Skip to main content

காதலின் அழுகை...!


அவன் அங்கே அமர்ந்திருந்தான்... அருகில் சென்றேன்..! என்னடா என்றேன்.. ஏன் என்றான். புரியாமல் விழித்தேன். அழகா இல்லையா என்று கேள்வியுடன் தொடர்ந்தான். எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கு....!? அடுத்த கேள்வி கேட்டான்.

கொஞ்ச நாளில் பழகிடுவடா என்று சமாதானம் சொல்ல முயற்சி செய்தேன். ஆனால், அவன் இந்த சூழலுக்கு வந்து மூன்று வருடம் மேல் ஆகிறது. இனியும் என்ன அவகாசம் தேவைபடுகிறது. அவனுக்கு இந்த சூழல் சரிவராது என்பது மட்டும் எனக்கு புரிகிறது.

என்ன தான் தேவை இங்க இருக்கிறவங்களுக்கு...? என்று மேலும் கேள்விகள் கேட்க தொடங்கினான். அவன் கேட்கும் கேள்வியை எனக்கு ஆராய விருப்பமில்லை. அவனுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஒன்றே ஒன்று தான்.. அவன் யோசிக்கிறான்... நான் மழையில் நனைந்த மரக்கட்டை போல கிடக்கிறேன்.

நானும் ஏன் யோசிக்க கூடாது..? யோசித்தால். இருவரும் அந்த மொட்டை சுவரில் உட்கார்ந்துகொண்டு வியாக்கானம் தான் பேசிக்கொண்டிருப்போம். ஆனால் அவன் கேட்பதிலும் என்ன தான் தவறு இருக்கிறது...? அப்பா அம்மாவை மட்டுமே பார்த்து வளர்ந்தவன் அவன். அவனுக்கு காதல் என்றால் அப்பா அம்மாவின் காதல் மட்டும் தான் தெரியும். அப்பா கோபக்காரர்-அம்மா எப்பொழுதும் அப்பாவுக்கு அடங்கி போய் மட்டுமே இருந்திருக்கார். 
\
எனக்கு கோபம் வருகுதுடா... டே டே.. என்ன விட்டு போயிடாதடா.. பயமா இருக்குடா.. டே டே.. என்று கதறினான் அவன். எனக்கும் உள்ளுக்குள் பயம் தொற்றிக்கொண்டது. இனியும் நான் அமைதியாக இருந்தால் நான் என் தம்பியை முழுதாகவோ அல்ல வேறு மாதிரியோ இழக்க நேரிடலாம். இதுவரை நீ தான் முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லி அவனது ஒரு செயலையும் நான் கேட்டறிந்தது இல்லை. இப்பொழுது இனியும் நான் தாமதித்தால் கைநழுவி போகும் அபாயம் உள்ளது.

'என்னடா.. என்ன ஆச்சு...!?'

'என்ன வேணாம்னு சொல்லிட்டா ணா... என்னை புடிக்கலயாம்...'

'யாருடா...? அந்த ட்ரெயின் பொண்ணா..?'

'ஆமா டா...'

'என்ன ஆச்சு...? என்ன திடீர்னு...'

'கொஞ்சம் மனஸ்தாபம்.. சரிவராது.. Let's Break up ன்னு சொல்லிட்டாணா..'

'ஓ.. இங்க வந்து அழுகுறியே.. அங்க அவகிட்ட என்ன சொன்ன..?'

'சரிதான் போடின்னு சொல்லிட்டேன் ணா... அவ எப்படிணா அப்படி சொல்லலாம்..?'

'ம்ம்...'

அவன் காதல் கதைகளையெல்லாம் சொல்லி புலம்பிகொண்டிருந்தான். அழுதான்.. தேம்பினான்.. தண்ணி குடித்தான்.. கண்ணாடி வெளியில் பார்த்தான்.. என்ன நினைத்தான் என்று தெரியவில்லை மீண்டும் தேம்ப ஆரம்பித்துவிட்டான்..! சிறிது நேரத்தில் படத்து தூங்கிவிட்டான். நானும் காலையில் எல்லாம் சரியாகிவிடும் என்று படுத்து தூங்கினேன். 

மணி இரவு 3...

எனை சுற்றி ஒரு தேம்பல் சப்தம்...! கண்ணை கசக்கி விழித்து பார்த்தேன். திரும்பி படுத்து அழுதுகொண்டிருந்தான். காதல்ல இதெல்லாம் சகஜம் நாளைக்கு திரும்ப ரெண்டு பேரும் ஒண்ணா சுத்த போறீஙக இதுக்கு ஏன்டா இந்த அலும்பல் என்று கேட்டேன். இது நடந்து ஒரு வாரம் கடந்துபோனது. இதுவரை அப்பெண் பேசவில்லை.. இதுவரை இப்படி இருந்ததில்லை என்றான். இனியும் இது தேராது என்று முடிவெடுத்தேன்.. எழுந்தேன்...

'அந்த பொண்ணுகிட்ட அவள புடிச்சிருக்குன்னு எத்தனை முறை சொல்லியிருப்ப...?'

'ஒரு நாளைக்கு 20 முறையாவது சொல்லியிருப்பேன்.. அவ்வளவு புடிக்கும் டா...'

'அம்மாகிட்ட நீ ஒரு முறை கூட சொன்னதில்லையே....!'

அழுதுகொண்டிருந்தவன் அழுகையை நிறுத்திவிட்டு சடாரென என்னை பார்த்தான். தொடர்ந்தேன்...

'அப்பா உன்கிட்ட பேசாம மாச கணக்குல இருந்திருக்காரே...! அப்போதெல்லாம் ஏன் உனக்கு அழுகை வரல....'

அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான். தொடர்ந்தேன்...

'பாருடா.. உன்ன பத்தி எனக்கு தெரியும்.. நீ ரொம்ப பொசசிவ்..  ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கோ... பொசசிவ்க்கும் சந்தேகத்துக்கும் ஒரு சின்ன கோடு தான் வித்தியாசம் அத கடக்காம நீ பாத்துக்கணும். இன்னொரு முக்கியமான விசயம் ஈகோ.. அந்த பொண்ணு ஒரு வாரமா பேசலனு சொன்னியே.. நீ பேச முயற்சி செஞ்சியா...?'

'ம்.. இல்ல...'

'அப்பரம் ஏன் அந்த பொண்ணு மட்டும் பேசணும்...?'

'ஆனா அவ எனக்கு புடிக்காதுன்னு தெரிஞ்சும் சில விசயம் செய்யிறாளேணா...'

'அவளுக்கு அது புடிச்சிருக்குடா.... உனக்கு புடிச்சத செய்ய தானே நீ இருக்க.. அப்பரம் ஏன் அவளும் அதையே பண்ணனும்..?'

'ச்சூ.. இருவருக்காகவும் வாழுறது தான் ணா காதலும் திருமணமும்...'

'ஆமா.. ஒருத்தவங்களுக்கு ஒண்ணு புடிக்குதுனா நமக்கு விருப்பமில்லனாலும் அத ஏத்துக்கணும்.. அது அவங்க வாழ்க்கை... அதுதான் குடும்பம்.. உனக்காக அவங்கள மாத்த சொல்லகூடாது... U have to accept...'

'இல்லணா.. என்னால ஏத்துக்க முடியல...'

'இங்க பாருடா கண்ணா... ஈகோ விட்டு முதல்ல அந்த பொண்ணுகிட்ட மன்னிப்பு கேளு...'

'ஏன்... நான் ஏன் கேக்கணும்...?'

'கேட்டா என்ன ஆகிட போற...?'

'என் மேல தப்பு இல்லையே...!!'

'உறவுகள்ல எப்போதும் அப்படி தான்டா தெரியும்... நம்ம மேல தப்பு இருக்குற போலவே தெரியாது. ரெண்டு பக்கமும்... இணைய வேண்டிய ரெண்டும் இரும்பா இருந்தா இணைக்கிறது கஷ்டம்... ஒண்ணு இரும்பா இருந்தாலும் இன்னொன்னு கயிறா இருந்தா இறுக்கி கட்டிட்டு போயிடலாம்...'

'அந்த கயிறா அவ இருக்கலாமே...!'

'இத்தனை வருசங்களா பொண்ணுங்களே கயிறா இருந்து பழகிட்டாங்க.. நாமலும் பழகிப்போமே...!'

'ச்சூ... வேணா ணா... அவளுக்கு அவ்வளவு இருக்குறப்போ நான் மட்டும் ஏன்...'

'அடேய்.. அப்பரம் ஏன் அழுகுற...?'

'வலிக்குதுல...'

'உன் வலிக்கு மருந்து தான் தர முடியும்.. அந்த மருந்த நீ தான் பதமா போட்டுக்கணும்...'

'விடுடா... நான் ஏதோ பண்ணிட்டு போறேன்.. விடேன்...' சட்டென பேசிவிட்டு சாய்ந்துகொண்டான். மெதுவாய் அவன் தலையில் கையை வைத்து கோதிவிட்டு பேசினேன்...

'சின்ன சின்ன ஈகோ தான்டா பெரிய விளைவுகள ஏற்படுத்தும்...! நமக்கான பொண்ணுனு நினைச்ச ஒருத்தி வேற ஒருத்தன் கூட நாம நிக்க வேண்டிய இடத்துல நிப்பான். நீ வர்ணிக்க வேண்டிய அழக வேற ஒருத்தன் ஆராதிச்சுட்டு இருப்பான். உன்ன அவ கூப்பிட வேண்டிய அழகு வார்த்தை வேற ஒருத்தன் காதுல விழும். அவ வேற பையன்கிட்ட பேசினாலே கோபபடுற நீ.. நாளைககு அவகிட்ட உரிமையா பேச கூட உனக்கு தகுதி இல்லாம போயிடும்டா... உனக்காக உனக்காக மட்டுமே உரிமையான உயிர், உணர்வு, உடல் எல்லாத்தையும் ஒருத்தன் சொந்தம் கொண்டாடுவான் டா... வெறும் உடம்புக்காக பழகுறவன்னால கூட ஒரு காலத்துக்கு மேல பழகிட்டான்னா இதெல்லாம் தாங்க முடியாதுடா... அப்பா அம்மா உனக்கு எவ்வளவு செஞ்சாலும் அவங்கள எவ்வளவு புடிக்கும்னு நீ சொன்னது கிடையாது... ஆனா அந்த பொண்ணுகிட்ட எத்தனை முறை சொல்லி இருப்ப... யாருக்காகவும் அழுததில்ல.. ஆனா அந்த பொண்ணுக்காக அழுகுறனா.. இந்த உறவுல எல்லாம் கடந்த ஒண்ணு இருக்குடா.. மன்னிப்புன்னு ஒற்றை வார்த்தைக்காக இதெல்லாம் இழந்து கஷ்டபடாதடா.. அதனால நாம எந்த வித்ததிலும் குறஞ்சுட போறது இல்ல.. தம்பி... டே...'

அவன் என்னிடம் பேசுவதாக இல்லை. எனக்கு என் தம்பியின் நிலை நினைத்து மிகவும் வருத்தம் வந்தது. அவன் தலையை கோதிக்கொண்டே படுத்து உறங்கிபோனேன்.

காலை எழும்போது அவன் யாரிடமோ சிரித்து சிரித்து அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான். குளித்துவிட்டு கிளம்பி பார்த்தேன்.. இன்னும் அவன் பேச்சு முடிவதாய் தெரியவில்லை... தம்பி.. டே.. அடேய்.. கத்தி பார்த்தேன்.. என்னை சட்டை செய்வதாய் தெரியவில்லை. ஒரு பேப்பரில் 'Love you Brother' என எழுதி அவன் கண் படும் திசையில் வைத்துவிட்டு வெளியில் வந்துவிட்டேன்.

அவன் வாழ்க்கையை உணர்ந்துகொண்டான்... அந்த அலைப்பேசி அழைப்பு அந்த பெண்ணுடன் தான். நானும் உணர்ந்துகொண்டேன்....!!

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…