போர் மாயைமாயை மழித்தொழியா மாயை..

காற்றோடு ஒரு ஜதி
அதை காதோடு சேர்க்கையிலே
காற்றாக - இடையில் ஓரிரு ஓசை..!

மங்கிய அறிவுக்கோர் - அன்று
பல் திசை சிந்தை..
புதிதாய் பல திசை
அவை தரும் புது சுவை..!

மாற்றம் தரிக்கும் 
உடலின் பருவநிலை..
மனம் காண மறுக்கும்
அதனை பலமுறை..!!

மனமுழுக்க தேடுதல்..
பரந்து விரிந்த இடத்தில்
பலவாறு தேடல் ஓட்டம்..!

பூவின் தம்பம் முளைத்தெழுந்த பொழுதே
தொடங்கியதோர் யுத்தம்..!
அங்குமிங்குமாத குதித்தோடி பறந்திட
ஒரு பிரளய முனையில் மெல்லிய சப்தம்..!

ஆற்பரிக்கும் போருக்கிடையில்
ஆங்காங்கே ரத்த சிதறல்கள்..
காணும் திசையெல்லாம் மூச்சு திணறல்கள்..!!

இறுதியுற்ற போரில்
இருபுறமும் வெற்றி களிப்பு...!
களிப்போடு மூண்டுக்கொண்டது 
மறுமுறை போர்...!!

மோகமொழிந்த தாகம்
மாயை அழியாதோர் - உள்ளுக்குள் மூண்டிடும் மாற்றம்
மீண்டும் வேண்டும் அம்மாயையை..!
முதல் மாயையாகவே..!

இப்போர் மாயை- மழித்தொழிய இயலாத மாயை..!

தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

ஏழு நாட்கள்...