என் பெருமையை அழிக்க எவனுக்கும் உரிமை இல்லை...!பொக்கிஷம். எமது நாடும் நாட்டின் வளமும் ஒரு அழிய கூடாத பொக்கிஷம். எமது மொழியும் அதன் பெருமையும் நிலைக்க வேண்டிய பொக்கிஷம். எமது மக்களும் அவர் மாண்பும் என்றும் மதிக்கப்படவேண்டிய அரிதான பொக்கிஷம்.

போற்றும் மனிதரிடையே ஆங்காங்கே ஓர் ஓர் குள்ளநரி அகப்பட்டு அரித்துக்கொண்டிருக்கிறது. மிக நாளாக, எனது பல் இடுக்கில் ஒரு கொசுறு மாட்டி கூத்தடித்துக்கொண்டிருக்கிறது. எமது நாக்கை சுழற்றி அந்த கொசுறு பிறட்டி வெளியில் துப்ப வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

எமது வீட்டில் இருக்கும் ஒரு அரிதான பொருள் எமக்கு சொந்தம்..! என் வீட்டாருக்கு சொந்தம்.! அதை எனக்கு மெருகேற்றவும் சரி.. இல்லை வீணாக்கவும் சரி ஏதோ ஒரு அளவு உரிமை இருக்கிறது. ஆனால், உலகத்திற்கே பொதுவான ஒரு விடயத்தை.. உலகமே வியக்கும் ஒரு விடயத்தை.. உலகமே போற்றும் ஒரு விடயத்தை எனது சுயத்துக்காக சீரழிப்பேன் என்று சொல்லும் எவராக இருந்தாலும் தூக்கில் போடவேண்டிய ஒரு குற்றவாளி தான் அவர்.

சமீபத்தில் செய்தியில் ஒரு நிகழ்வு. மகாபலிபுரத்தில் கடற்கரை கோவிலில் அத்துமீறி பழமையின் பொக்கிஷத்தை சீரழிக்கும்படி நடந்துகொண்டனர் பா.ம.க.,வினர் என்று. மிக சிறப்பு...!!

சரி.. அங்கே வந்து அலப்பரை செய்த அத்தனை பேரும் ஏன் தங்கள் வீடுகளை கொலுத்திகொண்டோ தங்கள் வாகனங்களை அழித்துக்கொண்டோ தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க கூடாது? அதை பற்றி நான் ஏதும் கேட்டுக்கொள்ள வரமாட்டேன். ஆனால், உலகத்துக்கே பொதுவான ஒரு பொக்கிஷத்தை சீரழிக்கும் உரிமையை உங்களுக்கெல்லாம் எவன் கொடுத்தது.?

1300 ஆண்டுகளாக கம்பீரமாக- எத்தனை இயற்கை சீற்றங்களை கண்டிருக்கும் இந்த கோவில்...? அதை ஒற்றை நிமிடத்தை ஏறி நாசமாக்க நினைத்த நரிகளை என்னவென்று சொல்ல..?

உங்கள் பெருமையை நிலைநாட்ட உங்கள் வீட்டில் உங்கள் கொடியை வைத்துவிட்டு.. பக்கத்திலயே குத்தவைத்து உட்கார்ந்துகொண்டு வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருங்கள். அதை விடுத்து, உலக பொக்கிஷங்களை அழிக்கும்படியான செயல்கள் செய்துகொண்டிருந்தால் இனியும் பொருக்கமுடியாது.

எத்தனை வெளிநாட்டினர் அங்கு வந்திருப்பார்கள். எத்தனை பேர் தங்கள் குடும்பத்தோடு அங்கு நேரம் செலவிட வந்திருப்பார்கள். இவர்களின் ஆர்பாட்டம், என் தமிழனை பற்றி வெளிநாட்டில் என்ன மாதிரியான எண்ணங்களை பதிக்கும்..? என் அனுமதியே இல்லாமல் என் பெயரை நாசமாக்கும் தகுதியை யார் இவர்களுக்கு தந்தார்கள்..? இந்த உரிமையை யார் உங்களுக்கு தந்துள்ளனர்.?

ஜாதி மதம் என்னும் போக்கை விடுக்காமல் இன்னும் எத்தனை நாட்கள் தான் உங்களுக்கும் உங்களை சார்ந்துள்ளோருக்கும் இழிவை பெற்றுதருவதாய் இருக்கிறீர்கள்.?

நீங்கள் சீரழித்துக்கொண்டிருக்கும் அந்த பொக்கிஷங்களும், அரசு பேருந்துகளும் உங்கள் வரி என்னும் ரத்தம் கலந்தது தான் என்பதை ஏன் உங்கள் மனம் புரிந்துகொள்ள மறுக்கிறது..?

இதுதான் நீங்கள் கற்கும் புனிதமா? இதுதான் இந்த தமிழ் உங்களுக்கு போதித்ததா? எங்கே.. முதலில் தமிழை தமிழாக அதன் உட்கருத்தை கேட்டு அனுபவியுங்கள். பின்னர், தமிழன் என்று சொல்லிக்கொள்ளலாம்.

முட்டாள் தொண்டனே...!! உங்கள் கட்சியின் பெருமையோ ஜாதியின் பெருமையோ நீங்கள் சொருகிவிட்டு போகும் கொடியில் இல்லை.. உங்கள் நடத்தையில் இருக்கிறது...!! உலகமே இழிவுபடுத்திக்கொண்டிருக்கிறது உங்களை.. இப்போது புரிகிறதா உங்கள் கட்சியின் ஜாதியின் பெருமையும்..!!!!!

உனது உழைப்பையும் ரத்தத்தையும் பெருமையையும் வீணாக்குவதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால்.. எனது உழைப்புயும் ரத்தத்தையும் பெருமையையும் வீணாக்கும் உரிமை உங்களில் ஒரு முட்டாளுக்கும் நான் தந்துவிடவில்லை. உங்கள் வார்த்தையையும் செயலையும் அடக்கிகொண்டிருங்கள்.. அதுதான் எதிர்காலம் என்று இருந்தால் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் நல்லதாக அமையும்.

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..