Posts

Showing posts from November, 2013

இற(றை)ப்பயணம்..!

Image
மௌன இரவில் மெல்லிய சாரல் ராகமற்ற ஒலி ஒன்று காதின் ஓரம் கீதமாக ஒலிக்கிறது...!
ஒப்பனையற்ற ஊரில் ஓநாயின் ஊளை.. சொப்பனமற்ற இரவில் சரரீரி சப்தம்...!
வேகமற்ற நேரத்தில் ஒரு வினாக்குறி... விடைகுறியின் முற்றில் வரும் முற்றுக்குறியை தேடி..!
குழப்பம்...
செய்கை திசையறியாது திக்கி திளைக்க.. செய்வனவெல்லாம் செய்யாமையாகியது...!
தடுக்கல்...
இடறிட்டு விழும் சத்தம் வெளியறியா ஒற்றை வீடு.. தடமறியா செல்லும் மனதின் : மௌவாமை..!
தனிமை..
குரலிட்டு எழும்பிய பின்னும் கையருகில் எவருமில்லை 16 டிகிரி ஏசி ரூமில்  முகமெல்லாம் வியர்வை துளிகள்..!
நாவரண்டு நிற்கை புரண்டெழுந்த தனிகை தடமறியா செய்கை தனிமையில் கேட்கிறது சுற்றிலும் 'கீச்....' சப்தம்..!
இறுதி..
செய்த தவறெல்லாம் கண்முன் வந்தோட மன்னிப்பு கேட்டு கண்ணோரம் வழிகிறது ரெட்டை கண்ணிலிருந்து தாரையான கண்ணீர்...
மனம் திரள்கிறது.. கண்கள் வற்றிப்போனது.. மனது இரும்பானது.. உதட்டோரம் ஒரு மெல்லிய சிரிப்பு...! சிரிப்பு முடியமுன்னே மாண்டுவிட்ட உணர்கை..!
உதறிய உறவும் உறிஞ்சிய பணமும் கையசைத்து காட்ட காற்றோடு வந்த ராகமற்ற ஓசையோடு பயணம் ஒன்று தொடங்குகிறது...!

சாத்திரம் இல்லா வேட்கை

Image
அகம்விரண்ட வேகங்கள் வேதங்கள்
புறமிட்டு புசிக்க யோசையில்லை...! யம்மை யப்பை பேச்சு.. யாத்தே யாசித்தல் ஆச்சு..!
அழகுண்ட அணிகளன் யாசிக்க
தழதழத்த அவன் மனம் யோசிக்க
எட்டும் நடை பயணம் ஓரடங்கா
எட்டிப்பின் தொடங்குது போராட்டம்...!

ஒலி எழுப்பும் வாய் முடிக்கொள்ள
தேகமெங்கும் ஒரு தேடல் வேட்டை..
வேட்கை அடக்க ஒரு வெறிப்புலியின்
ஒரு கோர தாண்டவத்தின் அரங்கேற்றம்..!

தடவி தவித்து ஒரு திகட்டலுணர்ந்தது
முட்டை கண்விழியில் பாயும் ரத்தம்
கண்ணீராய் பெருக்கெடுத்த ஓர் ஓட்டம்..!

தரித்த தழுமை உடலில்
முழுதாய் கீரல் நாட்டியம்...
உடுத்தல் உரமனைத்தும் ஓர் ஓரமாய் ஒதுங்கிவிட
மரவட்டை தவிக்கிறது அந்த மண்புதரில் நுழைந்துவிட...!

நுழையவில்லை......!

நேரமுற்ற முற்ற தேம்பல் பெருகிறது
கூச்சலும் கரைச்சலும் ஆர்ப்பறிக்க ஆரம்பிக்க
என்செய்யவென்று விழிபிதுங்கிய மாற்றான் கையில்
அகப்பட்டது ஒரு முழுநீள இரும்பியம்...!

ஈசலும் பூசலும் மொழுகப்பட்ட
வெளுவெளுத்த பல துருக்கள் சொருகிக்கொண்டு
இளித்து ஈயம் பூசிடும் இரும்பியம் அது...!

கையில் அகப்பட்டது கைக்குள் அடங்கியது
தூக்கி நிறுத்தப்பட்டது ஏதோ குறி தேடி செல்கிறது...
சிக்குண்ட புதரை சீர்படுத்த
ஓ…

மனிதன்... மனிதம் கொள்ளும்போது...!

Image
அதுவானடங்காசப்தம்ஓங்கிஅடங்கிபோனஇடம்போலகாட்சியளிக்கிறது. அழகாகவீட்டிலும்கடைகளிலும்அடுக்கிவைக்கப்பட்டிருந்தபொருட்கள்எல்லாம்வீதிகளில்கருகியநிலையில்கலைந்துகிடக்கிறது. கால்கள்வைக்கும்இடங்கள்கூடபாதங்களுக்குபாதிப்புஏற்படுத்திவிடுமோஎன்றுயோசிக்கவைக்கும்வகையில்இருக்கிறது.
அந்தராணுவஉடைஅணிந்தஅதிகாரிஉயிரிழந்தமக்கள்தவிர்த்துஇருக்கும்சிலரைகாப்பாற்றஓடிஆடிஅலைந்துவிட்டுஅந்தமின்கம்பத்தின்அடியில்அமர்ந்தார். அருகில்ஒருவர்அழுதுகொண்டிருந்தார்.
'You need this...?' என்றுதன்கையில்இருந்ததண்ணீர்பாட்டிலை

காதலின் அழுகை...!

Image
அவன் அங்கே அமர்ந்திருந்தான்... அருகில் சென்றேன்..! என்னடா என்றேன்.. ஏன் என்றான். புரியாமல் விழித்தேன். அழகா இல்லையா என்று கேள்வியுடன் தொடர்ந்தான். எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கு....!? அடுத்த கேள்வி கேட்டான்.
கொஞ்ச நாளில் பழகிடுவடா என்று சமாதானம் சொல்ல முயற்சி செய்தேன். ஆனால், அவன் இந்த சூழலுக்கு வந்து மூன்று வருடம் மேல் ஆகிறது. இனியும் என்ன அவகாசம் தேவைபடுகிறது. அவனுக்கு இந்த சூழல் சரிவராது என்பது மட்டும் எனக்கு புரிகிறது.
என்ன தான் தேவை இங்க இருக்கிறவங்களுக்கு...? என்று மேலும் கேள்விகள் கேட்க தொடங்கினான். அவன் கேட்கும் கேள்வியை எனக்கு ஆராய விருப்பமில்லை. அவனுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஒன்றே ஒன்று தான்.. அவன் யோசிக்கிறான்... நான் மழையில் நனைந்த மரக்கட்டை போல கிடக்கிறேன்.
நானும் ஏன் யோசிக்க கூடாது..? யோசித்தால். இருவரும் அந்த மொட்டை சுவரில் உட்கார்ந்துகொண்டு வியாக்கானம் தான் பேசிக்கொண்டிருப்போம். ஆனால் அவன் கேட்பதிலும் என்ன தான் தவறு இருக்கிறது...? அப்பா அம்மாவை மட்டுமே பார்த்து வளர்ந்தவன் அவன். அவனுக்கு காதல் என்றால் அப்பா அம்மாவின் காதல் மட்டும் தான் தெரியும். அப்பா…

அப்பா... என் ஆசை...!

Image
'என்னடா அப்படி உட்கார்ந்திருக்கே..?'

'தெரில ..'

'பேசணும்னு தோணுதா?'

'இல்ல..'

'ஏதாவது செஞ்சு தர்றேன்.. சாப்பிடுறியா...?'

'வேணா...'

'புத்தகம் படிக்கிறியா...? உனக்கு புடிச்ச புத்தகத்த எடுத்திட்டு வரவா?'

'இல்ல.. வேணா..'

'நல்ல நிகழ்ச்சி எதனா டி.வி.ல., ஓடுதானு பாக்குறியா? 

'ப்ளீஸ்.. கொஞ்சம் தனியா.....' என்று சொல்லிவிட்டு தன் தந்தையிடம் முகம் சுளித்துகொண்டு தன் அறையினுள் சென்று கதவை படாரென சாத்திக்கொண்டான்.

'பொறுமை பா.. ரொம்ப வேகம் வேண்டா.. அடுத்த முறை என் மேல கோபம் வருகிறப்போ சட்டென சாத்த கதவு இல்லாம போகிடபோகுது...' சொல்லிக்கொண்டே கதவின் அருகே வந்தார். தன் இரு கைகளையும் கதவு மேல் வைத்து, கதவை தடவிக்கொண்டே...

'உள்ளே வரலாமா...?' என்று கேட்டார். பதில் ஏதும் இல்லை. மெதுவாக கதவு திறந்து தன் கண்களை அறையின் உள்ளே அலைபாயவிட்டார். மெத்தையின் மேலே தன் மகன் குப்புற படுத்திருப்பதை பார்த்து உள்ளே சென்றார்.

கட்டிலின் கீழே உட்கார்ந்து தன் மகனின் கைகளை பற்றிக்கொண்டார். அவன் ஒற்றை கையை தன் இருகைகளின் அரவணைப்பில் வைத்துக்கொண்டு …