Skip to main content

Posts

Showing posts from January, 2014

தவறுகள் உணரும் தருணம்...!

குளியளறையில் தண்ணீர் ஒழுகிகொண்டிருக்கும் சத்தம் மட்டும் ரொம்ப நேரமாக கேட்டுக்கொண்டிருக்கிறது. அவன் வெளியில் வருவதாய் தெரியவில்லை. உள்ளே சென்றவனுக்கு ஏதேனும் ஆகியிருக்குமோ என்று அப்பா பயந்துபோய் கதவை தட்டினார். வழக்கமாக காக்கா குளியல் போடுபவன், காலை பத்து மணிக்கு உள்ளே சென்றான் பதினொன்று ஆகியும் வெளிவரவில்லை. கதவை தட்டியதற்கும் பதிலில்லை.
'குளிச்சாச்சா பா...?' அப்பா குரலை உயர்த்தி கேட்டார். பதில் எதுவும் வரவில்லை. கதவு திறக்கப்பட்டது. சொட்ட ஒழுகிகொண்டிருக்கும் துண்டினை இடுப்பில் கட்டிக்கொண்டு வெளியில் வந்தான் அவன். அப்பாவை ஏற இறங்க பார்த்தான், அவன் கண்கள் சிறிது முன்பு வரை கண்ணீரை தாங்கி கொண்டிருந்தது நன்றாக தெரிந்தது. எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்றான். அப்பாவும் பின் தொடர்ந்தார்.
'ஏதாவது பிரச்சனையா?...' என்று கேட்டார். பதில் எதுவும் இல்லை.
'உன்ன தான் கண்ணா.. ஏதாவது பிரச்சனையானு கேட்டேன்...' என்று தன் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்தார்.
பனியனை புரட்டிக்கொண்டிருந்தவன் அப்பாவை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்தான். 
'என்ன பண்ண போறீங்க..? பிரச்சனை தான்.. அதுக்…

2013 - என் வாழ்வின் ஒரு நிகழ்வு...!

இல்லை. இது நடந்திருக்க கூடாது. இது எப்படி நடந்தது? நான் எப்படி இப்படி அஜாக்கிரதையா இருந்தேன்.? இது நடக்கவே கூடாது. எப்படி நான் இப்படி? பதறிப்போய் தூக்கத்தில் கைகளில் இருந்து நழுவி என் சகோதரி பக்கத்தில் விழுந்த என் கைபேசியை எடுத்தேன்.

கைகளில் ஒரு நடுக்கம் வர தயங்கவில்லை. பதற்றத்தோடு எனது கைப்பேசியை எடுத்தேன். நேராக என் கைவிரல்கள் குறுஞ்செய்தி பக்கம் சென்றது. நான் படிக்காத ஒரு புதிய செய்தி ஏற்கனவே திறக்கப்பட்டிருந்தது. படித்தேன் அவளிடமிருந்து தான். அய்யகோ..! பதறிப்போனேன். நேற்றிரவு பேசிய மற்ற குறுஞ்செய்திகளை அழித்துவிட்டு தூங்கினேனா என்ற பதற்றத்தோடு மற்ற செய்திகளை பார்த்தேன். எதுவும் அழிக்கப்படவில்லை...! அவளோடு பேசிய அந்த குறுஞ்செய்திகளை மறுமுறை படித்து பார்த்தேன். நவநாகரீக காதல் பேச்சுகளில் நாட்டம் கொள்ளாத எங்களின் பேச்சு இரு நண்பர்கின் பேச்சு போலவே இருந்தது ஆரம்பத்தில். மேலும் நான் குறுஞ்செய்திகளை படிக்க படிக்க திருமணம் பற்றியும் திருமணத்திற்கு பிறகு வீட்டினுள் வந்தபின்பு அவளின் பண்புகள் என் குடும்பத்தோடு எவ்வாறு ஒத்துபோகும் என்ற எனது விவரிப்பு வந்தது. ஒரு நிமிடம் என்னை நானே கடிந்துக…