Posts

Showing posts from May, 2013

போர் மாயை

Image
மாயை மழித்தொழியா மாயை..
காற்றோடு ஒரு ஜதி அதை காதோடு சேர்க்கையிலே காற்றாக - இடையில் ஓரிரு ஓசை..!
மங்கிய அறிவுக்கோர் - அன்று பல் திசை சிந்தை.. புதிதாய் பல திசை அவை தரும் புது சுவை..!
மாற்றம் தரிக்கும்  உடலின் பருவநிலை.. மனம் காண மறுக்கும் அதனை பலமுறை..!!
மனமுழுக்க தேடுதல்.. பரந்து விரிந்த இடத்தில் பலவாறு தேடல் ஓட்டம்..!
பூவின் தம்பம் முளைத்தெழுந்த பொழுதே தொடங்கியதோர் யுத்தம்..! அங்குமிங்குமாத குதித்தோடி பறந்திட ஒரு பிரளய முனையில் மெல்லிய சப்தம்..!
ஆற்பரிக்கும் போருக்கிடையில் ஆங்காங்கே ரத்த சிதறல்கள்.. காணும் திசையெல்லாம் மூச்சு திணறல்கள்..!!
இறுதியுற்ற போரில் இருபுறமும் வெற்றி களிப்பு...! களிப்போடு மூண்டுக்கொண்டது  மறுமுறை போர்...!!
மோகமொழிந்த தாகம் மாயை அழியாதோர் - உள்ளுக்குள் மூண்டிடும் மாற்றம் மீண்டும் வேண்டும் அம்மாயையை..! முதல் மாயையாகவே..!
இப்போர் மாயை- மழித்தொழிய இயலாத மாயை..!
தம்பி கூர்மதியன்

என் பெருமையை அழிக்க எவனுக்கும் உரிமை இல்லை...!

Image
பொக்கிஷம். எமது நாடும் நாட்டின் வளமும் ஒரு அழிய கூடாத பொக்கிஷம். எமது மொழியும் அதன் பெருமையும் நிலைக்க வேண்டிய பொக்கிஷம். எமது மக்களும் அவர் மாண்பும் என்றும் மதிக்கப்படவேண்டிய அரிதான பொக்கிஷம்.

போற்றும் மனிதரிடையே ஆங்காங்கே ஓர் ஓர் குள்ளநரி அகப்பட்டு அரித்துக்கொண்டிருக்கிறது. மிக நாளாக, எனது பல் இடுக்கில் ஒரு கொசுறு மாட்டி கூத்தடித்துக்கொண்டிருக்கிறது. எமது நாக்கை சுழற்றி அந்த கொசுறு பிறட்டி வெளியில் துப்ப வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

எமது வீட்டில் இருக்கும் ஒரு அரிதான பொருள் எமக்கு சொந்தம்..! என் வீட்டாருக்கு சொந்தம்.! அதை எனக்கு மெருகேற்றவும் சரி.. இல்லை வீணாக்கவும் சரி ஏதோ ஒரு அளவு உரிமை இருக்கிறது. ஆனால், உலகத்திற்கே பொதுவான ஒரு விடயத்தை.. உலகமே வியக்கும் ஒரு விடயத்தை.. உலகமே போற்றும் ஒரு விடயத்தை எனது சுயத்துக்காக சீரழிப்பேன் என்று சொல்லும் எவராக இருந்தாலும் தூக்கில் போடவேண்டிய ஒரு குற்றவாளி தான் அவர்.

சமீபத்தில் செய்தியில் ஒரு நிகழ்வு. மகாபலிபுரத்தில் கடற்கரை கோவிலில் அத்துமீறி பழமையின் பொக்கிஷத்தை சீரழிக்கும்படி நடந்துகொண்டனர் பா.ம.க.,வினர் என்று. மிக சிறப்பு...!!

சரி.. அங்க…

சொந்தம் விட்டுப்போச்சு...!

Image
காலையிலபோனபுள்ள மாலையிலவாருவான்னு என்அம்மாளதாங்கிநின்ன அந்தரெட்டவாசமரக்காளே எனைஓரம்விட்டுபோறீயளே..!
அயர்ந்துபோனகூட்டமெல்லாம் அன்னாந்துபாத்துகெடக்க தம்மவிரிச்சுகிட்டு தாரம்போனதிண்ணையாரே நீசொந்தமில்லனுசொல்லிபுட்டு எனைதவிக்கவிட்டுபோறீயரே..!
ஒத்தஆளாநின்னுகிட்டு ஒண்ணொண்ணாகொடம்நிரப்பும் ஒத்தபம்புசெட்டே.. உன்கைபுடிஇனிஎனக்குஇல்லனு முன்னவாயிவிட்டநீர இப்பகண்ணுவிட்டுபோகுதய்யா..!
தெருவோரமும்புதரோரமும் பூமிக்குஉரம்போட்டமூத்தகுடிசனமெல்லாம்.. கால