சாத்திரம் இல்லா வேட்கைஅகம்விரண்ட வேகங்கள் வேதங்கள்
புறமிட்டு புசிக்க யோசையில்லை...!
யம்மை யப்பை பேச்சு..
யாத்தே யாசித்தல் ஆச்சு..!

அழகுண்ட அணிகளன் யாசிக்க
தழதழத்த அவன் மனம் யோசிக்க
எட்டும் நடை பயணம் ஓரடங்கா
எட்டிப்பின் தொடங்குது போராட்டம்...!

ஒலி எழுப்பும் வாய் முடிக்கொள்ள
தேகமெங்கும் ஒரு தேடல் வேட்டை..
வேட்கை அடக்க ஒரு வெறிப்புலியின்
ஒரு கோர தாண்டவத்தின் அரங்கேற்றம்..!

தடவி தவித்து ஒரு திகட்டலுணர்ந்தது
முட்டை கண்விழியில் பாயும் ரத்தம்
கண்ணீராய் பெருக்கெடுத்த ஓர் ஓட்டம்..!

தரித்த தழுமை உடலில்
முழுதாய் கீரல் நாட்டியம்...
உடுத்தல் உரமனைத்தும் ஓர் ஓரமாய் ஒதுங்கிவிட
மரவட்டை தவிக்கிறது அந்த மண்புதரில் நுழைந்துவிட...!

நுழையவில்லை......!

நேரமுற்ற முற்ற தேம்பல் பெருகிறது
கூச்சலும் கரைச்சலும் ஆர்ப்பறிக்க ஆரம்பிக்க
என்செய்யவென்று விழிபிதுங்கிய மாற்றான் கையில்
அகப்பட்டது ஒரு முழுநீள இரும்பியம்...!

ஈசலும் பூசலும் மொழுகப்பட்ட
வெளுவெளுத்த பல துருக்கள் சொருகிக்கொண்டு
இளித்து ஈயம் பூசிடும் இரும்பியம் அது...!

கையில் அகப்பட்டது கைக்குள் அடங்கியது
தூக்கி நிறுத்தப்பட்டது ஏதோ குறி தேடி செல்கிறது...
சிக்குண்ட புதரை சீர்படுத்த
ஓங்கிய இரும்பியம் உயிரை மாசிட்டு உள்ளுக்குள் புகுகிறது..
உயிர்யணைத்தும் நொடிமறந்து சிக்கிழக்க
உயிர்அணுக்குள் - உயிரற்ற இடத்தில்
நுழைகிறது-இலகுவாக...!

தாகமுடைத்து சாயும் அந்த வெறிநாய்
அருகில் இருந்த உயிர்நீத்த ஓடையை
எட்டிவிட்டு பத்தடி பாய்ந்தோடியது...!

உயிரற்ற கலங்கமுற்ற ஓடை
வரும் பரிசல் தேடி தேய்கிறது...!

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!