... மணி நைட் 10.30 டா...''

''இனி நாளைக்கு தான்.. கிளம்பிட்டேன்...''

''ம்ம்... நீ இனி பஸ் புடிச்சு.. கிண்டிக்கு போயி.. அங்கிருந்து டிரெயின் புடிச்சு சானடோரியத்துல இறங்கி... 2கி.மீ., வேற நடந்து போயி... 12 க்கு மேல ஆகிடுமே டா...''

''ம்ம் ஆமா.. இதான டெய்லி நடக்குது... மார்னிங் KT எடுக்கணும்... சீக்கிரமா வரணும்...''

''வெளங்குச்சு... எதனா சாப்பிட்டு போ டா..''

''ம்ம் மா... பை''

----------


அலைப்பேசியை அணைத்துவிட்டு எனது எழுத்து மங்கிபோனதிற்கு என்ன காரணம் என யோசித்துக்கொண்டே நடந்து செல்கிறேன்...

என் எழுத்து என்னை விட்டு விலகாது. நான் முன்பு போல அதிகமாக எழுதாமல் இருக்கலாம். ஆனால் பேனா முனையை பிடித்தால் எந்தன் கோபமும் இன்றும் கொப்பளித்து வெளிவர தயாராக இருக்கிறது.

--
தம்பி கூர்மதியன்.

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!