இற(றை)ப்பயணம்..!மௌன இரவில்
மெல்லிய சாரல்
ராகமற்ற ஒலி ஒன்று
காதின் ஓரம் கீதமாக ஒலிக்கிறது...!

ஒப்பனையற்ற ஊரில்
ஓநாயின் ஊளை..
சொப்பனமற்ற இரவில்
சரரீரி சப்தம்...!

வேகமற்ற நேரத்தில்
ஒரு வினாக்குறி...
விடைகுறியின் முற்றில் வரும்
முற்றுக்குறியை தேடி..!

குழப்பம்...

செய்கை திசையறியாது
திக்கி திளைக்க..
செய்வனவெல்லாம் செய்யாமையாகியது...!

தடுக்கல்...

இடறிட்டு விழும் சத்தம்
வெளியறியா ஒற்றை வீடு..
தடமறியா செல்லும் மனதின் : மௌவாமை..!

தனிமை..

குரலிட்டு எழும்பிய பின்னும்
கையருகில் எவருமில்லை
16 டிகிரி ஏசி ரூமில் 
முகமெல்லாம் வியர்வை துளிகள்..!

நாவரண்டு நிற்கை
புரண்டெழுந்த தனிகை
தடமறியா செய்கை
தனிமையில் கேட்கிறது
சுற்றிலும் 'கீச்....' சப்தம்..!

இறுதி..

செய்த தவறெல்லாம் கண்முன் வந்தோட
மன்னிப்பு கேட்டு கண்ணோரம் வழிகிறது
ரெட்டை கண்ணிலிருந்து தாரையான கண்ணீர்...

மனம் திரள்கிறது..
கண்கள் வற்றிப்போனது..
மனது இரும்பானது..
உதட்டோரம் ஒரு மெல்லிய சிரிப்பு...!
சிரிப்பு முடியமுன்னே மாண்டுவிட்ட உணர்கை..!

உதறிய உறவும்
உறிஞ்சிய பணமும்
கையசைத்து காட்ட
காற்றோடு வந்த ராகமற்ற ஓசையோடு
பயணம் ஒன்று தொடங்குகிறது...!

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!