சொந்தம் விட்டுப்போச்சு...!காலையில போன புள்ள 
மாலையில வாருவான்னு
என் அம்மாள தாங்கி நின்ன
அந்த ரெட்ட வாச மரக்காளே
எனை ஓரம் விட்டு போறீயளே..!

அயர்ந்து போன கூட்டமெல்லாம்
அன்னாந்து பாத்துகெடக்க
தம்ம விரிச்சுகிட்டு 
தாரம் போன திண்ணையாரே
நீ சொந்தமில்லனு சொல்லிபுட்டு
எனை தவிக்க விட்டு போறீயரே..!

ஒத்த ஆளா நின்னுகிட்டு
ஒண்ணொண்ணா கொடம் நிரப்பும்
ஒத்த பம்பு செட்டே..
உன் கைபுடி இனி எனக்கு இல்லனு
முன்ன வாயி விட்ட நீர 
இப்ப கண்ணு விட்டு போகுதய்யா..!

தெருவோரமும் புதரோரமும்
பூமிக்கு உரம் போட்ட மூத்த குடி சனமெல்லாம்..
கால விரிச்சு வச்சு
நேரா குத்த வச்சு 
வெள்ள தொட்டிக்குள்ள 
கருமத்த அடகாத்த 
கத முடியுமுன்ன - என் கதைக்கு அடிபோட்ட
வெள்ள தொட்டி அண்ணனாரு
இனி என்ன ஏத்துக்கமாட்டாராமே..!!

சுத்தி வந்த தூணு
ஓரம் துளியா செதஞ்சுபோயிருக்கு..
நாளாகிபோச்சா…
என் பிரிவால நாறாகிபோச்சா?
சண்ட வலுக்கையில கட்டியணச்ச
மரத்தூணு- கைய வெலக்கிகிட்டு..
கிட்ட வராதேனு எட்டி நிக்குதரே..!

ஓடி வந்த மண் தரையும்
வத்தாத ஒத்த குளமும்
ஒசந்து நிக்குற எங்கூரு சாமியும்
அடிச்சு ஓடின ஆறும்
அலப்பரிச்ச ஓடையும்
ஒத்த ரோடு பஸ் ஸ்டாப்பும்
தூர நடக்கும் ரோட்டு புளியமரமும்
கணக்கு மாமா கொட்டா மாடும்
தோட்டத்து நார்த்த மரமும்
நீண்ட தோட்ட காடும்
எல்லாமே என் சொந்தம் அத்து போச்சு…
எல்லாமே என் சொந்தம் அத்து போச்சு…

சந்தோசம் கொட்டி கொடுத்த
எங்கூரு நினைவெல்லாம்
இனி நினைவு மட்டும்..

கிடைக்காத நெனவு மட்டும்..!!

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!