Posts

Showing posts from July, 2014

விழித்துக் கொள்ளுங்கள் கட்சித் தொண்டர்களே...!

Image
இரண்டு நாட்கள் முன்னர் தமிழகம் முழுவதுமே ஒருவித பரபரப்புடனே இருந்தது. காரணம் என்ன என்று பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியும். மு.க.ஸ்டாலின் கைது என்ற அந்த பரபரப்பு செய்தி தேன் ஈக்கள் போல பரவ ஆங்காங்கே இருந்த தி.மு.க., ஆதரவாளர்கள் சாலை மறியல், கண்ணாடி உடைப்பு போன்ற அரும் பெரும் செயல்களை செய்து தமிழகத்தை பெருமைக்கு உள்ளாக்கினர்.
என்னதான் நடக்கிறது? இல்லை என்ன தான் நடந்தது? கடந்த ஜூலை 29.,ம் தேதி சமச்சீர் கல்வி அமலாக்கம் குறித்து பள்ளி புறக்கணிப்பு போராட்டம் நடத்த தி.மு.க., அனைத்து பள்ளி மாணவ, மாணவியரையும் அழைத்திருந்தது. ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்த இந்த போராட்டம் ஆடி காத்துல பத்த வச்ச தீக்குச்சு போல தொடங்கிய நெருப்பு புஸ்ஸெனபுஸ்வாணமானது.
இருந்தாலும் 5 வருடம் தமிழகத்தையே ஆட்டி படைத்த ஒரு கட்சி சார்பில் தொடங்கப்பட்ட போராட்டம் இந்த அளவிலே முடங்கிடுமா என்ன.? திருவாரூர் மாவட்டம் கொரடச்சேரி என்னும் இடத்தில் அரசு பள்ளியை மூட சொல்லியதால் பள்ளிக்கு விடுமுறை விட்டனர். இதை தொடர்ந்து மாணவர்கள் பஸ்ஸில் பயணித்து வீடுகளுக்கு செல்ல முற்பட்ட போது ஒரு பஸ் எதிரில் வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளான…

அதிகரிக்கும் மின்வெட்டு மின்சார பயன்பாடு பற்றிய ஒரு அலசல்!

Image
மின்சாரப் பற்றாக்குறை பற்றி விமர்சிக்காத மனிதர்கள் இருக்க முடியாது. ஒவ்வொரு  முறை மின் இணைப்பு போகும் போதெல்லாம் அரசினை குற்றம் சொல்லும் மக்களுக்கு தாங்களும் இந்த பாதிப்பிற்கு காரணமாணவர்கள் என்று தெரியாது.

மின்சாரப் பயன்பாடு பற்றி கூறும் இக்கட்டுரையை வாசித்து விட்டு ஒரு முடிவெடுங்கள், எப்படி எல்லாம் மின்சாரத்தை சேமிக்கலாம் என்று....

மின்சாரம்-இதை ஆற்காடு வீரசாமியிடம் போய் சொன்னால் அலறி அடித்து கூட ஓட செய்வார். போன ஆட்சியை ஆட்டி படைத்த ஒன்று இந்த மின்சாரம். இந்த முறை ஆட்சி மாற்றத்துக்கு ஒரு பெரும் பங்கு வகித்தது இந்த மின்சாரம் என்றும்  கூட சொல்லலாம். 

கடந்த ஆட்சியில் சென்னையை விடுத்து தமிழகத்தின் பிற பகுதி மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் இந்த மின்சாரமின்மை என்னும் கொடுமை. மின்சாரத்தை சேமிக்க நாம் சரியான வழிவகுக்கவில்லை என்பது இருந்தாலும் இந்த பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆட்டம் பெரும் ஆட்டமாகி போவது தான் இதற்கு காரணம் என்று சொல்லலாம்.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த ஒரு மெக்கானிக் ஒரு ஜெனரேட்டர் ஒன்று கண்டுபிடித்தார். அதாவது எரிப்பொருளே அற்று அது மின்சாரம் தயாரிக்க கூடியது. இதை பற…

கற்றுக் கொடுப்பவர்களே....! கற்றுக் கொள்ளுங்கள்..!

Image
தெளிவுகளை மணவர்களுக்கு போதிக்கிறேன் பேர்வழி என்று கல்வி நிறுவனங்களும் பெற்றோர்களும் தத்தம் விருப்பங்களை பிள்ளைகளின் தலைகளில் சுமத்துவது சரிதானா? கற்று கொடுக்கப்படும் மாணவர்களையே உற்று நோக்கும் சமுதாயத்தை கற்றுக் கொடுப்பவர்களையும் கவனியுங்கள் என்று உரக்க சப்தமிடும் இந்த கட்டுரையை வாசியுங்கள்...சப்தமில்லாமல் பல தெளிவுகள் உங்களுக்கு கிடைக்கும்...!


கல்வி.! இப்போது இந்த விடயத்தை பற்றி ஆரம்பித்தாலே சமச்சீர் கல்வியோ என்று பயந்து ஓடும் நிலை வந்துவிட்டது. சமச்சீர் கல்வியை பற்றி நாம் அவ்வளவு பார்த்துவிட்டோம். சமச்சீர் கல்வி சரி.! அதற்கு முன்னர்.!? நம் கல்வி முறை எல்லாம் சரியாக இருந்ததா.!? இப்போதும் சொல்வர் நம் நாட்டில் ஏட்டு கல்வி தான் செயல்முறை கல்வி அற்றது என்று....
ஏட்டு கல்வி என்ன பயக்கும்.!? உண்மையான புத்திசாலிதனத்தை மூடி மறைக்கும். உயர் கல்வி தரத்தை தாழ்த்தி சிரிக்கும். கல்வி ஒரு வியாபாரமாக மாறிவிட்டது. கற்றுவிப்பவன் நல்ல ஆசானாக மாறுவது எப்போ? என்றெல்லாம் நாம் புலம்பிய காலங்கள் பல.
இவ்வாறு புலம்புவர்களை சிந்தனைக் குறைப்பாடு உள்ளவர்கள் என்று கொள்ளலாம். ஒரு சராசரி இந்திய தாய்,தந்தை என்ன செய்…

விளையாட்டை அரசியலாக்கும் கேவலம்...... ஒரு விழிப்புணர்வு பார்வை....!

Image
அரசியலை விளையாட்டாய் ஆடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு விளையாட்டை அரசியலாய் மாற்றுவது எம்மாத்திரமாய் ஆகி விடப் போகிறது. 100 கோடிக்கும் மேல் மக்கள் வளம் கொண்ட ஒரு தேசத்தில் ஒலிம்பிக் விளையாட்டில் எத்தனை தங்கப் பதக்கங்கள் நம்மால் பெறப்படுகிறது? விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அதற்கேற்ற வசதிகளைச் செய்து கொடுக்காத அரசும், பணம் ஈட்டும் வழிகளில் மட்டும் கவனத்தை செலுத்தும் ஸ்பான்ஸர்களாலும், மிகைப்பட்ட பேர்கள் பொதுப்புத்தியில் ஊறிப் போன விளையாட்டாய் தலைமுறையாய் பார்த்து ரசிக்கா விட்டால் எங்கே தன்னை ஒதுக்கி விடுவார்களோ என்று நாகரீகத்துக்காக விளையாட்டினை பார்க்கும், பேசும் எம் இளையர்களும் இருக்கும் வரை எல்லா விதமான விளையாட்டுக்களும் எங்கணம் வளரும்.
கிரிக்கெட் என்னும் அசுரனால நிறைய லாபம் பார்த்த இந்திய வியாபரிகள் அதைக் கட்டிக் கொண்டு அழுவதின் விளைவு மற்ற விளையாட்டுக்களை நசுக்கித்தான் விட்டது என்று கோபப் பார்வை பார்க்கும் இந்தக் கட்டுரை சற்றே உங்கள் புருவங்களை உயர்த்தி விழிப்புணர்வு பார்வை கொள்க என்ற வேண்டு கோளையும் வைக்கிறது.விளையாட்டு என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொருளாதார வகையிலும் பெ…

அன்னா ஹசாரே....என்னும் சக்தி

Image
இந்தியாவில் புரட்சி வெடிக்கும் வெடிக்கும் என்னும் எதிர்பார்ப்பு சமீப காலமாக கூடிப்போய் உள்ளது. ஈழ பிரச்சனை தொடங்கி இப்போதைய சமச்சீர் கல்வி வரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் போராட்டத்துக்கு ஆயுத்தம் ஆகி விட்டனர்.!!! 
இந்த போராட்ட குணம் எங்கு கொண்டு போய் விடும்.? மக்களை எவ்வகையில் தூண்டிவிடும்.?சில காலங்களுக்கு முன்னர் பெருவாரியான  மக்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தியவர் அன்னா ஹசாரே! அவர் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறாரா இல்லை மக்களை இருளில் மூழ்க செய்கிறாரா? என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
ஊழலை எதிர்க்க லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்றும் அதற்கு அரசுக்கு ஒரு தனிமனிதனாக இருந்து நெருக்கடி தரவேண்டும் என்று யோசித்த அன்னா ஹசாரே திடீரென முளைத்த செடியாய் உண்ணாவிரதம் என்னும் விதை கொண்டு எழுந்தார். ஊழலை எதிர்த்து ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார், ஊழலை அழிக்க ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார் என்று ஒரு தெளிவான பின்புல காரணமற்றே மொட்டையாக
செய்திகள் பரவிற்று, மக்கள் என்னவென்று சரியாக புரிந்துகொள்ளாமல் நான்ஆதரிக்கிறேன் நான் ஆதரிக்கிறேன் என்று ஒன்றன் பின் ஒன்றாக கையை தூக்கிக்கொண்டு வர…