Skip to main content

Posts

Showing posts from October, 2013

பட்டிகாட்டு ஆச்சி...!

ஒட்டுகுடிசையில
கூரை தாங்கி நிக்கிற அந்த நட்ட நடு தூணு இப்ப ஓரமா என்னையும் தாங்கி நிக்கிது..!
மண்ணுதரைய மொழுக சட்டியில.. ஆச்சி விரலுக்கிடையில கரையிது அந்த கோனாறு வீட்டு மாட்டு சாணம்..!
மிச்சமாகிபோன சாணம் வாசமுன்ன குவிஞ்சிருக்கு அந்த ஒத்த சாமந்தி பூவுக்கு பிடிமரமா...!
தோட்டத்து பூவும் சுத்தி வளர்ந்த மரமும் கூட்டோட சேர்ந்த ஈர மணலும் வீட்டுக்கு மொத்தமா கொடுக்குது இயற்கை வீச்சு...!
சுத்தாத காத்தாடி மேல கெழக்கும் மேற்கும் கூத்தாடுது தொறந்து வச்ச சன்னலு வழியா வந்த தெக்கு தெசை காத்து காரணமா...!
மழைவருமுன்ன மோட்டாரு சைக்கிள தட்டணுமே..! 'ஆச்சி கிளம்புதேன்....'னு குரலு போச்சு..
'இளங்கத்திரியையும் பொடிய வெங்கத்தையும் நாலு உரஞ்சேத்து உருட்டுறேன் அய்யா.. நாழி புரளுமுன்ன நாக்கு ருசிகண்டுபோயா..!'
அம்மிக்கல்லு உருட்டலோடு ஆச்சி மிரட்டலு பாசம் நகத்தல..!
'ஆண்டுபோன காலத்துல  அம்மிக்கூட என்ன மல்லுக்கட்டு..? அரசாங்கம் கொடுத்த ஒண்ணும் வீட்டுல ஆள காணும்....!?'
செயிச்சு போன எம்.எல்.ஏ.,வும் கவுன்சிலரும் வாக்குறுதி நெனவு வர கேட்டுபுட்டாச்சு..!
'போனமாசம் சீக்குனு வந்துபோக பக்கத்து தெர…