Skip to main content

Posts

Showing posts from December, 2013

புரிதல்.. புரிதலின்றால்...!

பலமுறை இடித்து பார்த்தேன் அந்த மரத்தால் செய்யப்பட்ட கதவை, பதில் எதுவும் வந்ததாக தெரியவில்லை. அவனின் கைப்பேசிக்கு பல முறை அழைத்து பார்த்தேன்.. அவனிடம் இருந்து பதிலில்லை. வீடு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது.. 10 நிமிடத்திற்கு மேலாகவும் யாரும் திறப்பதாக தெரியவில்லை. எனது அலைப்பேசி அழைப்பையும் ஏற்கவில்லை. என் நெஞ்சம் பதறிப்போனது... என்ன செய்வது? கதவை உடைத்துவிடலாமா..? அக்கம் பக்கத்தில் கூச்சல் போடலாமா...? என்ன ஆகியிருக்கும் இவனுக்கு...? எனக்குள்ளே பல கேள்விகள்.

யோசனைகளுக்கு முற்றிப்புள்ளி வைக்கும் விதமாக கதவு சட்டென திறக்கப்பட்டது. அவனின் சோர்ந்த முகம் என்னை அவன் வீட்டினுள் வரவேற்றது.
'என்னடா.. எவ்வளவு நேரம்...?'
'அதான் தொறந்துட்டேன்ல.. உட்காருடா...' என சொல்லி கதவை தாழபோட்டுவிட்டு அருகில் அமர்ந்தான்.
பல நாட்கள் ஆகின நாங்கள் இருவரும் பார்த்து..! உயிர் நண்பர்களாக இருந்தோம், கால போக்கில் இடைவெளி அதிகமாகிவிட்டது. வீட்டிற்கு வந்த என்னிடம் அவன் முகம் கொடுத்த பேசவில்லை. டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தான். அழையா விருந்தாளியாய் என் உயிர் …