கோபம்
அப்பா  கை பிடித்து 
நடந்து கொண்டிருந்தேன் ..

அது ஒரு நீண்ட தார் சாலை..
சுற்றி மரங்கள் ,
ஒரு சாரல் வானிலை ...!!

நடக்கும் அடி அனைத்திலும் 
அப்பாவின் ரப்பர் செருப்பு தந்தது 
"தளக்" "தளக்" சத்தம் ..
எந்தன் தோல் செருப்பிலிருந்து எழுந்தது 
"ஜவ்"  "ஜவ்" என்னும் மெல்லிய இசை கூச்சல் ...!!

தொலைதூரம் நடந்துகொண்டிருந்த நான் 
அப்பாவிடம் ,
"எங்கே அப்பா போகிறோம்..? ஏன் ஒரு மாதிரி இருகிறீங்கள்?"
என்று கேட்டேன்...!!
என் முடியை கோதிவிட்டு 
ஒரு சிரிப்பு சிரித்து ..
"மன்னிச்சுடு டா .....! அம்மாவை எனக்கு ரொம்ப புடிக்கும் டா .."
என்று சொல்லிவிட்டு நடக்க தொடங்கினார் ...!

காலை நேரத்து அம்மா சண்டையின் 
அப்பாவின் கோவம் ...!!
இப்போது மண்டியிட்டு எங்கள் முன்னால் நிற்கிறது..!

அன்றிலிருந்து...!
தனியாக  அந்த தார் சாலையிலே நான் நடந்துகொண்டிருகிறேன்..!!
என் அப்பாவின் இடத்தை எடுத்துக்கொண்டு....!! 

-தம்பி கூர்மதியன் 

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி