கருப்பழகிவட்ட முகத்துக்காரி
வத்தாத சிரிப்புக்காரி
கருத்த மேனியில-முட்ட
கண்விழிக்கு சொந்தகாரி...!

ஊரெல்லாம் தேடுதடா
செவத்த செம்மேனி
உசுரா கெடக்காடா-என்
கருத்த கண்ணழகி...!

மொதசா வண்டிகட்டி போகுறப்போ
உச்சுத்தெரு ஊருக்கெல்லாம்
ஒரே ஒச்சுசத்தம்...
'பட்டுத்தெரு பண்ணைய மொவன்
கருத்த கருவண்ட கட்டிகிட்டானாம்...'

தேடிதெருவெல்லாம் சுருண்ட வண்டியில
ஓரத்துல என்சிறுக்கி கண்ணுக்குள்ள
வழியதுடிச்சதடா - அவ முட்ட கண்ணு கண்ணீரு...!

அரண்டு போன பேச்சு ஒண்ணு
வாய் தவறி கொட்டிபோக
'கருத்த களவாணினு கொட்டிப்போறீரா..?'ன்னு
அவ கேட்ட கேள்வியொன்னு பொடனியில பொத்திகிட்டு
பொசுக்குன்னு பொறிதட்டுது...!!

வயித்த தள்ளிகிட்டா வாச்சப்புள்ள...
உசுரு கூட்டிகிட்டா அவ உடம்புக்குள்ள..!
'கருத்தபுள்ள கூடுகட்டிகிச்சு...'ன்னு
ஊரு சொன்ன பேச்சுக்கெல்லாம்...
'அய்த்தன்' சீம செவத்துகாரரு
புள்ள செவந்து சிரிக்கும்பாருன்னு
சொல்லி பீத்துவாளாக்கும்...!!

சீம செவத்துக்காரன் சிறுவண்டு பொறந்துருச்சு...!
மாமன் மனசுக்குள்ள மத்தாப்பு கொளுத்திருச்சு...!
திரை விளக்கி பாக்கையில
என் கருத்த சிறுக்கி கையில
அவ கருத்த சின்ன புள்ள...!!!

ஆசை நெருங்க நெருங்க
எம்புள்ளய காண நெருங்கையில..
திருப்பிகிட்டு தெசமாத்தி
குரல்ல நடி கசிய சொன்னாளப்பா....!!
'யய்யா இது கருத்தப்புள்ளயா......!!!'
சொன்ன சொல்லுக்குள்ள ஆயிரம் கண்ணீரு
அங்க திரும்பிருக்க மனசுக்குள்ள முழுதா கண்ணீரு...!

'ஆசை கருத்தகாரி..
என் மீசைக்கு சொந்தகாரி..
கருப்பச்சி களவாணி
என் உசுரே உன்னுதுதானடி..
கருத்த ஒத்த கண்ணு வச்சிருந்தேன்..
ரெண்டாம் கண்ணு தந்த
என் சீம சிறுக்கி பொண்டாட்டி...!
கண்ணு தவிக்குதடி
கண்ணீரா கசியுதடி
மாமன் மசிஞ்சதெல்லாம்-இந்த
கருத்தச்சிக்காகனு மறந்துருச்சா..
தேடும் தெசயெல்லாம் நான் தேட கெடச்சுரும்மா?
என் சொக்கதங்க கருப்பச்சி...
வட்ட முக சொப்பனக்காரி..!
மூத்த வண்ணங்கொண்ட என் வாக்கியகாரி..
சொல்ல சொல் தாண்டாத என் கருப்பழகி..!
கொண்டாருடி என் சிறுத்த கருப்பழகிய...'

கசியிது கண்ணீரு
என் கருத்தாயி கண்ணிலிருந்து..
முறைதட்டிய கண்ணீரில்ல..
இந்த மாமன் முறைய நெனச்சு வந்த
ஆனந்த கண்ணீரு...!

ஒத்த குழந்த கையிலயும்
ஒத்த குழந்த மாருலயும்
ஓஞ்சு சாஞ்சுருக்கு....
இந்த மாமன் கருத்த மீசைய
உரசி தூக்கிவிட்ட...
என் ரெட்ட கருப்பழகிங்க...!!!

-தம்பி கூர்மதியன்Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..