2013 - என் வாழ்வின் ஒரு நிகழ்வு...!
இல்லை. இது நடந்திருக்க கூடாது. இது எப்படி நடந்தது? நான் எப்படி இப்படி அஜாக்கிரதையா இருந்தேன்.? இது நடக்கவே கூடாது. எப்படி நான் இப்படி? பதறிப்போய் தூக்கத்தில் கைகளில் இருந்து நழுவி என் சகோதரி பக்கத்தில் விழுந்த என் கைபேசியை எடுத்தேன்.

கைகளில் ஒரு நடுக்கம் வர தயங்கவில்லை. பதற்றத்தோடு எனது கைப்பேசியை எடுத்தேன். நேராக என் கைவிரல்கள் குறுஞ்செய்தி பக்கம் சென்றது. நான் படிக்காத ஒரு புதிய செய்தி ஏற்கனவே திறக்கப்பட்டிருந்தது. படித்தேன் அவளிடமிருந்து தான். அய்யகோ..! பதறிப்போனேன். நேற்றிரவு பேசிய மற்ற குறுஞ்செய்திகளை அழித்துவிட்டு தூங்கினேனா என்ற பதற்றத்தோடு மற்ற செய்திகளை பார்த்தேன். எதுவும் அழிக்கப்படவில்லை...! அவளோடு பேசிய அந்த குறுஞ்செய்திகளை மறுமுறை படித்து பார்த்தேன். நவநாகரீக காதல் பேச்சுகளில் நாட்டம் கொள்ளாத எங்களின் பேச்சு இரு நண்பர்கின் பேச்சு போலவே இருந்தது ஆரம்பத்தில். மேலும் நான் குறுஞ்செய்திகளை படிக்க படிக்க திருமணம் பற்றியும் திருமணத்திற்கு பிறகு வீட்டினுள் வந்தபின்பு அவளின் பண்புகள் என் குடும்பத்தோடு எவ்வாறு ஒத்துபோகும் என்ற எனது விவரிப்பு வந்தது. ஒரு நிமிடம் என்னை நானே கடிந்துகொண்டேன். அவசியமற்ற ஒரு இரவில், குறுஞ்செய்தியில் இந்த விளக்கங்கள் தேவைதானா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

இருந்த அனைத்து குறுஞ்செய்திகளையும் அழித்தேன். படுக்கையை விட்டு தலையை மட்டும் உயர்த்தி யார் யார் என்னென்ன செய்கிறார்கள் என்று பார்த்தேன். யாரும் இந்த விடயம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளவில்லை. தினசரி வேலைகளில் மூழ்கிபோயிருந்தனர். ஒருவேளை உண்மையில் அவர்கள் மொத்த செய்திகளையும் படித்திருக்க மாட்டார்களோ என்னும் யோசனையில் மெதுவாக எழுந்து அறையை விட்டு வெளியில் சென்றேன். 

கிளம்பும் வேலைகளில் மும்மரம் ஆனேன்.  எதிலும் கவனமற்று தெரிந்திருக்குமோ என்று யோசனையிலே கிளம்பினேன். ஆடைகளை உடுத்தி கிளம்பிய பின் நாம் வழக்கம் போல் இருப்போம் அவர்களின் பேச்சு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்று எண்ணி வழமை போல எனது கிண்டல் பேச்சுகளை ஆர்ம்பித்தேன். அம்மாவின் கண்கள் சரியில்லை... முகம் சிரித்தாலும் கண்கள் இல்லை. சகோதரி ஒரு மாதிரி மோசமான பார்வை பார்த்து சிரித்துவிட்டு சென்றாள். எனக்கு உள்ளுக்குள் உருத்திக்கொண்டே இருந்தது.

நான் வீட்டை விட்டு வெளியேறும் சமையத்தில் எனது அம்மா அழைத்தார். தனக்கு ஒரு மாதிரி இருப்பதாய் சொன்னார். என்ன என்றேன்..! நான் ஏதோ ஒரு பெண்ணோடு இருசக்கர வாகனத்தில் இருக்கி அணைத்துக்கொண்டு போவது போல அவருக்கு கனவு தோன்றியதாக சொன்னார். எனக்கு உள்ளுக்குள் சுருக்கென்றது.. அம்மா குறுஞ்செய்திகளை பாத்துவிட்டார் என்று தோன்றியது..! அதே சமயம் இக்கால காதலை பற்றி அம்மா மனதில் எவ்வளவு கொச்சையான எண்ணம் இருக்கிறது என்பதும் எனக்கு புரிந்தது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்னும் போக்குக்கு பதில் சொல்லிவிட்டு அவசரமாக வெளியே வந்தேன்.

வீட்டை விட்டு வெளியில் வந்தவுடன் அவளை கைப்பேசி மூலம் அழைத்தேன். மாட்டிக்கிட்டேன் என்று சொன்னேன். புரியவில்லை என்றாள். எனக்கு என் மேல் பழியை சுமத்திக்கொள்ள விருப்பமில்லை. அவள் காலையில் அனுப்பிய "Hi" என்னும் செய்தியால் என் சகோதரி அனைத்து செய்திகளையும் எடுத்து படித்துவிட்டார் என்று சொன்னேன். அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாங்கள் காதலிக்கும் விடயத்தை திருடன் போல மாட்டிக்கொள்ள நாங்கள் என்றும் விரும்பியதில்லை. நாங்களாய் சொல்ல வேண்டும் என்றே எண்ணி இருந்தோம். ஆனால், இப்பொழுது ஏதோ நாங்கள் தப்பு செய்து மாட்டிக்கொண்டார் போல் ஆகுமே என்று இருவருமே பயந்தோம். அவளுக்கு என்னோடு போட்டிபோட தெரியவில்லை கவனமாக கைப்பேசியை வைத்திருக்காதது என் தவறு இருப்பினும் நான் சொன்னவுடன் அதை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்கிறாள். உள்ளுக்குள் எனது கர்வத்தோடு நினைத்துக்கொள்கிறேன் அவள் கிடைக்க நான் என்ன செய்தேனோ என்று.

அன்று நாள் கடக்க கடக்க என்னை நானே தேற்றிக்கொண்டேன். யாரும் பாத்திருக்க மாட்டார்கள் என்று..! ஆனால் நான் வீட்டினுள் நுழைந்ததும் வினை எதிராக அமைந்தது.

கணிணி இருக்கும் அறைக்கு நான் செல்ல முற்படுகையில் அம்மா என்னை அழைத்தார். என்ன என்னும் கேள்வி முகத்தோடு உள்ளே ஒரு வித குற்ற உணர்வோடு சென்றேன். எனது கைப்பேசியை எடுக்க சொன்னார். ஏன் என்று கேட்டுக்கொண்டே எடுத்து கொடுத்தேன். குறுஞ்செய்தி இருக்கும் பக்கம் சென்று நேற்றைய செய்திகளை தேடினார். கிடைக்கவில்லை. எங்கே என்றார். அழித்திடுவேன் என்றேன். சிறிது நேரம் அமைதியாக இருந்து அழுதுகொண்டே 'ஏன் டா இப்படி பண்ணுன...? ஏன்...' என்று கேட்டார். பதறிப்போனேன். அம்மாவை அழ வைத்ததை நினைத்து வருந்தினேன். எனது பக்கத்து நியாயத்தை புரியவைக்க முயன்றேன். அம்மாவுக்கு புடிக்காது என்னும் ஒரே காரணம் நான் கூறிய அனைத்து காரணங்களையும் தாண்டி முன்னே நின்றது. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன்...!

நிறைய பேச நேர்ந்தது. அனைத்தின் முடிவும் அவளை மறக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எவ்வாறு அப்படி விட்டுவிட முடியும். பேசினேன்..! மீண்டும் பேசினேன். அப்பா ஊருக்கு சென்றிருந்தார். என்னையும் மூட்டை கட்டிக்கொண்டு ஊருக்கு கிளப்பினர். ஊரில் என்னை இரண்டு நாட்கள் உட்கார வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நான் எதற்கும் பிடிகொடுத்து பேசுவதாய் இல்லை.

இறுதியில் அப்பா, இன்னும் மூன்று வருடம் அவளிடமிருந்து விலகி இரு பார்க்கலாம் என்றார். நானும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டேன். அவரின் அவகாசம் நான் அவளை மறக்கவேண்டும் என்பதற்காக என்பதை நான் அறிவேன்.. ஆனால் அதை என்னால் நினைத்து கூட பார்க்க இயலாது என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். கூறிய மூன்று வருடத்தில் ஒரு வருடம் கடக்கிறது. இது அடுத்த வருடம்..! என் வாழ்க்கையில் என்னை நானாக நிலைநிறுத்தவும் என்னை வீட்டினர் முன்னர் குற்றவாளியாக முதல் முறை நிறுத்தியதற்கும் 2013 தன் தோளை தட்டிகொடுத்துக்கொள்ளலாம். மறக்கமுடியாத ஒரு நிகழ்வை செவ்வென நிகழ்த்தி டாடா காட்டிவிட்டு செல்கிறது...!

அவள் என்னோடு இருக்கிறாள். எப்பொழுதும் .. என்றும்...! 2014ல் மட்டுமல்ல.. இனிவரும் அனைத்து ஆண்டுகளிலும். இந்த நம்பிக்கையை எனக்கு ஊட்டி 2013க்கு நன்றி சொல்லி 2014ல் காலடி வைக்கிறேன்..! எனது குடும்பத்தோடு...! எனது நண்பர்களோடு...! எனது இனியவளோடு..!

-தம்பி கூரம்தியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!