ஒற்றை கேள்விக்குறி....!நிரையிடையே ஒரு சப்தம்
நிஜத்திடையில் என்றும் ஒரு கனா..!

வீணாக..
வியப்பாக..
விசித்திரமாக...
இன்னும் வீரியமாக.....!!

மாறாது.. 
என்றும் எதிலும் எதுவும்..
மாறவே மாறாது...
இருப்பினும்,
மாற்ற துடித்திடும் மனமும்
அதற்கு உந்து கொடுத்திடும் மூளையும்
மாறிக்கொண்டே இருக்கிறது..

கடவுள் மனிதனாய் வருவான் என்றான்...
நான் பார்க்கும் படம் அனைத்திலும்
கடவுள் மனித உருவிலே இருக்கிறான்...!
அப்படியானால்,
கடவுள் இனி ஏன் மனிதாக வேண்டும்?

கடவுள் மனிதற்றாதல் சூழல்..
இங்கோ...
மனிதனே கடவுளாய் போற்றுதல் போற்றுதாம்..
பிளவுண்ட மதங்களிலே இதிலோர் மாற்றுப்போக்கு..
ஒற்றுமை... மனிதனே கடவுள் என்பதில் சமரச எண்ணம்..!

காவி உடை மாற்று...
ஒரு வெள்ளை உடை...
கருப்பு உடை மாற்று
மனம் முழுதுமே கருப்பாய் முழுக்கு..!

பகட்டு காட்டும் பக்தி..
அதற்கு உருண்டு காட்டும் மனம்...!
பக்தி போர்வையில் ருசித்திடும் பொய்மையும்
வாழ்க்கை ஓட்டத்தில் கசத்திடும் மெய்மையும்
ஒன்றொன்று ஏளனித்து சிரிக்கையில்.....
மனித வாழ்வே ஒரு ஒற்றை கேள்விக்குறி...!!!!!

தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!