முள்ளை தேடிவந்த முல்லை.!!


ஒற்றை வார்த்தை ஒன்று ..
ஓங்கி ஒய்யாரமாய்
உச்சி முடி நுகர்ந்து
செவி வழி மூளை பாய்ந்து
உள்ளுக்குள் நர்த்தகை ஆடுது...!

கையில் பிடியிருந்த அனைத்தும்
ஒற்றை நொடியில் செயலற்று
கால்கள் பம்பரமாய்
அங்கே ஓர் அரங்கேற்றம் செய்யசொன்னது..

தண் நிலவு தரணியிலே
அந்த தருணத்திற்காக தான் காத்திருந்ததோ?
வெண்பஞ்சு காற்றும்
எனை தூக்கிச்செல்ல தவமிருந்ததோ?

அன்னநடையாய் அவளொருத்தி..

சொன்ன நொடி மாளாதாய்
எனை சொக்க வைத்து
சொல் திக்க வைத்து
மூளை மக்க வைத்து...
வெட்கிகொண்டாளே...!!!

அறியாது ஒட்டிக்கொண்ட
அந்த பொன்முருவல் சிரிப்பினூடே
என் ஆதியும் அந்தமும் அவிழ்ந்தோடியதே..!!

முறைத்து நோக்கிய-அந்த
முட்டை விழிகளிலே
எனை முழுதுமாய் மூழ்க செய்த
என் முழுதான பௌர்ணமி நிலவோ...!!?

சுடராத அந்த இரட்டை உதடுகள்
அன்று மட்டும்
சுடரிட்டு சுர்ரிட்ட காட்சியானதே...!!

என் சொல்ல அவளை..
இன்று,
என்னவள் என்று சொன்னேன்...!!
நாளை-என் உறவு
நம்மவள் என்று சொல்லும்...!

எண்ணிக்கொண்டே நகைத்துக்கொள்கிறேன்...!!!!!

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!