Posts

Showing posts from April, 2013

கல்வி - கல்வியா???

Image
கல்வி அறிவை தரும். அதை போதிக்கும் இடம் பண்பை தரும்..!! அடடே...!! ஆமா ஆமா.. என்று தலையை நீங்கள் ஆட்டுபவராய் இருந்தால்.. அருகில் இருக்கும் கடைக்கு சென்று தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வேண்டும் என்று கேட்டு வாங்கி உங்கள் முகத்தோடு ஒட்டி வைத்து ஃபோட்டோ  பிடித்து முகநூலில் போட்டுக்கொள்ளுங்கள்.

கல்வி பணத்தை தரும்.. அதை போதிக்கும் இடம் அதற்கான அடிமாடுகளுக்கு இருப்பிடம் தரும்...! இதுதான் இப்போதைய நிலை. இவன் எதை பற்றி பேசுகிறான்.. வழக்கமான கல்வி வியாபாரமாகிவிட்டது கதைதானோ...!!? என்று நீங்கள் யோசித்தால் உங்கள் அபயோகிதமான மூளைக்கு ஒரு சலாம்.. ஆமாம்.. அதைதான் பேசுகிறேன்....!! நான் யார் இதை பற்றி பேச என்று எண்ணுகிறீர்களா...!! அங்கே ஏசி ரூமில் உட்கார்ந்துகொண்டு நாடு சீரழிய முதற் காரணமாக இருக்கும் அதே ஐடி., துறை இளைஞனில் ஒருவன் தான் பேசுகிறேன்... !! வழக்கமான மொழிநடையுடன் - ''இந்த நாடு உருப்புடாது பா...!!''

சில வருடங்களுக்கு முன்பு நான் எனது பள்ளியில் அமைதியாக உட்கார்ந்துகொண்டிருந்தேன். அப்பொழுது, எனது ஆசிரியை ஒருவர் வந்து எனக்கு மேலிடத்திலிருந்து அழைப்பு வந்திருப்பதாக சொன்னார். அட நாமு…

முள்ளை தேடிவந்த முல்லை.!!

Image
ஒற்றை வார்த்தை ஒன்று ..
ஓங்கி ஒய்யாரமாய்
உச்சி முடி நுகர்ந்து
செவி வழி மூளை பாய்ந்து
உள்ளுக்குள் நர்த்தகை ஆடுது...!

கையில் பிடியிருந்த அனைத்தும்
ஒற்றை நொடியில் செயலற்று
கால்கள் பம்பரமாய்
அங்கே ஓர் அரங்கேற்றம் செய்யசொன்னது..

தண் நிலவு தரணியிலே
அந்த தருணத்திற்காக தான் காத்திருந்ததோ?
வெண்பஞ்சு காற்றும்
எனை தூக்கிச்செல்ல தவமிருந்ததோ?

அன்னநடையாய் அவளொருத்தி..

சொன்ன நொடி மாளாதாய்
எனை சொக்க வைத்து
சொல் திக்க வைத்து
மூளை மக்க வைத்து...
வெட்கிகொண்டாளே...!!!

அறியாது ஒட்டிக்கொண்ட
அந்த பொன்முருவல் சிரிப்பினூடே
என் ஆதியும் அந்தமும் அவிழ்ந்தோடியதே..!!

முறைத்து நோக்கிய-அந்த
முட்டை விழிகளிலே
எனை முழுதுமாய் மூழ்க செய்த
என் முழுதான பௌர்ணமி நிலவோ...!!?

சுடராத அந்த இரட்டை உதடுகள்
அன்று மட்டும்
சுடரிட்டு சுர்ரிட்ட காட்சியானதே...!!

என் சொல்ல அவளை..
இன்று,
என்னவள் என்று சொன்னேன்...!!
நாளை-என் உறவு
நம்மவள் என்று சொல்லும்...!

எண்ணிக்கொண்டே நகைத்துக்கொள்கிறேன்...!!!!!

-தம்பி கூர்மதியன்

கோபம்

Image
அப்பாகைபிடித்து நடந்துகொண்டிருந்தேன் ..
அதுஒருநீண்டதார்சாலை.. சுற்றிமரங்கள் , ஒருசாரல்வானிலை ...!!
நடக்கும்அடிஅனைத்திலும் அப்பாவின்ரப்பர்செருப்புதந்தது "