ஒத்த மரத்து கள்ளு…!


ஒரு மரத்து கள்ளு ஒண்ணு
உயிருக்குள்ள கலந்திருக்கு
தேடி ஒழிக்குமுன்ன
குருதியிலும் இடம்புடிக்குது..

உசுரு மாய்க்க சொல்லுது
உசுர கொடுக்க வருகையில
சுத்தி விசிறியடிச்சு சுழலவிட்டுது
அந்த ஒத்த மரத்து கள்ளு...

கூட்டான் கூட்டாரையில
அமைதி காத்த கள்ளு...
பாத்து சிரிக்கையில
மௌனி சிரிச்ச கள்ளு...
கைய அணைக்கையில
நாணி நழுவிய கள்ளு...
உள்ள இழுக்கையில
நழுவி வந்த கள்ளு...
உள்ள போனதும்
சுழட்டு சுழட்டுதடா...
ராசா...
உட்டு சுழட்டு சுழட்டுதடா...

ஆட்டு அடிக்கையில
அள்ளி குடிக்கையில
எட்டி நகைச்சுதே கள்ளு...
அது வெட்க நகைப்புன்னு நினச்சேன்
இப்ப...
ஏளன சிரிப்புனு புடிபடுது...!

அடங்கி கட கள்ளே
என ஆட்டாதே கள்ளே
கெரங்கி போறேன் கள்ளே
என கவுக்காதே கள்ளே...!
கெஞ்சி பார்த்தனே
தினம் கொஞ்சி பார்த்தேனே..
அழுது பார்த்தேனே...
தினம் பொலம்பி பார்த்தேனே...
ஆட்டுதடா ஆட்டுதடா கள்ளு
ராசா...
என சுழட்டி சுழட்டி ஆட்டுதடா கள்ளு...


எதிர்காலம் தெரியுதடா ராசா...
அந்த ஒத்த பனமரத்து அடியில
காத்தடிக்கையில நழுவ துடிக்கிற
என் ஒத்த கோவணத்த புடிச்சுகிட்டு...
யாரட்டு.. எவரற்று..கள்ள நெனச்சுகிட்டே
கள்ளு போதையில
கெரங்கி கடக்க போறேன் ராசா...
நான் கெரங்கி தவிக்க போறேன் ராசா..

கள்ளான கள்ளிகிட்ட
காதோரம் போயி சொல்லிடடா ராசா..
மாமன் கள்ள(ளி) நெனச்சி
காலம் சாச்சுபுட்டானு
அந்த கண்ணழகிட்ட செத்த சொல்லிடு ராசா...

-தம்பி கூர்மதியன்

Comments

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!