கல்வி - கல்வியா???கல்வி அறிவை தரும். அதை போதிக்கும் இடம் பண்பை தரும்..!! அடடே...!! ஆமா ஆமா.. என்று தலையை நீங்கள் ஆட்டுபவராய் இருந்தால்.. அருகில் இருக்கும் கடைக்கு சென்று தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வேண்டும் என்று கேட்டு வாங்கி உங்கள் முகத்தோடு ஒட்டி வைத்து ஃபோட்டோ  பிடித்து முகநூலில் போட்டுக்கொள்ளுங்கள்.

கல்வி பணத்தை தரும்.. அதை போதிக்கும் இடம் அதற்கான அடிமாடுகளுக்கு இருப்பிடம் தரும்...! இதுதான் இப்போதைய நிலை. இவன் எதை பற்றி பேசுகிறான்.. வழக்கமான கல்வி வியாபாரமாகிவிட்டது கதைதானோ...!!? என்று நீங்கள் யோசித்தால் உங்கள் அபயோகிதமான மூளைக்கு ஒரு சலாம்.. ஆமாம்.. அதைதான் பேசுகிறேன்....!! நான் யார் இதை பற்றி பேச என்று எண்ணுகிறீர்களா...!! அங்கே ஏசி ரூமில் உட்கார்ந்துகொண்டு நாடு சீரழிய முதற் காரணமாக இருக்கும் அதே ஐடி., துறை இளைஞனில் ஒருவன் தான் பேசுகிறேன்... !! வழக்கமான மொழிநடையுடன் - ''இந்த நாடு உருப்புடாது பா...!!''

சில வருடங்களுக்கு முன்பு நான் எனது பள்ளியில் அமைதியாக உட்கார்ந்துகொண்டிருந்தேன். அப்பொழுது, எனது ஆசிரியை ஒருவர் வந்து எனக்கு மேலிடத்திலிருந்து அழைப்பு வந்திருப்பதாக சொன்னார். அட நாமும் பள்ளிக்குள்ள பாப்புலார் ஆகிவிட்டோம் என்னும் கர்வத்தோடு அந்த முக்கிய மேலிட புள்ளி அறைக்கு சென்றேன்.. எனக்கு முன்னரே அங்கு ஒரு 10 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அருகில், மதுரையில் இருந்து கிளம்பி வந்த கூலிப்படை போல ஒரு நான்கு பேர் கொண்ட குழு முறைத்து பார்த்தபடி நின்றது.

அது வரை ஆர்பரித்த எனது கால்கள்.. ஆழிக்குள்ளே அடித்திட்டது போல அலைமோதியது. உள்ளே நுழைந்தேன்.... அந்த 10 பேருக்கு கிடைத்த அதே காந்த(.!!) பார்வை வரவேற்பு எனக்கும் கிடைத்தது. பேச ஆரம்பித்த முக்கிய புள்ளி,

''You all failed in 9th Annual exam. You have to study one more year in 9th. புர்யுதா..?'' என்றார்.

நாங்கள் பதினோறு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். இளகிய மனது கொண்ட ஒரு இரண்டு பெண்கள் அங்கேயே கண்ணீர் விட்டனர். அம்மா அடிப்பாங்க... அப்பா திட்டுவாங்க.. என்று பலவாறு குரல்கள் எழும்பின....!!! ஊதிய உயர்வு கேட்டு வந்த Associate லெவல் ஊழியரை ப்ராஜெக்ட் மேனேஜர் பார்ப்பது போல ஒரு கேவலமான பார்வை பார்த்தனர் அங்கு கூடி இருந்த so called teachers.

எனக்கு தெரியும். அந்த முழு ஒன்பதாம் வகுப்பில் நான் படித்தது அந்த முழுஆண்டு தேர்வுக்கு மட்டும் தான். கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருப்பேன். நான் எனது பேப்பரை பார்க்க வேண்டும் என்றேன். தரமுடியாது என்று பதில் வந்தது. வீட்டுக்கு வந்து விடயத்தை சொன்னவுடன் எதிர்பார்த்த போல திட்டும் அடியும் அளவுக்கு அதிகமாக வந்தது. மீண்டும் எனது அம்மாவோடு பள்ளிக்கு சென்று எனது பேப்பரை கேட்டேன். முடியாது என்று மழுப்பலாகவே தொடர்ந்து பதில் வந்துகொண்டிருந்தது. இறுதியில் போலீஸ்க்கு போவோம் என்று குரல் கொடுத்ததும் கொஞ்சம் வளைந்து கொடுத்தனர். வேண்டுமானால் ரீடெஸ்ட் வைக்கிறோம்.. எழுதி பாஸ் ஆக சொல்லுங்கள் என்று சொன்னார்கள். சொன்னபடி நானும் எழுதினேன்.. நல்ல மதிப்பெண் பெற்றிருந்தேன். பின்னர் வந்த அந்த முக்கிய புள்ளி எனது அம்மாவிடம், 'உங்கே பையின் பாஸ் பண்ணிடுச்சு.. TC கொட்கசொல்றேன்.. வேற ஸ்கூல் ஜாயின் பண்ணிக்கீங்க..' என்றார். அது மிகபெரிய வாக்குவாதமாக சென்று கடைசியில் TC வாங்கிகொண்டு வேறு பள்ளிக்கு சென்றுவிட்டேன். பத்தாம் வகுப்பில் ஏதோ என்னால் முடிந்த அளவு 70% மதிப்பெண் பெற்றேன்...!! கல்லூரியில் பல்கலையின் சிறந்த மாணவர்களில் ஒருவனாக வந்தேன். அந்த பள்ளியை விட்டு வந்ததில் இருந்து இன்று வரை வாழ்க்கை ஏதோ ஒரு விதத்தில் பிரகாசமாக தான் இருக்கிறது.

இது எனது கதை...!! இங்கு என்னை வெளியே அனுப்பியதற்கு காரணம்.. ஒரு வேளை நான் பத்தாம் வகுப்பில் ஒழுங்காக படிக்காமல் போய் தேர்ச்சி பெறாமல் விட்டால் என்ன ஆவது என்னும் பயமாம். எனக்கு பிடித்த ஆசிரியை சில வருடங்களுக்கு பிறகு எனக்கு இதை சொன்னார். ஒரு பள்ளியின் பெயருக்காக-ஒரு தனிப்பட்ட ஒரு குழுவின் சந்தேகத்திற்காக எந்தன் வாழ்க்கையை தீர்மானிக்கும் முடிவை யார் அவர்களுக்கு கொடுத்தார்கள்...!!!? இது பல வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலை. இப்பொழுதும் இந்நிலை தான் என்று நினைத்திருந்த எனக்கு ஓர் அதிர்ச்சி.

இப்பொழுது பள்ளிகள் இந்நிலையில் இல்லை. முழுதும் மாறிவிட்டன. கேட்கும் போதே குழப்பமாக இருக்கிறதா? இல்லை இல்லை.. முழுதாய் கேளுங்கள். எனக்கு தெரிந்த ஒரு குழந்தை, அந்த பள்ளியில் படிக்கிறது. இரண்டாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு போகும் கட்டம்...!! இப்பொழுது அந்த பள்ளியின் முக்கிய புள்ளிகள் அந்த குழந்தையின் பெற்றோரை அழைத்து.. '' பையன் ஒழுங்கா படிக்கமாற்றான்.. படிக்காத பிள்ளைகளை வச்சிருந்தா பேர் கெட்டுபோகும்.. பையன் சொன்னத வேற கேட்க மாட்டேங்குறான்... பயமே இல்ல.. Special child ஸ்கூல்ல கொண்டு போய் சேர்த்திருங்க...'' என்றனர்.

இதுதான் கல்வியா? கல்வியை போதிக்கும் இடம் இப்படி தான் இருக்குமா? கல்வியை போதிப்பவர் அவருக்கு கீழ் இருக்கும் ஒரு சராசரி மாணவனை இப்படியா சொல்வது??

கல்வியை வியாபாரமாக மாற்றியது இந்த உலகு. பணம் சம்பாதிக்கும் ஒரு கருவியாய் மாற்றியது. இப்போது??? பெயர் பெயர் என்று எந்த பெயரை சம்பாதித்து எவன் தலையில் எழுதிகொள்ள போகிறீர்கள்? சிறப்பாக படிக்கும் பசங்களை காசு கொடுத்து வாங்கி தங்கள் பள்ளிகளில் படிக்க வைக்கும் பள்ளிகள் என்று பெயர் பெயர்... காசு காசு என்று ஓடி கல்வியை கற்பழிப்பதற்கு களவி கூடாரம் வைத்துக்கொள்ளலாம் இழிந்த கல்வி நிலையங்களே...!!!

பாடதிட்டத்தில் மாற்றம் வேண்டும்.. பாடம் சொல்லி கொடுக்கும் வழிமுறையில் மாற்றம் வேண்டும் என்று துடிக்கும் மனங்களே... கல்வி நிறுவனங்களுக்கு முதலில் மனம் வேண்டும் என்றே எனக்கு தோன்றுகிறது.

இந்திய இளைய செல்வங்களின் கல்வி எங்கே சென்றுகொண்டிருக்கிறது...!! அடுத்தவனின் எச்சை துண்டை எவ்வாறு கவ்வி கொள்ள வேண்டும் என்று சொல்லிகொடுக்க ஒரு கூடாரமாம் அதற்கு கீழே மாணவர்கள் என்னும் பெயரில் மா க்களாம்..!!? எதற்காக இந்த இழிசெயல்?

நாளைய சமுதாயத்தை நல்வழிதான் படுத்திக்கொண்டிருக்கிறோமா? குழந்தை மனது எதையும் அறியாது விளையாட்டு மனது என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்..? ஆனால், அது தான் உண்மையா? உண்மையில் குழந்தை மனதிற்கு ஒன்றும் புரியாதா? ஒன்றும் புரியாது என்று சொல்லப்படும் ஒரு குழந்தையின் மனதில் ஒரு விடயம் ஆழமாக பதிந்துவிட்டால் அது அவர்கள் வாழ்நாளில் என்றுமே மறக்கமுடியாது என்று விஞ்ஞான பூர்வமாக சொல்கிறார்கள். அப்படிபட்ட ஒரு குழந்தையின் மனதில், 'நீ எல்லாரை போல இல்ல.. உனக்கு படிக்க வராத.. யூ ஆர் எ புவர் ஸ்டூடண்ட்..' இது போன்ற உரைகளை சொல்வதன் மூலம் அவர்கள் மனதில் அது எவ்வளது ஆழமான தாக்கத்தை உருவாக்கும் என்பதை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பெற்றோர்களே...!! உங்கள் குழந்தையை ஒரு ஆசிரியை குற்றம் என்று சொல்லிவிட்டால் உடனே கம்பை தூக்கிகொண்டு ... தோட்டத்தில் எறுமையை துரத்துவது போல துரத்தாதீர்கள்.. அவர்களுக்கு என்ன ப்ரச்சனை என்பதை உணர்ந்து நீங்களாவது அதை களைய பாருங்கள்.. வீட்டிலும் பேச்சு, பள்ளியிலும் பேச்சு என்றால் குழந்தைகள் தங்களை யாரிடனும் வெளிகாட்டாமல் உள்ளே நஞ்சு போய் விடுவார்கள்...!!!

உங்கள் வம்சத்தின் எதிர்காலம் உங்கள் முடிவில்... கண்களில் அங்கும் இங்கும் இன்றும் நல்ல பள்ளிகளும் நல்ல ஆசிரியர்களும் தென்படுகிறார்கள். அதை அறிந்து அவர்களிடம் உங்கள் பிள்ளளைகளை ஒப்படைக்கும் நீங்காத பொறுப்பு உங்களிடம் இருக்கிறது...!!

கல்வியை கல்வியாய் கற்போம்...!!!

--தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..